For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஓடும் பேருந்தில் ஆபாசப்பட நடிகர், நடிகைகளின் படங்கள்... கேரளாவில் பரபரப்பு!

  |

  கேரளா அரசியலிலும் சரி, கல்வியிலும் சரி... அதிகப்படியான அறிவும், பேரார்வமும் கொண்டிருப்பவர்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் சரியான கல்வியை அளிக்கவே, சரியாக தேர்வுகளை நடத்தவே தடுமாறிக் கொண்டிருக்கும் சமயத்தில். அனைவர்க்கும் படிக்க தெரியும் என்ற நிலையை உண்டாக்கிய அசத்தல் மாநிலம் கேரளம்.

  இயற்கையின் அரசி, கடவுளின் தேசம் என்று போற்றப்படும் அழகான மாநிலமும் கேரளா. கேரளா என்றாலே நினைவுக்கு வருவது அவர்களது அழகும், அறிவும், ஆரோக்கியமும், பாரம்பரியமும் தான். அறிவுக்கு பெயர்போன கேரளாவில் தான் ஒரே ஒரு பேருந்தினால் ஒட்டுமொத்த மாநிலமும் தலைகுனியும் நிலை உண்டாகி இருக்கிறது.

  ஆனால், சிலர் இதை கேலியாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டு மாஸ்டர் பீஸ், இம்ப்ரஷிவ் என்று கூறியும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள். மறுபுறம் சிலர் இது மோசமான செயல் என்று கூறியும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பெயிண்டிங்!

  பெயிண்டிங்!

  நம் ஊர்களில் தனியார் பேருந்துகள் கொஞ்சம் கூடுதல் அலங்காரங்கள் கொண்டு தான் சாலையில் ஓடிக் கொண்டிருக்கிருக்கும். பேருந்து முழுக்க ஜொலிஜொலிக்கும் சிறுசிறு அலங்கார விளக்குகளில் ஆரம்பித்து, பேருந்தின் மூன்று புறமும் அந்த மாநிலத்தின் பிரபல நடிகர் நடிகைகள் படங்களை பெயிண்ட் செய்து வைத்திருப்பார்கள்.

  பிரபலம்!

  பிரபலம்!

  தனியார் பேருந்துகளில் நடிகர், நடிகைகளின் முகத்தை பெயிண்டிங் செய்வது என்பது நம் நாட்டில் காணப்படும் பிரபலமான விஷயம். நடிகர், நடிகைகள் என்பதை தாண்டி, குழந்தைகள், கொரியன், ஜப்பான் பெண்களின் முகங்களும் கூட சில பேருந்துகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.

  ஆனால், குழந்தைகள் முதல் முதியர்வர்கள் வரை அனைவரும் பயணிக்கும் பேருந்தில் ஆபாச படத்தில் நடிக்கும் நடிகர்களின் படத்தை வரைந்து வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.

  கௌரவம்!

  கௌரவம்!

  ஓரிரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் ஒரு கேரள பேருந்தின் புகைப்படம் பலரால் பகிரப்பட்டது. அந்த புகைப்படம் வைரலாக பரவியது என்பதை காட்டிலும், அத்துடன் சேர்ந்து கேரள மாநிலத்தின் கௌரவமும் கொஞ்சம் மோசமாக சிலரது கருத்துகளில் பதிவானது. இதற்கு காரணம் அந்த பேருந்தின் இருபுறங்களிலும் பெயிண்டிங் செய்யப்பட்டிருந்த பிரபலங்களின் புகைப்படங்கள்.

  ஆபாசம்!

  ஆபாசம்!

  சன்னி லியோன், ஜானி சின்ஸ், மியா கலீஃபா போன்ற ஆபாசப்பட நடிகர், நடிகைளின் படங்கள் தான் அந்த பேருந்தில் இடம் பெற்றிருந்தன. இந்தியாவிலேயே படிப்பறிவு விகிதத்தில் முதல் இடத்தை தக்கவைத்திருக்கும் கேரள மாநிலத்திலா இப்படி ஒரு செயல் நடந்திருக்கிறது என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

  பொதுவிடத்தில் யாராவது இதை பற்றி பேசினாலே அதட்டி விரட்டும் ஊரில், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில் இப்படி ஒரு செயலா என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

  Image Source: Twitter

  சன்னியின் பிரபலம்!

  சன்னியின் பிரபலம்!

  கடந்த வருடம் ஒரு மொபைல் கடை திறப்பு விழாவில் சன்னி லியோன் பங்கெடுத்துக் கொண்ட போது கூட்டம் கடலென திரண்டது. அவரை காண பெரும் ரசிகர் கூட்டம் வந்திருந்தது. அந்த விழாவின் போது பேசிய சன்னி லியோன், வாய்ப்பு கிடைத்தால் மலையாள திரைப்படங்களில் நடிப்பேன். கேரளா எனக்கு பிடித்தமான ஊர்களில் ஒன்று, இது கடவுளின் தேசம். மிக அழகான இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பேசி சென்றார்.

  இதில் வியப்பு என்னவெனில், அதே காலக்கட்டத்தில் கேரளாவுக்கு வருகை புரிந்த பா.ஜ.க கட்சி தலைவர் அமித் ஷாவுக்கு கூட அத்தனை பெரும் கூட்டம் கூடவில்லை. இந்த செய்தி வலைதளங்களில் பெரியளவில் வைரலாக பரப்பட்டன.

  ஆரம்பம் முதலே!

  ஆரம்பம் முதலே!

  திரைப்படம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, கேரள படங்கள் குறைந்த அளவில் வெளியானாலும், நல்ல கதையம்சம் கொண்டிருக்கும், உருவாக்கும் சிறப்பாக இருக்கும்.

  ஆனால், 80,90களில் ஆபாச படங்களின் உலகமாகவும் மலையாளம் திகழந்தது. மம்மூட்டி, மோகன்லாலுக்கு இணையாக ஷகீலாவின் படங்கள் ஓடின. எனவே, கேரளாவில் இப்படி ஆபாசப்பட நடிகர்களின் படங்களை பேருந்தில் பெயிண்டிங் செய்வதெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் சிலர் கருத்து பதிவு செய்துள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Kerala Bus Has Painted With Adult Star Pics Are Gone Viral on Twitter!

  This Kerala bus has left Twitterati in splits as it has stars like Sunny Leone and Mia Khalifa on it. The images are painted on a private bus of Chikkoos Tours and Travels from Trivandrum.
  Story first published: Wednesday, July 4, 2018, 13:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more