ஆயிரம் வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த, பல குற்றங்கள் புரிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை பற்றி தான் இந்த தொகுப்பில் கானவிருக்கிறோம்.

மக்களை ஏமாற்றி ஆயிரம் கோடிகளை பணம் கொள்ளை அடித்த பெண்மணி, சொந்த மகளையே தொடர்ந்து கற்பழித்த தந்தை, இராணுவ வீரர்கள் என பலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

இதுவரை சராசரியாக ஒரு சிறை கைதி அதிகபட்சமாக அனுபவித்த தண்டனை 60-70 ஆண்டுகள் தான். பலரும் தங்கள் ஆயுள் தண்டனை காலத்தின் பாதியிலேயே இறந்துவிடுவதும் உண்டு. நிஜத்தில் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தண்டனை அனுபவிப்பது சாத்தியம் இல்லை என்றாலும், நீதியரசர்கள் சிலர் இத்தகைய விசித்திர தண்டனைகள் அளித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாமோய் தீபியாசோ!

சாமோய் தீபியாசோ!

சாமோய் தீபியாசோ எனும் இந்த பெண் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு தான் 1989ம் ஆண்டு 141,078 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் பெயரில் கின்னஸ் சாதனை எல்லாம் இருக்கிறது. ஃபண்டு என கூறி, 16,000 தாய்லாந்து மக்களிடம் இருந்து 1300 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் சாமோய் தீபியாசோ. இத்தனை ஆண்டுகள் தண்டனை கொடுத்து என்ன பயன், இவர் இருபது ஆண்டுகள் கூட தண்டனையை அனுபவிக்கவில்லை. தண்டனை பெற்ற எட்டே ஆண்டுகளில் ரிலீசாகி வெளிவந்துவிட்டார்.

ரயில் குண்டு!

ரயில் குண்டு!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒட்டமன், ஜமால் மற்றும் எமிலியோ என்ற மூவரும் கடந்த 2004ல் ஒரு ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஒட்டமன், ஜமால் மற்றும் எமிலியோ மூவருக்கும் முறையே 42,924 ஆண்டுகள், 42,922 ஆண்டுகள் மற்றும் 34,715 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தார் ஸ்பெயின் நீதியரசர் . ஆனால், இந்நாட்டு சட்டத்தின்படி அதிகபட்சமாக ஒரு நபர் நாற்பது ஆன்டுகள் தான் சிறை தண்டனை அனுபவிக்க முடியும்.

சார்லஸ் ஸ்காட் ராபின்சன்

சார்லஸ் ஸ்காட் ராபின்சன்

அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் ஸ்காட் ராபின்சணுக்கு முப்பதாயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை வளங்கப்பட்டது. இவர் மீது தொடரப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்தாயிரம் ஆண்டுகள் வீதம் என மொத்தம் முப்பதாயிரம் ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.

ஆலன் வெய்ன் மெக்லாரின்

ஆலன் வெய்ன் மெக்லாரின்

ஆலன் வெய்ன் மெக்லாரின் மற்றும் டாரன் பென்னல்பார்ட் ஆண்டர்சன் இருவரும் சேர்ந்து பல பெண்களை கடத்தி, கற்பழித்து கொலை செய்துள்ளனர். ஆட்கடத்தல்களில் ஈடுப்பட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என பல வழக்குகளில் கைதானார்கள். இவர்கள் இருவருக்கும் முறையே 20,750 மற்றும் 11,250 ஆண்டுகள் சிறைத் தண்டனை வளங்கப்பட்டது. பிறகு, மேல்முறையீடு செய்த பின்னர் ஐநூறு ஆண்டுகளாக தண்டனைக் குறைக்கப்பட்டது.

குவாத்தமாலா

குவாத்தமாலா

குவாத்தமாலாவை சேர்ந்த ஐந்து இராணுவ வீரர்களுக்கு 1982ம் ஆண்டு நடந்த Dos Erres massacre எனும் படுகொலை சம்பவத்திற்கு காரணமாக இருந்ததற்காக 6,060 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில், கார்லஸ் அந்தோனியோ, டேனியல், ரேஸ் கொலின், மானுவல் போப், பெட்ரோ ரியோஸ் ஐந்து பேரும் இந்த தண்டனையை பெற்றனர். இந்த வழக்கு 2012ல் முடிவடைந்தது.

கொலைகள்!

கொலைகள்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஹென்றி, இன்ஸ் மற்றும் பிரான்சிஸ்கோ ஆகிய மூவர் 26 கொலைகள் மற்றும் 166 கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு 1978 - 1990 வரை நடந்தது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு முறையே 4797, 3828 மற்றும் 2442 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மோசஸ்!

மோசஸ்!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவன் இந்த மோசஸ். இவர் ஒரு சீரியல் கில்லார். ABC Murders என்பது இவன் செய்த சீரியல் கொலை வழக்கின் பெயர். இவன் 40 கற்பழிப்பு மற்றும் 38 கொலைகள் மற்றும் ஆறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தான். இவனுக்கு 1997ம் ஆண்டு, 2410 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஜோஸ் லூயிஸ்!

ஜோஸ் லூயிஸ்!

மெக்சிகோவை சேர்ந்தவன் இந்த ஜோஸ் லூயிஸ். இவன் 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்களாக பிராடு வேலைகளில் ஈடுபட்டு வந்தான். மெக்ஸிகோவிலேயே அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதி இவன் தான். இவனுக்கு 2012ம் ஆண்டு 2035 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

234 கற்பழிப்பு!

234 கற்பழிப்பு!

தாமஸ், இவர் அமெரிக்காவை சேர்ந்தவன். இவன் 234 கற்பழிப்பு வழக்கில் ஈடுபட்டதற்காகவும், குழந்தைகளை வைத்து பார்ன் வீடியோக்கள் எடுத்ததற்காகவும், பல டீனேஜ் பெண்களை கட்டாயப்படுத்தி நான்கு வருடங்கள் பார்ன் வீடியோ எடுத்து வந்த காரணத்திற்காகவும், வன்கொடுமை செய்ததற்காகவும் 2013ம் ஆண்டு 1870 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றான்.

ரேனே லோபஸ்!

ரேனே லோபஸ்!

நான்கு வருடங்களாக தனது சொந்த மகளையே தொடர்ந்து கற்பழித்து வந்த குற்றத்திற்காக ரேனே கைது செய்யப்பட்டான். மொத்தம் 186 முறை கற்பழித்ததாக குற்றம் பதிவானது. இதற்காக மொத்தம் 2016ம் ஆண்டு 1503 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pulse
English summary

Prisoners Sentenced to More Than 1,000 Years in Prison!

Prisoners Sentenced to More Than 1,000 Years in Prison!