இரகசியமாக திருமணம் செய்த இந்திய தொலைக்காட்சி, திரைத்துறை நடிகர், நடிகைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

திரைப் பிரபலங்கள் நடித்தால் மட்டுமல்ல, சாதாரணமாக மக்கள் செய்வதை எது செய்தாலும் அது ஹாட் டாபிக் ஆப் தி டவுன் என்பது போல வைரலாக பரவத் துவங்கிவிடுகிறது. இதனாலேயே சிலர் இரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவது போல ஒளிந்து ஒளிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணம் என்பது ஒருவர் வாழ்வின் முக்கிய பகுதி. ஆனால், வெளியுலகுக்கு பயந்து தங்கள் திருமணத்தையே இரகசியமாக செய்துக் கொண்ட பிரபலங்களும் சிலர் இருந்தனர். வெள்ளித்திரையில் மட்டுமல்ல, சின்னத்திரை பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குணால் கபூர் - நைனா பச்சன்

குணால் கபூர் - நைனா பச்சன்

ரங்குதே பசந்தி படத்தில் நடித்திருந்த குணால் கபூர் மற்றும் அமிதாப்பச்சனின் உறவினரான நைனாவை இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் 2015 பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது. இவர்கள் இதற்கு முன்பே இரண்டு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைப்பெற்றது.

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா!

ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா!

ஏப்ரல் 2014ல் இத்தாலியில் ராணி முகர்ஜி மற்றும் ஆதித்யா சோப்ரா இருவரும் இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். இதை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றே எண்ணியது இந்த ஜோடி. ஆனால், இவர்கள் திருமணம் மிக விரைவில் ஊடக வெளிச்சத்திற்கு வந்து அனைவரும் அறியும்படி ஆனது.

ஜான் ஆபிரகாம் - ப்ரியா ருஞ்சல்!

ஜான் ஆபிரகாம் - ப்ரியா ருஞ்சல்!

ஆண்களே விரும்பும் அளவிற்கு மிகவும் செக்ஸியான நடிகர் ஜான். இவர் ப்ரியாவை அமெரிக்காவில் இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், இவர்களது திருமணத்தின் இரகசியம் ட்விட்டரில் கசிந்தன.

சயிப் அலிகான் - அம்ரிதா சிங்!

சயிப் அலிகான் - அம்ரிதா சிங்!

அம்ரிதா சயிப் அலிகானை காட்டிலும் 12 வயது மூத்தவர். இதன் காரணமாகவே சயிப் அலிகான் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இவர்கள் வீட்டைவிட்டு ஓடிச்சென்று 1991அக்டோபர் மாதம் இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவரை விவாகரத்து செய்து பிறகு, கரீனாவை சயிப் திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி - போனி கபூர்!

ஸ்ரீதேவி - போனி கபூர்!

போனி கபூர் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவர்கள் இருவருக்கும் இரகசியமாக திருமணம் நடந்தது. பிறகு போனி முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஸ்ரீதேவி கருவுற்ற பிறகே இவர்களுக்கு திருமணம் நடந்தது.

சஞ்சய் தத் - மான்யதா!

சஞ்சய் தத் - மான்யதா!

சஞ்சய் தத்திற்கு மான்யதா மூன்றாவது மனைவி ஆவார். இந்த திருமணம் இரகசியமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்னரே இரண்டு ஆண்டுகள் நெருக்கமாக பழகி வந்தனர். பிறகு, இவர்கள் கோவாவில் இரகசிய திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து, இல்லற பந்தத்தில் இணைந்தனர்.

மினீசா லம்பா - ரியான் தம்

மினீசா லம்பா - ரியான் தம்

மினீசா லம்பா மற்றும் ரியான் தம் ஜோடி மும்பையில் மிக அமைதியான முறையில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

ராஜத் டோக்கஸ் - ஸ்ருஷ்டி நாயர்

ராஜத் டோக்கஸ் - ஸ்ருஷ்டி நாயர்

வெள்ளித்திரையின் அக்பர் என்று புகழப்படும் ராஜத் டோக்கஸ் கடந்த 2015 ஜனவரி 30 அன்று ஸ்ருஷ்டி நாயரை இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர் என்ற செய்தி வெளியான போது யாரும் நம்பவில்லை. இவர்களது திருமணம் உதய்பூர் மாளிகையில் நடந்தது.

பரிதி ஷர்மா - தன்மை சக்ஸ்சேனா

பரிதி ஷர்மா - தன்மை சக்ஸ்சேனா

பரிதி ஷர்மா அகமதாபாத்தை சேர்ந்த தன்மை சக்ஸ்சேனாவை 2011ல் இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து 2017ல் அழகிய தேவதை முதல் மகளாக பிறந்தார்.

ஜெய் பானுஷலி - மஹி விஜ்

ஜெய் பானுஷலி - மஹி விஜ்

வட இந்தியாவின் பிரபல டிவி நடிகர்கள் ஜெய் பானுஷலி மற்றும் மகி விஜ் ஆகிய இருவரும் எப்போதுமே அவர்கள் ஒன்றாக இருந்ததை குறித்து வெளியே கூற அஞ்சியது கிடையாது. ஆனால், திருமணம் குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும் வேலை நிறைய இருக்கிறது என்று கூறி வந்தனர். ஆனால், ஒருமுறை தோழியின் திருமணத்திற்கு சென்ற போதுதான், அவருக்கு திருமணம் நட்ன்ததுவிட்டது என்ற உண்மை அறியவந்தது. பிறகு, இருவரும் ஏற்கனவே 2011ல் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதை கூறினார்கள்.

கஷ்னா அபிஷேக் - காஷ்மீரா ஷா

கஷ்னா அபிஷேக் - காஷ்மீரா ஷா

கஷ்னா மற்றும் காஷ்மீரா இருவரும் ஒன்பது ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்து வந்தார்கள். 2013ல் லாஸ் வேகாஸ்க்கு ட்ரிப் போனவர்கள் அங்கேயே இரகசியமாக திருமணமும் செய்துக் கொண்டனர். பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2015ல் தான் இந்த ஜோடி தங்கள் திருமணம் குறித்து கூறினார்கள். இந்த ஜோடி வாடகை தாய் மூலமாக இரட்டையர்கள் பெற்றனர்.

ஜே சோனி - பூஜா ஷா

ஜே சோனி - பூஜா ஷா

ஜே சோனி மற்றும் பூஜா ஷா 2014பிப்ரவரி 18 அன்று இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், இதுக்குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இவர்கள் இருவருக்கும் நடுவே எதோ தொடர்பு இருக்கிறது என்று மட்டுமே கிசுகிசு வெளிவந்துக் கொண்டிருந்தன. பிறகு, தங்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நடந்த திருமணம் என்றும், பெரிதாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பதால் வெளியே கூறவில்லை என்றும் கூறினார்கள்.

சுசந்த் சிங் ராஜ்புட் - அங்கிதா லோகாந்த்

சுசந்த் சிங் ராஜ்புட் - அங்கிதா லோகாந்த்

டிவியில் இருந்து திருமணம் கொண்ட பிரபலமான ஜோடி சுசந்த் சிங் ராஜ்புட் மற்றும் அங்கிதா லோகாந்த். 2016ல் திருமணம் செய்துக் கொள்ள போவதாக இவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இந்த ஜோடி 2014லேயே திருமணம் செய்துக் கொண்டனர். அங்கீதாவின் பெற்றோர் லிவ்-இன் உறவில் இருக்க அனுமதிக்காத காரணத்தால் இந்த திருமணம் இரகசியமாக நடந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know? These Indian TV and Movie Celebrities Were Married Secretly

Do You Know? These Indian TV and Movie Celebrities Werer Married Secretly
Story first published: Wednesday, March 7, 2018, 10:40 [IST]