For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்!

கருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அழிக்க முடியாத அடையாளம்!

|

கலைஞர் கருணாநிதி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது உதய சூரியன், மஞ்சள் துண்டு மற்றும் அவரது கருப்பு கண்ணாடி. உதய சூரியனும், மஞ்சள் துண்டும் ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் இருந்தது. ஆனால், கருப்பு கண்ணாடி அவருடன் பாதியில் தான் இணைந்துக் கொண்டது.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி என்று. துன்பம் / சோகம் எப்போதும் தனித்து வருவதில்லை. அவசியம் சேர்ந்து வரும் என்பதை குறிக்கும் பழமொழி தான் இது. இந்த பழமொழி கருணாநிதிக்கும் பொருந்தியது. ஆம்! கலைஞர் கருணாநிதியின் எழுத்தின் தெளிவை போலவே, கண் பார்வையும் சிறந்து இருந்தது.

ஆனால், எதிர்பாராத விபத்து காரணமாக கருணாநிதி அவர்களது கண் பார்வை பாதிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார் விபத்து!

கார் விபத்து!

1953ம் வருடம், திருப்பத்தூரில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது எதிர்பாராமல் நடந்த கார் விபத்து காரணமாக அவரது இடது கண்ணில் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த சில விபத்துக்கள் போதும் அதே கண்ணில் மீண்டும், மீண்டும் அடிப்பட அவரது இடது கண் பார்வை மிகவும் பாதிக்கப்பட்டது.

கண்ணாடி!

கண்ணாடி!

இப்படியான தொடர் விபத்து மற்றும் எதிர்பாராமல் இடது கண்ணில் அடிப்பட்டது போன்றவற்றால் கருணாநிதி அவர்களுக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1971ம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பிறகே கருணாநிதி அவர்கள் கருப்பு கண்ணாடி தொடர்ந்து அணிய ஆரம்பித்தார்.

அடையாளம்!

அடையாளம்!

பெரியாருக்கு தடி, அண்ணாவுக்கு கை அசைவு, எம்ஜிஆருக்கு தொப்பி என்பது போல கருணாநிதி அவர்களுக்கு அந்த கருப்பு கண்ணாடி ஒரு பெரும் அடையாளமாக மாறிவிட்டது. ஒருவகையில் கருப்பு கண்ணாடி அவருக்கான மரியாதை சின்னமாகவும், கம்பீரமான தோற்றமாகவும் அமைந்தது என்று கூறலாம்.

எளிது!

எளிது!

பிற தேசிய, அரசியல் தலைவர்களை வரைவதை காட்டிலும் இவரது படத்தை வரைவது மிகவும் எளிது. முக்கியமாக கார்டூன் வடிவத்தில் அல்லது வேறு சில வரையும் வகைகளில் கருணாநிதி அவர்களை மிக எளிமையாக வரைந்துவிடலாம்... அதற்கு முக்கிய காரணம் அவரது கருப்பு கண்ணாடியும் கூட.

அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி போல விழாக்களில் வேடம் அணிபவர்கள், அவரது தோற்றம் கிட்டத்தட்ட கொண்டுவர அந்த கருப்பு கண்ணாடியை தான் தேர்வு செய்வார்கள்.

கருப்பு!

கருப்பு!

கருப்பு திராவிடத்தின் நிறம், போராளிகளின் நிறம், உழைக்கும் வர்கத்தின் நிறம். கருப்பு தமிழர்களின் நிறம். கருப்பிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. கருப்பை யாரும் களங்கப்படுத்த முடியாது. கருப்பிடம் விளையாடுபவர்களே களங்கப்பட்டு கொள்வார்கள். கலைஞரின் "அண்ணா" கருப்பை தோளில் சுமந்தார். கலைஞர் தன் கண்ணில் வைத்து காத்தார்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்..., "கலைஞரின்" எழுத்தும், அவரது அடையாளமும் தமிழையும், தமிழ் நாட்டையும் விட்டு அகலாது என்பது நிதர்சனம்!

All Image Credit: Facebook / Kalagnar89

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karunanidhi Eye Accident

Rising sun, Yellow towel and Black glasses are the most significant Identity of Kalaignar Karunanidhi. Here we have written about his particular Figure identity "Black Glasses".
Desktop Bottom Promotion