For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிபா வைரஸுக்கு வவ்வால்கள் தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா?

|

கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நிபா காய்ச்சல். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பரவிய இந்த வைரஸ் காய்ச்சல் பலருக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. இது நம் நரம்பு மண்டலத்தை பாதித்து விரைவில் மரணமடைந்து விடுவார்கள். இதுவரை அதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

1998 ஆம் ஆண்டு மலேஷியாவில் இந்த வைரஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது 2004 ஆம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவுகிறது என்பது தெரிந்தது. அதன் பிறகு தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுகிறது அவை தின்று வீசிய பழங்களை எடுத்துச் சாப்பிடுவது, அவற்றின் கழிவுகள் ஆகியவை தான் நிபா வைரஸ் பரவுவதற்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது.

உண்மையில் இதற்கு காரணம் வவ்வால்கள் தானா? பல நூற்றாண்டுகளாக வவ்வால்கள் மனிதர்களுக்கு எத்தகைய நன்மைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Courtesy

வவ்வால்களின் எச்சம் மிகச்சிறந்த உரமாக பயன்படுத்தப்படுகிறது. வவ்வால் வகைகளில் க்வானோ என்ற வகை வவ்வாலின் எச்சம் இதற்கு பயன்படுகிறது. அவற்றில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருக்கிறது. இவற்றை செடிகளுக்கு பயன்படுத்துவதால் அவை செடிகளுக்கு தேவையான சக்தியை வழங்கி ஆரோக்கியமாக வளர உதவிடுகிறது.

#2

#2

நைட்ரஜன் மூலமாக செடிகளுக்கு அதன் அடர் நிறத்தையும் சீரான வளர்ச்சியையும் கொடுக்கிறது. பாஸ்பரஸ் செடிகளில் பூக்களின் வளர்ச்சியையும் வேரின் உறுதித்தன்மையையும் மேம்படுத்துகிறது. பொட்டாசியம் செடிகளின் உறுதித்தன்மைக்கு முக்கிய பங்காற்றுகிறது.

#3

#3

இது மண்ணின் சக்தியை அதிகரிக்கும். சில நேரங்களில் மண்ணின் சக்திகள் எல்லாம் உரஞ்சினால் மண் இலகுவாகி வேரின் பிடிமானத்திலிருந்து விலக நேரிடும். வவ்வால்களின் எச்சம் மணலினை இறுக்கமாக வைத்திருக்கவும் வேரினை இறுக்கமாக பற்றிக் கொள்ளவும் உதவுவதால் செடி ஆரோக்கியமாக வளர உதவிடுகிறது.

#4

#4

Image Courtesy

மைக்ரோப்ஸ் என்பது ஒற்றை செல் உயிரினம். இது மணலில் இருக்கிற அமிலத்தன்மையை அதிகரிப்பது மற்றும் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மைக்ரோப்ஸ் இருப்பதினால் தான் மணலில் சில இயற்கைப் பொருட்கள் மக்குகிறது, மேலும் மேலே நாம் தெளிக்கிற மருந்துகளை எல்லாம் உறிஞ்சி சக்தியினை செடிகளுக்கு பிரதிபலிக்கிறது. இவை கவானோ என்ற வகை வவ்வால்களின் எச்சிலின் மூலம் நடக்கிறது.

#5

#5

Image Courtesy

வவ்வால்களின் எச்சங்களை சுத்தம் செய்வதற்கென்றே சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படுகிறது. எச்சங்களை கலெக்ட் செய்து அதனை உரமாக பயன்படுத்த விற்பனை செய்யப்படுகிறது தோட்டத்தில் ஓப்பன் ஸ்பேசில், வீடுகளில் கட்டிடங்களில் என தனித்தனியாக வவ்வால்களின் எச்சங்களை கலெக்ட் செய்கிறார்கள். இதற்கென்று சர்வதேச அளவில் Bat Conservation International (BCI) என்ற அமைப்பு செயல்படுகிறது.

இவர்கள் தனிப்பட்ட முறையில் வவ்வால்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். இங்கே பண்ணை வைத்து தேனீ எல்லாம் வளர்ப்பது போல வெளிநாடுகளில் வவ்வால்களை வளர்க்கிறார்கள்.

#6

#6

Image Courtesy

வவ்வால்களின் எச்சங்களை டெக்சாஸ்,தென் கிழக்கு ஆசியா மற்றும் லேட்டின் அமெரிக்கா போன்ற இடங்களில் அதீத தேவை இருக்கிறது. அவற்றை உரமாக மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மேக்கப் மற்றும் அலங்கார பொருட்களில் இவற்றின் பங்கு அதிகம்.

அதிகரித்து வரும் கட்டிடங்கள்,மக்கள் பெருக்கம் ஆகியவற்றினால் வவ்வால்களின் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தன்னார்வலர்களின் உதவியுடன் வவ்வால்களை வளர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

#7

#7

Image Courtesy

இந்த உலகில் 1200க்கும் மேற்பட்ட வவ்வால் வகைகள் இருக்கின்றன. அவற்றில் 70 சதவீதம் வரை பூச்சிகளையும், உன்னிகளையுமே தங்களின் உணவாக எடுத்துக் கொள்கிறது. இதனாலும் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வவ்வால் வந்தால் விரட்டுவதில்லை. ஒன்று உரமாக செயல்படும் அதே நேரத்தில் அவை பூச்சிகளையும் சாப்பிட்டு விடும்.

வவ்வால்கள் எந்த காலச்சூழலிலும் வாழ்ந்திடும் என்பதால் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

#8

#8

Image Courtesy

சத்தங்கள் எதிரொலிக்கிற தன்மையை வைத்து தான் வவ்வால்கள் பறக்கிறது. அவற்றிற்கு கண்கள் தெரியாது. இவற்றில் சில வகை வவ்வால்கள் மீக நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் இருக்கிறது அதைவிட வவ்வால்கள் சில அல்ட்ரா வைலட் லைட்டிங்கினையும் கண்டறிந்து விலகிச் செல்லக்கூடியவையாக இருக்கிறது.

வவ்வால்களின் இறக்கையில் கால்சியம் இருக்கிறது. அதன் எலும்புகள் மனிதர்களின் எலும்புகளைப் போன்றது. ஆனால் நம் விரல்களை விட அதிக வளைவுத் தன்மைகொண்டிருக்கும். இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் வவ்வால்களை வேட்டையாடி உணவாக உட்கொள்கிறார்கள்.

#9

#9

Image Courtesy

செடிகளின் மகரந்த சேர்க்கைக்கும் வவ்வால்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட செடிகள் வவ்வால்களினால் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பகல் நேரத்தில் நடைபெறுகிற மகரந்த சேர்க்கைக்கு சில பறவையினங்கள்,தேனீக்கள் ஆகியவை காரணம் அதே போல இரவு நேரத்தில் மகரந்த சேர்க்கை நடப்பதற்கு வவ்வால்கள் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

#10

#10

Image Courtesy

அமெரிக்காவில் நடந்த சிவில் போரின் போது வவ்வால்களின் எச்சங்களைக் கொண்டு கன் பவுடர் தயாரித்திருக்கிறார்கள். நேரடியாக எச்சங்கள் மட்டுமல்ல தேவையான வெடிமருந்து அவற்றுடன் அதனை வெடிக்க வைக்க சல்ஃபர் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் வவ்வாலின் எச்சங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தவிர அப்போது வெடிமருந்து தட்டுப்பாடு இருந்தது, அதிகம் திருடப்பட்டது அதனால் செலவினங்களை குறைக்கவும் பாதுகாப்பிற்காகவும் வவ்வாலின் எச்சங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

#11

#11

Image Courtesy

வவ்வால்களினால் Histoplasmosis என்ற மூச்சுப் பிரச்சனை மனிதர்களுக்கு ஏற்படக்கூடும் ஆனால் இது உயிரை பறிக்கிற அளவிற்கு எல்லாம் இருக்காது என்றிருக்கிறார்கள். வவ்வால்களின் எச்சங்கள் விழுகிற பகுதியில் ஃபங்கஸ் உற்பத்தி ஆகிடும்.

வவ்வால்கள் என்றல்ல விலங்குகளின் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உரங்களை போடும் இடங்களில் எல்லாம் இந்த ஃபங்கஸ் உற்பத்தியாகியிருக்கும். டஸ்ட் அலர்ஜி இருப்பவர்களுக்கு அந்தப் பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என்று சொன்னால் சற்று தீவிரமாக பாதிப்பின் வெளிப்பாடு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Is Bat Is The Only Reason For Nipah Virus

Is Bat Is The Only Reason For Nipah Virus
Story first published: Wednesday, May 23, 2018, 11:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more