கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கணும்னா இந்த நோன்பு இருங்க!

Written By: manimegalai
Subscribe to Boldsky

கணவரின் ஆயுள் நீடித்து, நலமோடு வளமோடு வாழ விரும்புவா ர்கள். அவர்களுக்கான மிகச்சிறந்த பதிவு இது.

poojas for husband health

மாங்கல்யத்தைக் காத்தருளும் மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை மாசி மாத இறுதி நாள் தொடங்கி, பங்குனி முதல் நாள்முடிவடைகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் பூஜை செய்து, மாசி மாத இறுதி நாள் மாலை தொடங்கி பங்குனி முதல் நாள் மாலை வரை இந்த பூஜை அனுசரிக்கப்படுகிறது. சுமங்கலிகள், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம் காக்கவும் அவர்களின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகவும் சாவித்திரி தேவி நோன்பு இருக்கப்படுகிறது.

சாவித்ரி விரதம்

சாவித்ரி விரதம்

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான். சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியான து நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காக சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வது வழக்கம். இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்மனுக்கு அணிவித்து, தாங்களும் கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிறை மாற்றிவிட்டு, புதிய அணிந்து கொள்வார்கள்.

நீராடல்

நீராடல்

பூஜை தொடங்கும் நாளின் அதிகாலையில் நீராடி பூஜையறையை சுத்தம் செய்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகிலேயே அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.

படையல்

படையல்

பூஜைகளின் போது வழக்கமாக வைக்கப்படும் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஆகியவற்றுடன் சேர்த்து பச்சரிசி மாவில் இனிப்பும் காராமணி பயறும் சேர்த்து செய்த அடையைப் படையலாக நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

தாலி மாற்றுதல்

தாலி மாற்றுதல்

பூஜை முடிந்ததும் கணவரை நோய் நொடியில்லாமல் பார்த்துக் கொள். நீண்ட ஆயுளை கொடு என்று வேண்டிக்கொண்டு, மஞ்சள் கயிறை கணவரின் கையாலேயே கையிலோ அல்லது கழுத்திலோ கட்டிவிடச் சொல்ல வேண்டும்.

நல்ல நேரம் பார்த்து பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர். நோன்பு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

pooja to women getting long for life their partner

pooja to women getting long for life their partner