For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குணமுள்ள பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நரகமாகும் என்று சாணக்கியர் கூறுகிறார்

வாழ்க்கையின் அனைத்து தேவைக்கும் அறிவுரை வழங்கிய சாணக்கியர், வாழ்க்கையின் முக்கிய பகுதியான திருமணத்திற்கு கூறாமல் இருப்பாரா?

|

உலகின் மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவராக கருதப்படுபவர் சாணக்கியர். வாழ்க்கையின் அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சரியான மற்றும் அவசியமான கருத்துக்களை தனது பல நூல்கள் மூலம் கூறியுள்ளார் சாணக்கியர். அவரின் புகழ்பெற்ற நூல்களில் முக்கியமானவை அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி ஆகும். உங்கள் வாழ்க்கையை வெற்றியின் பாதையில் சரியாக அழைத்துச்செல்ல இந்த இரண்டு புத்தகங்களே போதும்.

never marry these kind of women says Chanakya

வாழ்க்கையின் அனைத்து தேவைக்கும் அறிவுரை வழங்கிய சாணக்கியர், வாழ்க்கையின் முக்கிய பகுதியான திருமணத்திற்கு கூறாமல் இருப்பாரா? ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய திருமணமானது சரியாக அமையாவிட்டால் அவரின் வாழ்க்கையே நரகமாகிவிடும். ஏனெனில் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறுவார்கள். எனவே திருமணம் செய்யும்முன் தன்னுடைய வாழ்க்கைத்துணையாக வரப்போகிற பெண்ணை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இருக்கையில் சாணக்கியர் கூறுவது என்னவெனில் இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள கூடாது என்பதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகை விட மூளை முக்கியமானது

அழகை விட மூளை முக்கியமானது

பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவது அழகான பெண்களைத்தான். " அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்பது அனைத்து தருணங்களிலும் சரியாக இருக்காது. அழகான பெண் நம் வாழ்க்கையையும் அழகாக மாற்றுவாள் என ஒரு ஆண் நினைப்பான் எனில் அவன் ஏமாற்றம் அடையவே அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அழகான பெண்ணை காட்டிலும் அறிவான, குணமான பெண்ணே உங்களை வாழ்க்கையை அழகாக மாற்றுவாள். அதனால்தான் சாணக்கிய நீதி கூறுகிறது இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று.

குடும்ப பின்னணி

குடும்ப பின்னணி

சாணக்கியர் கூறுவது என்னவெனில் எந்தவொரு பெண் நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லையோ அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறார். அவள் எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல குடும்ப பின்னணி இல்லையெனில் திருமணம் செய்துகொள்ளகூடாது என்கிறார். அப்படிப்பட்ட பெண் எளிதில் குடும்பத்தை உடைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவளாக இருப்பாள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அக அழகு

அக அழகு

ஒரு பெண் வெளித்தோற்றத்திற்கு அழகாக இருந்தாலும் செயல் அளவில் முரட்டுத்தனமாகவும், அருவருக்கும்படியும் நடந்து கொண்டால் அநத பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஏனெனில் அந்த பெண் தான் விரும்பும் எதையும் தன் கணவனை செய்ய வைத்துவிடுவாள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

மோசமான இயல்பு

மோசமான இயல்பு

ஒரு அழகான பெண் மோசமான இயல்பை கொண்டிருந்தால் நிச்சயம் அவளை திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஏனெனில் அவள் தன் தேவைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்வாள், கணவனையும் செய்ய தூண்டுவாள். இப்படிப்பட்ட பெண் உங்களுக்கு வாழும்போதே நரகத்தை வழங்குவாள்.

MOST READ: இந்த ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்... கவனமாக இருக்க வேண்டிய ராசி எது?

பொய் கூறும் பெண்

பொய் கூறும் பெண்

பொய் கூறுவது மிகப்பெரிய குற்றமல்ல, ஆனால் பிறர் பாதிக்கும்படி பொய் கூறுவது நிச்சயம் மன்னிக்க முடியாத குற்றம்தான். அதிகம் பொய் கூறும் பெண் அதனை தன் கணவனுக்கு எதிராகவே பயன்படுத்துவாள். அப்படிப்பட்ட பெண்ணை ஒருபோதும் திருமணம் செய்துகொள்ள நினைக்காதீர்கள். ஏனெனில் அவளால் உங்கள் குடும்பமே நிலைகுலையும் நிலை ஏற்படலாம்.

விசுவாசமற்ற பெண்

விசுவாசமற்ற பெண்

எந்த ஒரு பெண் தன் குடும்பத்தின் மீது அன்பும், விசுவாசமும் இன்றி இருக்கிறாளோ அவள் தன் கணவனுக்கும் விசுவாசமாக இருக்க வாய்ப்பில்லை. அவள் எளிதில் தன் கணவருக்கு துரோகம் செய்யக்கூடியவள். அப்படிப்பட்ட பெண்ணை எப்போதும் திருமணம் செய்யாதீர்கள் என்று சாணக்கியர் தன் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

வீட்டு வேலை தெரியாத பெண்

வீட்டு வேலை தெரியாத பெண்

சாணக்கியரின் கருத்துப்படி எந்தவொரு பெண் வீட்டு வேலைகளை பற்றி அதிகம் தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருக்கிறாளோ அவள் திருமணம் செய்ய தகுதியற்றவள் ஆகிறாள் . இந்த கருத்து இன்றைய தலைமுறையில் பல விவாதங்களுக்கு உட்பட்டதுதான். எனினும் ஒரு பெண் குறைந்தபட்ச வீட்டு வேலைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது குடும்பத்தின் நிம்மதியை குலைக்கக்கூடும்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கையோ அல்லது பக்தியோ இல்லாத பெண்ணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கருத்துபடி, ஒரு பெண் நிச்சயம் சில நாட்கள் விரதமிருந்து கடவுளை வழிபடவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. இதுவும் பெரிய விவாதத்திற்குரிய ஒன்றுதான்.

MOST READ: இந்தியாவை பற்றிய வாய்பிளக்க வைக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள்

சந்தேகம்

சந்தேகம்

சந்தேகம் என்பது பெண்களின் பிறவி குணம் என்று கூறுவார்கள், அது உண்மையும் கூட. குறைந்தளவு சந்தேகமும், சின்ன பொறாமையும் அழகான உறவிற்கு முக்கியம்தான். ஆனால் அவை இரண்டும் எல்லை மீறும்போது அது உறவிற்குள் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு பெண் அதிக சந்தேக குணமும், குத்திக்காட்டி பேசும் பழக்கமும் உள்ளவளெனில் அவளை நிச்சயம் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

never marry these kind of women says Chanakya

Chanakya says that it is not important that women who look beautiful on the outside or inside. He suggests that men should not marry these kind of women.
Desktop Bottom Promotion