மக்கள் உண்மை என நினைத்துக் கொண்டிருக்கும் சில பொய்யான விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த நவீன காலத்திலும் மக்களிடையே மூட பழக்கவழக்கங்கள் அதிகம் உள்ளது. யார் எதைச் சொன்னாலும், அதற்கான உண்மையான காரணம் என்னவென்று கேட்காமல், அப்படியே நம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இப்படி இருப்பதால் தான், நமக்கு நாம் செய்யும் பல செயல்களுக்கான காரணம் இன்று வரை தெரியாமலேயே உள்ளது.

False Facts That Many People Still Consider To Be True

அதேப் போல் யாரோ ஒருவர் தவறான கருத்தைப் பரப்பினால், அதை அப்படியே நம்பி அந்த கருத்தை நாமும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். அப்படி நாம் தவறாக கேட்டு நம்பிக் கொண்டிருக்கும் சில பொய்களும், அதற்கான உண்மை என்ன என்பதையும் கீழே தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதைமணல்

புதைமணல்

கட்டுக்கதை:

நம்மில் பலரும் புதைமணலில் வழுக்கி விழும் போது, அருகில் யாரும் இல்லாவிட்டால் மூழ்கி விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மை

மணலும், நீரும் கலந்தது தான் புதைமணல். இங்கு நீரை விட மணலின் அடர்த்தி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தான் புதைமணலில் விழுந்ததும் மார்பளவு வரை மூழ்கி, மிதக்கிறோம். நீங்கள் புதைமணலில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து வெளிவர உடல் எடையை சீராக பரவி சாய்ந்து, நீர் உங்களை வெளியே தள்ளும் வரை முயற்சி செய்யுங்கள். இதனால் நிச்சயம் யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே வந்துவிடலாம்.

காபி

காபி

கட்டுக்கதை:

நாம் அன்றாடம் குடிக்கும் காபி, அதன் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மை

சிவப்பு விதைகள் கொண்ட பசுமையான காடுகளில் மட்டுமே காபி உற்பத்தி செய்யப்படுகின்றன. விதையின் செயலாக்கத்திற்கு பின் கிடைப்பது தான் நம் அனைவரும் நன்கு அறிந்த காபி பீன்ஸ்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

கட்டுக்கதை:

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நோய்த்தொற்றுகள் மற்றும் வைரஸ்களை எதிர்க்கலாம் என்று நினைக்கிறோம்.

உண்மை

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால், சளி பிடிப்பது அல்லது அதன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்குமே தவிர, வைட்டமின் சி நோய்க் கிருமிகளை எல்லாம் எதிர்த்துப் போராடாது.

பென்குவின்

பென்குவின்

கட்டுக்கதை:

பென்குவின்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு துணையுடன் மட்டும் தான் உறவு கொண்டு வாழும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மை

ஆம், பென்குவின்கள் ஒரே ஒரு துணையுடன் தான் உறவு கொள்ளும். ஆனால் அது குறிப்பிட்ட காலம் மட்டும் தான். அதுவும் இனப்பெருக்கம் செய்யும் காலமான 20-30 நாட்கள் ஒரே துணையுடன் பகல் மற்றும் இரவு நேரத்தைக் கழிக்கும். சில சமயங்களில் பிறந்த பென்குவினைப் பராமரிக்க 2 மாத காலம் வரை துணையுடன் இருக்கும். அதன்பின், அது தனது துணையை முற்றிலும் மறந்து, வேறொரு இடத்திற்கு சென்றுவிடும்.

ஷேவிங்

ஷேவிங்

கட்டுக்கதை:

ஷேவிங் செய்வதால், முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும் என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம்.

உண்மை

உண்மையில், ஷேவிங் செய்வதால் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிப்பதில்லை. முடியின் வளர்ச்சி அனைத்தும் மரபணுக்கள் மற்றும் ஹார்மோன்களைப் பொறுத்தது. எப்போது வளர்ந்த முடியை ஷேவிங் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அப்போது அதன் முனைகள் மழுங்கி இருக்கும். அதனால் தான் அடர்த்தியாக வளர்வது போன்று நமக்கு தெரிகிறது.

தூக்கத்தில் நடப்பது

தூக்கத்தில் நடப்பது

கட்டுக்கதை:

தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று எழுந்து நடப்பவர்களை எழுப்பக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம்.

உண்மை

உண்மை என்னவென்றால், தூக்கத்தில் நடப்பவர்களை எழுப்பும் போது, அவர்கள் குழப்பமடைவார்களே தவிர, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வேண்டுமானால், திடீரென்று விழிக்கும் போது, அதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

கட்டுக்கதை:

செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கிரகம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மை

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி இரும்பு ஆக்ஸைடு துகள்கள் அதிகம் இருப்பதால், அந்த கிரகத்தின் நிறம் பிங்க்-ப்ரௌனாக தெரிகிறது. உண்மையில், செவ்வாய் கிரகத்தின் நிறம் பட்டர்ஸ்காட்ச் நிறமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

False Facts That Many People Still Consider To Be True

Sometime many beliefs are stuck in our minds, so we never question how true they are. Here are some well-known truths that have actually been debunked.