For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரண படுக்கையில் ஸ்டீவ் ஜாப்ஸ் மருத்துவர்களை அதிர்ச்சியாகும் படி செய்த காரியம் என்ன?

facts, உண்மைகள், fandom-facts

By Staff
|

தினமும் ஏதேனும் புதியதாக கற்றுக் கொள்ள விரும்பும் நபரா நீங்க? இது உங்களுக்கான இடம். தினமும் அரசியல், வரலாறு, அறிவியல், புவியியல் என சுவாரஸ்யமான உண்மைகள், தகவல்கள் கற்றுக் கொள்ளலாம்.

Here we have listed out some lesser known interesting facts

Image Source: Google

கேள்விகள்:

1. நிலா பூமியை சுழல்வது போல, பூமி சூரியனை சுழல்வது பல கேலக்ஸியும் சுழலுமா?
2. மனிதனின் ஒரு மரபனவில் எத்தனை அளவு தகவல்களை சேமித்து வைக்க முடியும்?
3. தன்னை தானே புத்திசாலி என்று நினைத்துக் கொள்வோர், தங்கள் கருத்தே சிறந்தது என்று நினைத்துக் கொள்வோர் செய்யும் தவறு என்ன?
4. ஒலிம்பிக் பதக்கங்களை வென்று குவித்து சாதனை புரிந்த மைக்கல் பெல்ப்ஸ் தற்கொலை செய்துக் கொள்ள காரணாமாக இருந்ததது என்ன?
5. மரண படுக்கையில் ஸ்டீவ் ஜாப்ஸ் மருத்துவர்களை அதிர்ச்சியாகும் படி செய்த காரியம் என்ன?
6. ஆவிகள் மீது பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறீர்களா? அப்ப நீங்கள் படிக்க வேண்டிய பாட பிரிவு இதுதான்?
7. பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதால், பூக்களில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவது குறித்து உங்களுக்கு தெரியுமா?
8. வெண்வெளியில் தங்கி வருவதால் மரபணு வெளிப்பாட்டில் தாக்கங்கள் ஏற்படுமா?
9. பிளாக் ஹோல் உண்மையில் எந்த நிறத்தில் இருக்கும். இது குறித்து ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் வெளியிட்ட தியரி என்ன?
10. ஆங்கிலத்தின் பூர்வீகமான இங்கிலாந்தில் வசிப்பவர்களில் எத்தனை பேருக்கு சரியாக பேச வராது?

இனி, இவற்றுக்கான பதில்களை காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேலக்ஸி!

கேலக்ஸி!

நிலா நமது பூமியை சுழன்று வருகிறது என்று அறிவோம். நமது பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் அறிவோம். இப்படி எல்லா நட்சத்திரங்களும் சுழன்று கொண்டு தான் வருகின்றன.

ஆனால், இந்த நட்சத்திரங்களை எல்லாம் உள்ளடக்கி வைத்திருக்கும் கேலக்ஸியும் சுழன்று கொண்டு தான் இருக்கிறதாம். ஆம்! கேலக்ஸி ஒருமுறை சுழல ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதாம்.

மரபணு தகவல்!

மரபணு தகவல்!

மரபணு என்பது தான் ஒரு தனி மனிதனின் உண்மையான ஜாதகம். அதை வைத்து அவன் எப்படி பட்டவன், அவன் வரலாறு என்ன என்பதை புட்டுப்புட்டு வைத்துவிட முடியும். இத்தகைய மரபணுவை எப்படியாக டிஜிட்டலாக மாற்றிவிட வேண்டும் என்ற ஆய்வுகள் பல நாடுகளில் திரிதமாக நடந்து வருகிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு மரபணுவில் ஐம்பது நாவல்களில் இருக்கும் அளவிற்கான தகவல்கள் செமிக்கப்பட்டிருக்குமாம்.

மைக்கல் பெல்ப்ஸ்

மைக்கல் பெல்ப்ஸ்

உலகின் முன்னணி நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கங்கள் வாங்கி குவித்து சாதனை புரிந்தவர் ஆவர். ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று திரும்பும் போதும் தான் மிகுதியான மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன் என்று கூறியுள்ள மைக்கல் பெல்ப்ஸ்.

கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்று நாடு திரும்பிய போது தற்கொலை செய்துக் கொள்ள கருதியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பிறகு, மனநல ஆரோக்கியம் மேம்படுத்துவதற்கான ஃபவுண்டேஷன் அமைக்க திட்டமிட்டாராம் மைக்கல் பெல்ப்ஸ்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் கம்பெனியின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரண படுக்கையில் இருந்த போது நடந்ததாக அறியப்படும் நிகழ்வு இது. மரண படுக்கையில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ். ஐந்து வித்தியாசமான ஆக்ஸிஜன் மாஸ்க் கொண்டு வர கூறினாராம்.

அதில் எதன் டிஸைன் பிடித்திருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியுள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ். டிஸைனில் ஸ்டீவ் ஜாப்ஸ் உகுத்திய யுக்திகள் மற்றும் அவரது ஐடியாக்கள் மிகவும் சிறந்தவை.

ஆவி பிஎச்டி

ஆவி பிஎச்டி

பொதுவாகவே பேய், ஆவிகள், பிசாசுகள், கோரமான உருவங்கள் குறித்த கதைகள், படங்கள், தகவல்கள் மீது பலருக்கும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கும் அத்தகைய ஆர்வம் இருக்கிறது எனில், நீங்கள் ஆவி, பேய்கள் குறித்து பிஎச்டி படிக்க முயலும்.

ஆம்! எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், Parapsychology என்ற பிரிவில் பிஎச்டி பட்டம் வாங்க இயலும்.

பூக்கள் நறுமணம்!

பூக்கள் நறுமணம்!

இன்று வேலைக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகிறார்கள். வியர்வை துர்நாற்றம் மற்றும் வகிக்கும் பதவி, ஸ்டேட்ஸ் என்பதை வைத்து வாசனை திரவியம் பயன்படுத்துவதில் சில வேறுபாடுகள் காணப்படும்.

இன்று உலகம் முழுக்க பேசப்படும் ஒரு விஷயம் உலக வெப்பம் அதிகரித்து வருவது. இதன் தாக்கத்தால் இப்போது மலர்களில் இருந்து வெளிவரும் வாசனை என்பது குறைந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விண்வெளி தாக்கம்!

விண்வெளி தாக்கம்!

ஸ்காட் ஜோசப் கெல்லி என்பவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் அமெரிக்க கப்பல் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும் ஆவார். இவர் உண்மையில் இரட்டையராக பிறந்தவர்.

இவர் விண்வெளியில் ஒருவருடம் இருந்து திரும்பிய போது செய்த ஆய்வின் போது இவரது மரபணு வெளிப்பாட்டில் மாற்றங்கள் இருப்பது அறியவந்தது. இவரது இரட்டையர் சகோதரர் மற்றும் இவரது மரபணு கணிசமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

பிளாக் ஹோல்!

பிளாக் ஹோல்!

ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். உடலளவில் முடங்கி போனாலும். அறிவாற்றல் அளவில் துளி அளவு கூட பின் தங்காதவர் ஸ்டீபன். இவர் பல தியரிகள் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தவை ஆகும்.

கடைசியாக இவர் கூறி, உலகளவில் அதிகமானோர் ஒப்புக்கொண்ட தியரி, "பிளாக் ஹோல் உண்மையில் பிளாக் நிறத்திலானது அல்ல" என்பதாகும்.

புத்திசாலிகள்?!

புத்திசாலிகள்?!

மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் கருத்துக்கள் தான் சிறந்தது என்று கருதும் நபர்கள் தங்களை தாங்களே புத்திசாலிகள் என்று மிகையாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள்.. இதனால், அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அல்லது பொதுவாகவே நிறைய கற்றுக் கொள்வதில் இருந்து தடைப்பட்டு போகிறார்கள், என்று ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.

ஆங்கிலம்!

ஆங்கிலம்!

ஆங்கிலம் உலகின் பிரதான வர்த்தக மொழி. எந்த ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு செல்லும் பயணி குறைந்தபட்சம் கற்று வைத்துக் கொள்ள வேண்டிய மொழி ஆங்கிலம். பல மொழிகளின் வார்த்தைகளில் இருந்து உருவான ஆங்கில மொழியே பல மொழிகள் அழிய காரணமாக இருக்கிறது.

இங்கிலாந்தில் வாழும் மக்களின் தாய் மொழி ஆங்கிலம் தான். ஆனால், அங்கே வாழ்பவர்களில் 7.7 இலட்சம் மக்களுக்கு சரியாக ஆங்கிலம் பேச தெரியாது என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: facts உண்மைகள்
English summary

Here we have listed out some lesser known interesting facts

From galaxy rotation to a single DNAs data store amount level, Here we have listed out some lesser known interesting facts.
Desktop Bottom Promotion