அதிக பந்துகள் பேட்டிங் செய்து டக் அவுட்டான டொக்கு மன்னர்கள் - டாப் 10!

Posted By:
Subscribe to Boldsky
Most Deliveries Faced for a Duck in Test Cricket!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

எப்போதும் போல வந்த வேகத்தில் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் ஸ்விங் பவுலிங்கில் கீப்பரிடம் கேச் கொடுத்து நடையைக்கட்டினார்கள்.

ஆனால், அதற்கு பிறகு கிரீசுக்கு வந்த புஜாரா மற்றும் கேப்டன் விராத் கோலி நிலையான, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதிலும், புஜாராவின் நிதானம் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பொறுமையை மிகவும் சோதித்தது. "நீ எப்படி வேணாலும் பந்து வீசி அட்டாக் பண்ணு... நான் அடிச்சா தான அவுட் பண்ணுவ..." என்பது பல நங்கூரம் போட்டது போல கிரீஸில் நின்றுக் கொண்டிருந்தார்.

தான் சந்தித்த முதல் ஐம்பது பந்துகளில் புஜாரா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இது என்ன புதிய சாதனையா என்ன சமூக வலைதளங்களில் பெரிய பேச்சு எழுந்தது.

ஆனால், இது சாதனை இல்லை என்பதே நிதர்சனம். நேற்றைய புஜாரவை காட்டிலும், நங்கூரத்தை ஆழமாக போட்டு கிரீஸில் நின்று பல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றியும், அவர்கள் செய்த சாதனை புள்ளி விவரங்கள் பற்றியுமே இந்த தொகுப்பில் நாம் கானவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லவேளை நடக்கல!

நல்லவேளை நடக்கல!

ஒருவேளை நேற்றைய போட்டியில் 54வது பந்து வரை ரன் அடிக்காமல் பேட்டிங் செய்து புஜாரா டக் அவுட்டாகி இருந்தால் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சோகமான சாதனை செய்திருப்பார். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

புஜாரா தனது முதல் ரன்னை ஸ்கோர் செய்ய 54 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதுபோல 1963ல்இங்கிலாந்தின் ஜான் முர்ரே என்ற வீரர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தனது முதல் ரன்னை ஸ்கோர் செய்ய 80 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதுவே உலக சாதனையாக இருந்து வருகிறது.

இனி, அதிக பந்துகள் எதிர்கொண்டு டக் அவுட் ஆனவர்கள் பற்றி பார்க்கலாம்....

ஜெஃப் அலோட்

ஜெஃப் அலோட்

நியூசிலாந்தை சேர்ந்த ஜெஃப் அலோட் எனும் வீரர் தான் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

1999ல் ஆக்லாந்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த போட்டியில் தான் ஜெஃப் அலோட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 101 நிமிடங்கள் கிரீஸில் நின்ற ஜெஃப் அலோட் ஒரு ரன் கூட அடிக்காமல் 77 பந்துகள் எதிர்கொண்டார்.

Image Source: rediff

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

2014ம் ஆண்டு லீட்ஸ்ல் இலங்கை அணிக்கு எதிராக நடந்த போட்டியில், தனது அணியை தோல்வியில் பிடியில் இருந்து காக்க மிகையாக போராடினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நான்காவது இன்னிங்ஸில் கடைசி பேட்ஸ்மேன் என்ற நிலையில் இறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், 81 நிமிடங்கள் கிரீஸில் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் 55 பந்துகளை எதிர்கொண்டார்.

ரிச்சர்ட் எலிசன்

ரிச்சர்ட் எலிசன்

இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் எலிசன்.

1984ல் மும்பையில் இந்தியாவிற்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்த போட்டியில், அந்த போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸ்ல் 50 நிமிடங்கள் கிரீஸில் நின்ற ரிச்சர்ட் எலிசன் ஒரு ரன் கூட அடிக்காமல் 52 பந்துகளை எதிர் கொண்டார்.

Image Source: cricketcountry

பீட்டர் சச்

பீட்டர் சச்

அடுத்தடுத்து இந்த சாதனை பட்டியலில் இங்கிலாந்து வீரர்களே இடத்தை நிரப்பியுள்ளனர். இதோ, அடுத்த நிலையில் இருப்பவர் பீட்டர் சச்.

இவர் 1999ல் மான்செஸ்டரில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில், முதல் இன்னிங்ஸ்ல் 72 நிமிடங்கள் கிரீஸில் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் 51 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார்.

Image Source: wikipedia

பால் ஷேஹான்

பால் ஷேஹான்

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் ஆஸ்திரேலிய வீரர் பால் ஷேஹான்.

பால் ஷேஹான் 1968ல் உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலனதுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸ்ல் 52 நிமிடங்கள் கிரீஸில் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் 44பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகியிருக்கிறார்.

Image Source: cricketcountry

வாசிம் பாரி

வாசிம் பாரி

பாகிஸ்தான் அணியை சேர்ந்த வசிம் பாரி 1980ல் இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸ்ல் 51 நிமிடங்கள் கிரீஸில் நின்று ஒரு ரன் கூற அடிக்காமல் 43 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகியிருக்கிறார்.

Image Source: youtube

மைக் விட்னி

மைக் விட்னி

இவர் 1981ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸ்ல் களமிறங்கி 38நிமிடங்கள் களத்தில் நின்று 42 பந்துகளை ஒரு ரன் கூட அடிக்காமல் எதிர்கொண்டு அவுட்டாகியுள்ளார்.

Image Source: news.com.au

ஷோயப் அக்தர்!

ஷோயப் அக்தர்!

கிரிக்கெட் உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற புகழ்பெற்ற வீரர் ஷோயப் அக்தர்.

இவர் கடந்த 2000ம் ஆண்டு கராச்சியில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ்ல் 45 நிமிடங்கள் களத்தில் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் 42 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆகியுள்ளார்.

மஞ்சுரல் இஸ்லாம்

மஞ்சுரல் இஸ்லாம்

வங்காள தேச அணியை சேர்ந்த மஞ்சுரல் இஸ்லாம் எனும் வீரர் கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கொழும்புவில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 72 நிமிடங்கள் கிரீஸில் நின்று 41 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார்.

Image Source: wikipedia

கீத் ஆர்தர்டன்

கீத் ஆர்தர்டன்

கீத் ஆர்தர்டன் மேற்கு இந்திய அணியை சேர்ந்தவர்.

இவர் கடந்த 1995ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸ்ல் 49 நிமிடங்கள் களத்தில் நின்று 40 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி, இந்த துயரமான சாதனை பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Image Source: youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Deliveries Faced for a Duck in Test Cricket!

Most Deliveries Faced for a Duck in Test Cricket!
Story first published: Thursday, January 25, 2018, 14:39 [IST]
Subscribe Newsletter