For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போதைப் பொருள் கடத்தல் இப்படித் தான் ஆரம்பித்தது!

போதைப் பொருள் கடத்தல் ஆரம்பித்த வரலாறு

|

போதைப் பொருள் கடத்தல் என்பது இன்றைக்கு மிகச் சாதரணமான ஒன்றாகிவிட்டது. குறிப்பிட்ட வயதுக்காரர்கள் தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவார்கள் என்பதெல்லாம் கிடையாது பள்ளிக் குழந்தைகள் கூட மிக எளிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

இப்போது வந்திருக்கும் போதைப் பொருட்களினால் பெற்றோர்கள் அதனை விரைந்து கண்டுபிடிக்க முடியாத அபாய நிலையும் ஏற்படுகிறது. அபாய கட்டத்தில் நிலைமை கை மீறிச் சென்ற பிறகு தான் பல விவரங்களே நமக்கு தெரியவருகிறது. அந்த நேரத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு கொண்டு வர முடியாத சூழல் நிலவுவதால் சில நேரத்தில் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்று தங்கள் வாழ்க்கையையே முடித்துக் கொள்கிறார்கள்.

போதைப் பொருள் மட்டுமல்லாமல் பல பொருட்கள் அரசாங்கத்திற்கு தெரியாமல் கடத்தப்படுகிறது, இந்த கடத்தல் எப்போது ஆரம்பித்தது எதனால் துவங்கப்பட்டது என வரலாற்றை சற்று ஆராய்ந்திடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரசாங்கம் :

அரசாங்கம் :

கடத்தலை முதன் முதலில் ஆரம்பித்தது ஆங்கில அரசாங்கம் தான். பதினெட்டாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை வாங்குவதை பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகப்படுத்தியது. அதே நேரத்தில் அப்படி வாங்கும் பொருட்களுக்கான வரியும் கட்ட வேண்டியிருந்தது.

இதை தவிர்க்க ஓர் வழியை தேடிய போது தான் கடத்தி வரும் பழக்கம் அறிமுகமானது.

Image Courtesy

கடத்தல் :

கடத்தல் :

வரி கட்டாமல் கொண்டு வரப்படும் பொருட்களின் பொருட்களை அதிக லாபத்தில் விற்க முடிந்தது, அதே நேரத்தில் வாடிக்கையாளர் கேட்கும் தொகைக்கு குறைக்கவும் முடிந்தது. இதனால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக கடத்தல் பொருள் விலை குறைவு என்றே விளம்பரப்படுத்த ஆரம்பித்திருந்தனர்.

நாளடைவில் இப்படி பொருட்களை கடத்திக் கொண்டு வருவதினால் பொருளாதாரம் பயங்கரமாக சரிவதை உணர்ந்த அதிகாரிகள் அரசாங்கத்தை எச்சரிக்க ஆரம்பித்தனர்.

Image Courtesy

 போதை :

போதை :

பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் கலிஃபோர்னியாவில் ஓபியம் என்ற போதைப் பொருளை அறிமுகப்படுத்துகிறார்கள். அதை விற்பது, வியாபாரப்படுத்துவது,பயன்படுத்துவது என அவர்கள் மெல்ல மெல்ல பரப்பிவிடுகிறார்கள்.

நாளடைவில் அது மக்களிடையே மிக வேகமாக பரவி விடுகிறது. முதலில் வியாபாரம் செய்த சீனர்க்ள் தற்போது அதை விளைவிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். கல்ஃபோர்னியாவைத் தொடர்ந்து நியூ யார்க்குக்கும் இது பரவியது. தொடர்ந்து அருகிலிருந்து சின்ன சின்ன நகரங்களுக்கும் மிக வேகமாக பரவியது.

Image Courtesy

 அமெரிக்கர்கள் :

அமெரிக்கர்கள் :

தொடர்ந்து ஓபியத்தை பயன்படுத்தி அவர்களுக்கு சலித்து விட்டது, வேறு ஏதேனும் கிடைக்காதா என்று ஏங்கி தவித்த போது மார்பைன், கோகைன் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொதுவாக இந்த மார்ஃபைன் சிவில் வார் நடைப்பெற்ற போது போர் வீரர்களுக்கு காயத்தின் வலி தெரியாமலிருக்க கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாக வைத்திடவே அதைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். வீரர்களுக்கு அது கண்டிப்பாக தேவை எனும் சூழல் நிலவியதால் அதிகாரிகளுக்கு தெரியாமல் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

 சட்டம் :

சட்டம் :

1914 ஆம் ஆண்டு ஹரிசன் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி மருத்துவ காரணங்கள் அல்லாமல் இவற்றை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வருகிறார்கள். சந்தையில் கிடைப்பது அரிதானது, உடன் கருப்புச் சந்தையில் அரசாங்கத்திற்கு தெரியாமல் சட்டத்திற்கு புறம்பாக விற்க ஆரம்பித்தனர்.

Image Courtesy

கள்ளச் சந்தை :

கள்ளச் சந்தை :

கள்ளச் சந்தையும் மிக வேகமாக வளர ஆரம்பித்தது. 1925 ஆம் ஆண்டு போதைப் பொருட்கள் விற்கும் இடம் என்றே ஓர் தனியிடத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்த காலத்திலேயே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் வரை போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக இருந்தார்கள்.

இந்த காலத்தில் தான் கஞ்சா அறிமுகமாகிறது.

Image Courtesy

 கைது :

கைது :

கள்ளச் சந்தையில் போதைப் பொருளுக்கு அதிக வரவேற்பிருக்கிறது என்பதை அறிந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து போதைப் பொருளை கடத்தி அமெரிக்காவில் விற்க ஆரம்பித்தனர். அதே போல இங்கே மக்களும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராய் இருந்ததால் ரிஸ்க் எடுத்து கொண்டு தயக்கம் காட்டவில்லை.

கடத்தல் கும்பல்களை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்ய, புதுப்புது குழுக்கள் உருவாகிக் கொண்டேயிருந்தது.

Image Courtesy

வியட்நாம் போர் :

வியட்நாம் போர் :

வியட்நாம் போர் நடந்த போது அதில் பங்கு பெற்ற வீரர்களின் பதினைந்து சதவீதம் பேர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. இது மிகத் தீவிரமான முறையில் அடிமையானவர்கள். எண்பது சதவீதத்திற்கும் மேற்பட்டோர் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தொடர்ந்து இது ஓர் சமூக அந்தஸ்த்தினை பிரதிபலிக்கும் ஒரு விஷயமாக மாறிப்போனது, இப்போது நாமெப்படி ஷோசியல் டிரிங்கர் என்பதை மிகச் சாதரணமாக கடந்து வருகிறோமோ அதே போலத்தான்.

Image Courtesy

பணம் :

பணம் :

1970 களுக்கு பிறகு உலகம் முழுவதிலுமே இந்த போதைப் பொருள் மிகப்பெரிய பணம் கொட்டும் தொழிலாக பரவ ஆரம்பித்தது. இந்த காலத்தில் தான் போதைப் பொருள் மிகப்பெரிய நெட்வொர்க்காகவும் வளர ஆரம்பித்தது.

1975 ஆம் ஆண்டு கொலும்பியன் போலீஸ் சுமார் 600 கிலோ போதைப் பொருளை விமானத்தில் இருந்து மீட்டனர். இது சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட இருந்தது. இதே காலத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எந்த வடிவத்திலும் போதைப் பொருள் இருக்கக்கூடாது என்று அராசங்கம் நினைத்தது.

Image Courtesy

 போர் :

போர் :

ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிச் சென்றது, போதையில் குற்ற வழக்குகள் அதிகமாவது ஒரு புறம், சட்டத்திற்கு புறம்பாக வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைப்பது தொடர்ந்து அதிகரித்ததால் போதைப் பொருட்களை அழிக்க அவர்களுக்கு எதிராக அரசாங்கம் மிகப்பெரிய போரே நடத்தியது.

போதைப் பொருளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் பல வடிவங்களில் கொண்டு வந்து விட்டதாலும், பெரும்பாலும் யாருக்கும் தெரியாமலே நடப்பதாலும், கோடிக்கணக்கான பணம் கைமாறுவதாலும் இதனை கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதனால் இன்னமும் முற்றிலுமாக அழிக்கமுடியவில்லை என்பது தான் பெரும் சோகம்!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

History of Drug Trafficking

History of Drug Trafficking
Story first published: Monday, April 2, 2018, 17:19 [IST]
Desktop Bottom Promotion