For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் காணாத முதலாம் உலகப் போர் - கதை சொல்லும் படங்கள் #1

நாம் காணாத முதலாம் உலகப் போர் - கதை சொல்லும் படங்கள் #1

|

இன்று தினமும் நூற்றுக்கணக்கில் செல்ஃபியும், க்ரூஃபியும் எடுத்துத் தள்ளப்படுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தாங்கள் எழுந்ததில் இருந்து உறங்கும் வரை அந்நாளில் என்ன செய்தோம் என்று நிரம்பி வழிய செய்கிறார்கள்.

Photo Story: World War 1

நிச்சயம் இந்த தலைமுறைக்கு புகைப்படத்தின் அருமை மற்றும் அதன் மதிப்பு குறித்து அறிந்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவே. செல்ஃபியில் தங்கள் முகத்தையே பார்த்து பழகும், மகிழும் இவர்களுக்கு. சொந்தகள், நினைவுகளை ஒருமுறை நினைத்துப் பார்க்க பீரோவில், பரணில் வைக்கப்பட்டிருக்கும் பழைய ஆல்பங்களை தூசித்தட்டி எடுத்துப் பார்த்து மகிழும் தருணங்கள் அறியும் வாய்ப்பை ஸ்மார்ட் போன்கள் பிடிங்கிவிட்டன என்றே கூற வேண்டும்.

கதை சொல்லும் படங்களில்... இனி! தன்னுள் நிறைய தகவல்கள் மற்றும் வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் புகைப்படங்கள் குறித்து காணலாம்.

இன்று! முதலாம் உலகப்போரை தாங்கி நிற்கும் சில அரிய புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1918ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில், உலகப் போர் சமயத்தில், வெடிக் குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கு, வெடி குண்டு அகழிகளில் பதுங்கி இருக்கும் நர்ஸ் ஊழியர்கள்.

Image Source: Reddit

#2

#2

1918ம் ஆண்டு பாரிஸ் நகரில் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்துக் கொண்டு வெடிக் குண்டு தாக்குதலில் தங்கள் முகம் சிதைந்த காரணத்தால் மாஸ்க் அணிந்து வாழ்ந்து வந்த இராணுவ வீரர்கள்.

Image Source: Reddit

#3

#3

முதலாம் உலகப் போர் காலக்கட்டத்தில் 1917ம் ஆண்டு மூன்றாவது Battle of Ypres போர்களத்தில் விமான தாக்குதல் நடந்துக் கொண்டிருந்த சமயம். ஜேம்ஸ் பிரான்ஸிஸ் ஹார்லே என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Source: Reddit

#4

#4

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த சந்தோசத்தை தங்கள் தொப்பியை தூக்கி வீசிக் கொண்டாடி மகிழும் இராணுவ வீரர்கள்.

Image Source: Reddit

#5

#5

1915ம் ஆண்டு உலகப் போரில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன் கனடாவை சேர்ந்த ராயல் கனடியன் ட்ராகூன்ஸ் மேற்கு ப்லூர் ஸ்ட்ரீட் வீதியில் உலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Source: Reddit

#6

#6

1917ம் ஆண்டு போர்ச்சுகீசிய அதிரடிப் படை வீரர்கள் முதலாம் உலகப் போருக்கு தயாராகி தங்கள் உறவுகளை விட்டு பிரிந்து சென்றுக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Source: Reddit

#7

#7

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி இராணுவ தலைவர்கள் மார்ஷல் ஃபோச், பிரான்ஸ் நாட்டில் முதலாம் உலகப்போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தொடர் வண்டியில்...

Image Source: Reddit

#8

#8

1914ம் ஆண்டு பெல்ஜியமில் முதலாம் உல கப்போர் மனித நேய உதவி என்ற பெயரில், போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சென்ற குழு. அந்தக் காலக்கட்டத்தில் வரலாற்றில் இது மக்களால் எடுக்கப்பட்ட பெரும் முயற்சியாக இதுக் கருதப்பட்டது.

Image Source: Reddit

#9

#9

1917ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது, வெடிகுண்டு அகழியில் பதுங்கிய பிறகு,, அகழியில் கால்களுக்கு பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பு உபகரணங்களை மாட்டிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்.

Image Source: Reddit

#10

#10

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர், முதலாம் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் போலாந்து தனது விடுதலையை பெற்ற போது. ஜோசப் பிட்சுட்ஸ்கி என்பவர் போலாந்தின் தலைநகரான வார்ஸா (Warsaw) ரயில்வே நிலையத்தில் எடுத்த புகைப்படம்.

Image Source: Reddit

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photo Story: World War 1

Here we have shown some rare photo with its background history news. Which will amaze you. Take a look on it!
Story first published: Monday, November 12, 2018, 15:54 [IST]
Desktop Bottom Promotion