For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

  |

  2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஜூன் மாத தனுசு ராசி பலன்கள்

  ஜூன் மாத தனுசு ராசி பலன்கள்

  நவம்பர் 22 முதல் டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் இந்த ராசியின் சொந்தக்காரர்களாக விளங்குவர். இவர்கள் இயற்கையாகவே சுதந்திரமான நபராகவும், அநியாயத்துக்கு நேர்மையான நபராகவும், வலுவான கருத்துகளை பிரதிபலிக்கும் நபராகவும் விளங்குபவர்கள் இவர்கள். தனிப்பட்ட சுதந்திரத்தில் உறுதியாக இருக்கும் இவர்களுக்கு சில சமயங்களில் உறவுகளில் முரண்பாடுகள் ஏற்படும்.

  சரி வாங்க இந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உங்களுக்கு எந்த மாதிரியான அணுகூலன்களை வழங்கப் போகிறது என்பதை பார்க்கலாம். உங்கள் உடல் நலம், பொருளாதாரம், தொழில் ஏன் உங்கள் காதல் வாழ்க்கை கூட எப்படி இருக்கப் போகிறது அதைப் பொருத்து நீங்கள் எந்த மாதிரி செயல்படலாம் என்ற ஒரு எதிர்கால பார்வைக்கு நாங்கள் கூட்டிச் செல்லப் போகிறோம். இதைப் பொருத்து உங்கள் வாய்ப்புகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிக் கனிகளை ஈட்டலாம்.

  உடல் நலம்

  உடல் நலம்

  இந்த மாதம் உடல் நலத்தை பொருத்த வரை பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி வரை உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. இறுதியில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இருப்பினும் சின்னஞ் சின்ன உடல் உபாதைகளையும் முன்னெச்சரிக்கையுடன் கவனிப்பது நல்லது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து வருவது நிலைமை மோசமாவதை தடுக்கும். மருந்துகளை எடுத்துக் கொள்ள தவற வேண்டாம். இதனுடன் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயல்வது கூடுதல் நன்மை பயக்கும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த மாதம் உடல் நலத்திற்கு அணுகூலமாக அமையவில்லை. கொஞ்சம் ஓய்வில் இருப்பது நல்லது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் செலவழிப்பது உங்கள் மனதையும் உடலையும் உற்சாகமாக வைக்க உதவும். அதே நேரத்தில் குடும்பத்தில் சந்தோஷம் நிலவவும் வாய்ப்பாக அமையும். பொதுவாக நீண்ட நாள் உடல் நல பிரச்சினை அல்லது நாள்பட்ட பிரச்சினை உங்களை ஆட்டிப் படைக்க முயலலாம்.

  தொழில்

  தொழில்

  இந்த மாதம் தொழில் ரீதியாக பார்க்கும் போது கண்டிப்பாக இது சாதகமான மாதமாக அமையப் போகிறது. உங்கள் வேலையில் மற்றும் பணியிடங்களில் ஒரு திருப்தியையும் நேர்மறை எண்ணங்களையும் உணர்வீர்கள். எந்த வேலைச் சுமையும் இல்லாமல் சந்தோஷமாக வேலை நாட்களை கழிப்பீர்கள். தெற்கு நோக்கிய பயணம் தொழில் ரீதியாக அணுகூலத்தை அள்ளிக் கொடுக்கும். தொழிலை விரிவடையச் செய்வதோடு தொழில் ரீதியாக புது புது பழக்கங்களும் தொடர்புகளும் கிடைக்கும். சிறிய தடைகள் முன்னின்றாலும் துட்சமாக மறைந்து விடும். அமைதியாக நிதானமாக செயல்பட்டாலே போதும் தடைகளை எளிதாக தாண்டி விடுவீர்கள். 17 ஆம் தேதி வரை உங்கள் ராசி கோள் புதன் தொழில் ரீதியாக பயனளிக்கப் போவதில்லை. இருப்பினும் நீங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் துணிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வேலை தேடும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். நினைச்ச வேலை கிடைச்சு அதில் உங்கள் கால் பதிப்பீர்கள்.

  பொருளாதாரம்

  பொருளாதாரம்

  உங்கள் ராசிப்படி இந்த ஜூன் மாதம் பொருளாதார ரீதியாக சற்று அணுகூலன்கள் காணப்படும்.இந்த மாதம் உங்கள் பொருளாதார ரீதியான இலட்சியங்களை அடைய போராடுவீர்கள். எனவே முற்போக்காக கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து செயல்படுவது நிலைமை மோசாமாவதை தடுக்கும். நீங்கள் கலை சம்பந்தமான வேலையை துவக்க முயன்றால் அதற்கு இது சரியான மாதம் கிடையாது. நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முயன்றால் மறுபரிசீலனை செய்து செயல்படுவது நல்லது. குறைந்த அளவு பண வரவு வரும். எனவே நிதி நிலையை சரி செய்ய சேமித்து செயல்படுங்கள். நிதி நெருக்கடி இல்லாமல் செயல்படலாம்.

  காதல் வாழ்க்கை

  காதல் வாழ்க்கை

  இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை நீங்கள் எதிர்ப்பார்த்ததை விட சற்று வித்தியாசமாக அமையும். ஒரு சுதந்திர தனிமை பயணம் மேற்கொண்டு உங்களை நீங்களே காதலிக்கத் துவங்குவீர்கள். இந்த பயணம் உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கும் உங்களுக்கு பொருத்தமான ஒரு துணையை தேர்ந்தெடுக்கவும் வழி வகை செய்யும். உங்கள் துணையுடன் அவசரமான காரசாரமான வீண் பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் கொஞ்சம் கவனிப்புடன் செயல்படுவது நல்லது. நீங்கள் ஏற்கனவே திருமண பந்தத்தில் இணைந்து இருந்தால் உங்கள் துணையுடனான நெருக்கம் அதிகமாகும். இந்த மாதத்தை பொருத்த வரை உங்கள் திருமண வாழ்க்கையில் சச்சரவுகளும் பிரிவுகளும் சற்று அதிகரிக்கும். எனவே சரியான திட்டமிடுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டால் சுமூகமாக அமையும். உங்கள் காதல் வாழ்க்கை அழகாக அமைய நீங்கள் பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பது அவசியம். காதல் வாழ்வும் சிறக்கும்.

  இந்த மாத அதிர்ஷ்டம்

  இந்த மாத அதிர்ஷ்டம்

  அதிர்ஷ்டமான எண்கள் : 4, 6மற்றும் 15

  அதிர்ஷ்டமான நிறங்கள் : பிங்க், சிவப்பு, அடர்ந்த ஊதா மற்றும் ஊதா நிறங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Monthly Predictions Of Sagittarius For June 2018

  As a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more