Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனின் உயிரை பிரியவிடாமல் தடுத்த அந்த மூன்று கேள்விகள்
இந்தியாவின் அசைக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று மகாபாரதம். பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடந்த இந்த மாபெரும் போரின் இறுதியில் அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைநிறுத்தப்பட்டது. அதற்கு இருதரப்பினரும் எண்ணிலடங்கா உயிர்களை பலிகொடுத்தனர். மகாபாரதத்தில் இருந்த ஒவ்வொருவரும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை உணர்த்துகிறார்கள்.
மகாபாரத போருக்கு பலர் காரணமாக இருந்தாலும் அதில் முக்கிய காரணம் துரியோதனன்தான். துரியோதனன். துரியோதனனின் அகம்பாவமும், அரியணை மீது அவன் கொண்டிருந்த மோகமுமே பாரத போர் என்னும் பேரழிவிற்கு காரணமாய் அமைந்தது. மகாபாரதத்தில் பலரும் அறியாத ஒரு செய்தி ஒன்று உள்ளது.அது என்னவெனில் மரணப்படுக்கையில் இருந்த துரியோதனனுக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்தான் அது. அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

போரின் இறுதிநாள்
மகாபாரத போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் பாண்டவர்களின் தரப்பில் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தது, கௌரவர் தரப்பிலும் அனைத்து மாவீரர்களும் இறந்திருக்க இறுதியில் சல்லியனை சேனாதிபதியாக கொண்டு கௌரவப்படை போரை தொடங்கியது. மாவீரர்கள் யாரும் இல்லாததால் பாண்டவர்களின் தொடக்கத்தில் இருந்தே மேலோங்கியது.

வஜ்ர தேகம்
காந்தாரி தன் ஒரு புதல்வனாவது உயோரோடு இருக்க வேண்டுமென தன் தவபலத்தால் துரியோதனனின் தேகத்தை வஜ்ரமாக மாற்றினார். உடல் வஜ்ரமாகிய ஆணவத்தில் துரியோதனன் போரில் பாண்டவர்களை வதைக்க சென்றான். அதேசமயம் போரில் சல்லியன் தர்மனால் வதைக்கப்பட்டார். இறுதியில் கௌரவ சேனையில் மிஞ்சியிருந்தவர்கள் துரியோதனனும், அசுவத்தாமனும்தான்.

பீமன் - துரியோதனன் கதாயுத்தம்
துரியோதனன் உடல் வஜ்ரமாக மாறியதால் அவன் மீது நடத்திய எந்த தாக்குதலும் அவன் மீது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அர்ஜுனனின் அம்புகளால் கூட துரியோதனனை தடுக்க இயலவில்லை. இறுதியில் பீமனும், துரியோதனனும் கதாயுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் பீமனின் யானைப்பலம் கூட துரியோதனின் வஜ்ரதேகத்தை எதுவும் செய்ய இயலவில்லை. கிட்டதட்ட துரியோதனன் பீமனை வதைக்க துணிய அவனை திசைதிருப்ப சகுனியின் மீது பாண்டவர்களின் பார்வை திரும்பியது. தான் எடுத்த சபதத்தின் படி சகாதேவன் சகுனியை வதைத்தான்.
MOST READ: முதல்லயே அவன் தம்பின்னு தெரிஞ்சிருந்தா, காதலிக்காம இருந்திருப்பேன்... - My Story #318

துரியோதனன் வீழ்ச்சி
சகுனியின் மறைவால் நிலைகுலைந்த துரியோதனன் பீமனை வதைக்க மீண்டும் போர்க்களத்திற்கு சென்றான். உடல் முழுவதும் வஜ்ரமாகியிருந்தாலும் இடுப்பிற்கு கீழ்ப்பகுதி வஜ்ரமாக மாறவில்லை. அதற்கு காரணம் கிருஷ்ணரின் லீலைதான். மேலும் பீமன் துரியோதனனை தொடைப்பிளந்து கொள்வேன் என்று எடுத்த சபதத்தால் யுத்த நெறியை மீறி துரியோதனின் தொடையை கதாயுதத்தால் தாக்கினான். இதை சற்றும் எதிர்பாராத துரியோதனன் மண்ணில் வீழ்ந்தான். அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது.

மரணப்படுக்கையில் துரியோதனன்
தொடைப்பிளக்க பட்டு குருதி வழிந்தோட தன் உயிர் பிரிவதை தன் கண்ணாலேயே பார்த்துக்கொண்டு மரணப்படுக்கையில் நரகவேதனையில் கிடந்தான். ஆனால் துரியோதனன் உயிர் அவனை விட்டு பிரியவில்லை காரணம் அவனின் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள்தான். அவனால் பேச இயலாத சூழ்நிலையில் தன் மூன்று விரல்களை மேல்நோக்கி உயர்த்தினான்.

துரியோதனனின் கேள்விகள்
துரியோதனன் உயிரை பிரியவிடாமல் வைத்திருந்த அந்த கேள்விகளை கிருஷ்ணர் அறிந்தார். அந்த கேள்விகள் என்னவெனில் போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தை சுற்றி ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால் என்ன செய்திருப்பாய், துரோணாச்சாரியாரின் மறைவிற்கு பிறகு அசுவத்தாமனை சேனாதிபதியாக்கி இருந்தால் என்ன செய்திருப்பாய், விதுரனை போர் புரிய வைத்திருந்தால் என்ன செய்திருப்பாய் என்ற கேள்விகள்தான் அது.

கிருஷ்ணரின் கருணை
துரியோதனனின் சஞ்சலத்தை அறிந்த கிருஷ்ணர் அறிந்தார். அனைத்தும் அறிந்த கிருஷ்ணருக்கு துரியோதனனின் குழப்பத்தை அறிவது சிரமமா என்ன?. எவ்வளவுதான் துரியோதனன் கெட்டவனாய் இருந்தாலும் அவன் படும் துயரத்தை கிருஷ்ணரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எனவே அவனின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்வந்தார்.
MOST READ: தேய்பிறை தொடங்கிடுச்சு... இனி எந்தெந்த ராசிக்கு பணவரவு,.. யார் யாருக்கு பணம் தேய்வு

கிருஷ்ணரின் பதில்கள்
துரியோதனன் அருகில் வந்த கிருஷ்ணர் அவனை கருணையுடன் பார்த்து அவனின் கைகளை ஆதரவாய் பற்றி துரியோதனா உனது கேள்விகளுக்கான பதில்கள் இதுதான் என்று கூறி பேசத்தொடங்கினார். ஒருவேளை நீ அஸ்தினாபுரத்தை சுற்றி கோட்டை எழுப்ப முயன்றிருந்தால் நான் நகுலனை அஸ்தினாபுரத்திற்கு அனுப்பியிருப்பேன்.

நகுலனின் திறமை
பாண்டவர்களில் ஒருவரான நகுலனை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. நகுலன் அளவிற்கு குதிரை ஓட்ட எவராலும் இயலாது. மழைபெய்யும்போது ஒரு துளி விழுந்து அடுத்த துளி விழுவதற்குள் நனையாமல் நகரும் அளவிற்கு வேகமாய் குதிரையை ஓட்டும் அளவிற்கு திறமையானவன் நகுலன். ஒருவேளை துரியோதனன் அஸ்தினாபுரத்தை சுற்றி கோட்டை எழுப்ப முயற்சி செய்திருந்தால் கிருஷ்ணர் நகுலனை அஸ்தினாபுரம் நோக்கி அனுப்பி அந்த கோட்டையை தகர்த்திருப்பேன் என்று கூறினார்.

மற்ற கேள்விகள்
அசுவத்தாமன் ஒருவேளை சேனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தால் நான் தர்மரை கோபப்பட வைத்திருப்பேன் என்று கூறினார். ஏனெனில் தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய மாவீரனையும் எரித்து சாம்பலாக்கிவிடும். மூன்றாவது கேள்விக்கு கிருஷ்ணர் கூறிய பதில் என்னவெனில் ஒருவேளை விதுரர் போர் புரிய தொடங்கியிருந்தால் நான் ஆயுதம் ஏந்தி போர் புரிய தொடங்கியிருப்பேன் என்றார் கிருஷ்ணர்.

துரியோதனன் மரணம்
துரியோதனன் தான் மனதிலிருந்த கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்களால் நிம்மதியுற்றான். தன் மனசஞ்சலங்கள் நீங்கிய மகிழ்ச்சியில் தன் உயிர் நீத்து வீரசொர்க்கம் நோக்கி சென்றான்.
MOST READ: நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கும் இந்த டயட்தான் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கிறது