உலக வரலாற்றில் அழியா தடம் பதித்து சென்ற விசித்திரமான கொள்ளையர்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

கொள்ளையர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள், மிருக குணம் கொண்டவர்கள் என்று திரைப்படங்களில் இருந்து, புத்தகங்கள் வரை பலவாறு நாம் அறிந்துள்ளோம். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்வில் தப்பிக்க, தங்களை தற்காத்துக் கொள்ள எந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்துள்ளனர் என்பது பற்றி பெரிதாக நாம் அறிந்ததில்லை.

எப்படி சாதாரண மனிதர்களிடம் சில விசித்திரமான குணங்கள் இருக்கின்றனவோ, அதே போல தான் கொள்ளையர்களும். கொள்ளையர்கள் சிலரிடமும் விசித்திரமான சில குணாதிசயங்கள் இருந்துள்ளன.

முடி வளர்ச்சி அதிகரித்துக் கொள்ள பில்லி சூனியம் வைத்ததில் இருந்து, தனக்கு தானே பால்வினை நோய் தொற்று ஏற்படுத்துக் கொண்டது வரை சில கொள்ளையர்கள் தங்கள் பெயரை வரலாற்றில் கொஞ்சம் வித்தியாசமாக பதித்து சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சார்லி லூசியானோ

சார்லி லூசியானோ

சார்லி "லக்கி" லூசியானோ என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வந்த இந்த கொள்ளையன் முன்பே ஏற்பாடு செய்து குற்றம் செய்வதில் கிங் என்று புகழப்பட்டவன்.இவனை கைது செய்து சிறையில் அடைத்து, நாடு கடத்தியும் உள்ளனர்.

இவனை குறித்த பல்வேறு சுயசரிதை கதைகள் கூறப்படுகின்றன. ஆகையால், இவனது வாழ்க்கை வரலாறு கொஞ்சம் குழப்பமானதாக தான் இருக்கிறது.

Image Source: Wikimedia

பால்வினை நோய்!

பால்வினை நோய்!

அலங்கரிக்கப்பட்ட இவனது வாழ்க்கை வரலாறு தொகுப்புகளில் இவனை குறித்த பல உண்மைகள் கத்தரிக்கப்பட்டுள்ளன.

தனது 19வது வயதில், முதலாம் உலகப் போரின் போது பணத்தை ஏமாற்றி எடுத்து செல்ல, பால்வினை தொற்று நோயை தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டான் இவன். தனது இளம் சகோதரனின் உதவியுடன் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு விபாசார பெண்ணை அழைத்து வந்து அவருடன் உடலுறவு கொண்டு, தனக்கு பால்வினை நோய் ஏற்படுத்திக் கொண்டான்.

புக்ஸி சீகல்!

புக்ஸி சீகல்!

பெஞ்சமின் புக்ஸி சீகல் ஒரு கொள்ளையனை விடவும் மோசமானவன். இருபதாம் நூற்றாண்டில் பெரிதும் அறியப்பட்ட கொள்ளையர்களில் இவனும் ஒருவன்.

லாஸ் வேகாஸ் பகுதியில் வாழ்ந்து வந்த இவனை குறித்து பல சுயசரிதை கதைகள் இருக்கின்றன. இவனை குறித்த வீ ஒன்லி கில் ஈச் அதர் என்ற பயோகிரபி புத்தகமும் வெளியாகியுள்ளது.

Image Source: New York Police Department

பில்லி சூனியம்!

பில்லி சூனியம்!

சீகலுக்கு தனது தோற்றம் மீது பேரார்வம் இருந்தது. முக்கியமாக சிகை அலங்காரம் செய்துக் கொள்ள மிகவும் விரும்புவான். ஒருமுறை, வேறு ஒரு ஆணின் அழகான சிகையை தான் பொருத்திக் கொள்ள, அவன் கூந்தலை அறுத்து வந்து பில்லி சூனியம் செய்து ஒட்டவைக்க முயற்சித்தான் சீகல்.

சீகலின் முடி மெலிசாகிக் கொண்டே போனதன் காரணத்தால் தான் இப்படியான காரியத்தில் ஈடுப்பட்டிருக்கிறான். ஆனால், அவனது பில்லி சூனியம் ஒரு பைசாவிற்கு கூட பயனளிக்க வில்லை.

ஜான் டில்லின்கர்

ஜான் டில்லின்கர்

ஒரு விசித்திரமான கொள்ளையன் ஜான் டில்லின்கர். இவனை குறிக்கும் அனைத்தும் கதைகளும் இவன் ஒரு சிறந்த வங்கி கொள்ளையன் என்றே கூறப்படுகிறது. இவன் போலீசால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவன்.

ஆனால், கஸ்டடியில் இருக்கும் போது ஒரு மரத்தினாலான துப்பாக்கி பொம்மை கொண்டு இவன் தப்பித்து வந்தான் என்று கூறப்படுகிறது. சில கோப்புகளில் இவன் உருளைக்கிழங்கு கொண்டு துப்பாக்கி போல செய்து, காவலர்களை ஏமாற்றி தப்பித்து வந்தான் என்றும் கூறப்பட்டுள்ளன.

Image Source: Freebase/Public domain

கொள்ளையர்கள் மறுப்பு!

கொள்ளையர்கள் மறுப்பு!

இந்த சுவாரஸ்யமான கதை உண்மையானது தான். ஆனால், சிலர் மரபொம்மை என்றும், சிலர் உருளைக்கிழங்கு பொம்மை துப்பாக்கி என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், ஜான் டில்லின்கர் போன்ற பெரிய கொள்ளையர்கள், இது அவனை பெருமைப்படுத்த கூறப்படும் கட்டுக்காதை என்று கூறி இதை ஏற்க மறுக்கிறார்கள்.

அல் கபோன்

அல் கபோன்

வரலாற்றில் மிகவும் கொடிய கொள்ளையன் என்று கூறப்படும் ஆள் அல் கபோன். எவ்வளவு பெரிய திறமையான குற்றவாளியாக இருந்தாலும், அவன் செய்த தவறுக்கான எதிர்வினையை அனுபவிப்பான் என்று கூறுவார்கள்.

அல் கபோனும் அப்படி தான் ஒரு எதிர்வினையை அனுபவித்தான். ஒருமுறை தன்னை அறியாமல் இவன் தனது கவட்டையில் சுட்டுக் கொண்டான்.

எந்த ஒரு கொள்ளையனும் தனது வாழ்நாளை செய்திடாத தவறை செய்து பெரும் அசௌகரியத்திற்கு ஆளானான் அல் கபோன்.

Image Source: Miami Police Department

குறட்டை!

குறட்டை!

கொள்ளையன் அல் கபோனின் நண்பர்கள் இவனை குறட்டையாளன் என்று கூறி அழைத்து வந்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் பெரும் இடத்தை பெற்றிருந்த கொள்ளையன் இவன். தனது வாழ்நாளில் பல கொள்ளை வழக்குகளில் அடிப்பட்ட அல் கபோன், கொலை குற்றத்தில் ஈடுபட்டதே இல்லை எனப்படுகிறது.

Image Source: wikimedia

தழும்புகள்!

தழும்புகள்!

இவனை ஸ்கார்ஃபேஸ் என்றும் அழைக்கிறார்கள். இவன் முகத்தில் மூன்று கோடுகள் போன்ற தழும்பு இருக்குமாம். இந்த தழும்பு ஒருமுறை பார் ஒன்றில் பெண் ஒருத்தி தன்னை இகழ்ந்த காரணத்தால் ஏற்பட்ட சண்டையின் போது ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இவன் தனது உடை அலங்காரத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். பார்க்க ஒரு தொழிலதிபர் போன்ற தோற்றம் கொண்டிருப்பான்.

ஆர்னால்ட் ராத்ஸ்டெயின்

ஆர்னால்ட் ராத்ஸ்டெயின்

கொள்ளையர்கள் என்றாலே அவர்களுக்கு போதை பழக்கும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், தி பிரைன் என்று பலரால் அழைக்கப்பட்டு வந்த ஆர்னால்ட் ராத்ஸ்டெயின் தனது வாழ்நாளில் மது அருந்தியதே இல்லை.

Image Source: wikipedia

பால் பிரச்சனை!

பால் பிரச்சனை!

முன்னேற்பாடு செய்து செய்யும் குற்றங்களின் தந்தை என்று புகழப்படும் ஆர்னால்ட் ராத்ஸ்டெயின், 1919 உலக சீரீஸ் ஃபிக்ஸ் செய்தது தான் பெரிய குற்றம் என்று அறியப்படுகிறது.

மது மட்டுமல்ல, போதை பொருள், சிகரட் என்று ஆர்னால்ட் ராத்ஸ்டெயினுக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லை. மாறாக, தினமும் பெருமளவு பால் பருகும் வழக்கம் கொண்டிருந்தான். இதன் காரணத்தாலேயே இவனுக்கு தீராத வயிற்று கோளாறு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

 மூன்று வயதிலேயே..

மூன்று வயதிலேயே..

ஆர்னால்ட் ராத்ஸ்டெயின் தனது மூன்று வயதிலேயே தன் சகோதரனை கொலை செய்ய முயற்சித்தான் என்று அறியப்படுகிறது.

ஆர்னால்ட் ராத்ஸ்டெயின் குறித்து கூறப்படும் துணுக்கு கதைகள் ஒவ்வொன்றும் மிகவும் விசித்திரமானவை. குழந்தை வயதில் தனது சொந்த சகோதரன் மீதே பெரும் பொறாமை கொண்டிருந்த ஆர்னால்ட் ராத்ஸ்டெயின், அவனை கொலை செய்ய முயற்சித்துல்லான்.

அந்த கொலை முயற்ச்சியை அவனது தந்தை கண்டு தடுத்து நிறுத்தியுள்ளார். மறுமுறை தனது தந்தையின் கண் முன்னரே கத்தியால் குத்தி கொலை செய்யவும் முயற்சித்துள்ளான்.

Image Source: youtube

மேயர் லான்ஸ்கி

மேயர் லான்ஸ்கி

மேயர் லான்ஸ்கி மற்றொரு சீகல் என்று அழைக்கப்பட்டவன். ஒருமுறை கூட சிறைக்கு செல்லாதவன். இவனது 80வது வயது வரை அமெரிக்க காவலும், நீதி துறையும் இவனை விரட்டிக் கொண்டே தான் இருந்தது. தன்னை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த காரணத்தால் தான் மேயர் லான்ஸ்கி பிடப்படுவது கடினமானது.

ஆடம்பரம் இல்லாதவன், வசதியற்ற சிறிய இடமாக இருந்தாலும் கூட தங்கிக் கொள்வான்.

Image Source: Freebase/Public domain

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Bizarre Facts About Famous Gangsters!

Nine Bizarre Facts About Famous Gangsters!