மனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள் - இனிமேலாவது புரிஞ்சு சூதானமா இருந்துக்குங்க!

By Staff
Subscribe to Boldsky
மனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள்- வீடியோ

சில விஷயங்களை நாம் பிறந்ததில் இருந்து உண்மை என்று நம்பி வந்திருப்போம். ஏன் இங்கே உங்களை விழிபிதுங்கி போக செய்யும்  சில உண்மைகள் நமது வகுப்பறையில் பயிற்றுவிக்கப்பட்டவையும் கூட...

நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகே அவர் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்பதில் துவங்கி, டாம் அன்ட் ஜெர்ரியில், ஜெர்ரி சீஸ் விரும்பி உண்ணும் என்பது வரை நாம் நம்பி ஏமார்ந்த விஷயங்கள் பலவன இருக்கின்றன.

இதோ! இவை எல்லாம் நம்மை காலம், காலமாக முட்டாளாக்கி வந்த பொய்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அது தேனே இல்லையாம்...

அது தேனே இல்லையாம்...

நாம் விளம்பரங்களில் காணும் பல உணவுப் பொருட்கள் போலியானவை தான். உதாரணமாக கூற வேண்டும் என்றால், தேன் விளம்பரங்கள் எடுக்கும் போது, தேனுக்கு பதிலாக மோட்டார் ஆயிலை பயன்படுத்துகிறார்களாம்.

இதுமட்டுமல்ல, ஐஸ்க்ரீம் விளம்பரங்களில் பிசைந்த உருளைக்கிழங்கு, பால் விளம்பரங்களில் பால் பசை, பாக்கெட் எண்ணெய் களுக்கு பதிலாக காற்றடைத்த போலி பாக்கெட் என பல பித்தலாட்டங்கள் பின்னணியில் நடக்கின்றன.

Image Source: imgur

பிஞ்சு கேரட்டுகள்!

பிஞ்சு கேரட்டுகள்!

பிஞ்சு கேரட்டுகள்!

நாம் சில காய்கறிகளை பிஞ்சாக இருந்தால் தான் வாங்கி சுவைக்க, சமைக்க விரும்புவோம். அதில் ஒன்று தான் கேரட். கேரட் பிஞ்சாக இருந்தால் தான் சுவையாகவும், சமைக்க எதுவாகவும் இருக்கும். இதை அறிந்துக் கொண்ட வர்த்தக புள்ளிகள், பெரிய சைஸ் கேரட்டாக இருந்தாலும், அதை ஒரு மெஷினில் போட்டு பிஞ்சு கேரட் போல கட் செய்து விற்கிறார்கள்.

பார்த்தீர்களா, இவர்களுடைய ஜகஜால கில்லாடித்தனத்தை.

கொசுறு: 1986ல் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு கேரட் வியாபாரி, பெரிய சைஸ் கேரட்டுகளை காட்டிலும், பிஞ்சு கேரட்டுகளுக்கு தான் மார்கெட்டில் மவுசு இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு, தனது நிலத்தில் விளையும் கேரட்டுகளை ஒரே மாதிரியாக சிறியதாக வெட்டி எடுத்து சென்று விற்று வந்தார் என பரவலாக ஒரு கதை அறியப்படுகிறது.

Image Source: twitter

தீக்கோழிகள் தலையை மண்ணில் புதைக்காது...

தீக்கோழிகள் தலையை மண்ணில் புதைக்காது...

இதை ஒருவகையான மாயை என கூறலாம். கிட்டத்தட்ட கானல் நீர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். தீக்கோழிகள் ஒருபோதும் தங்கள் தலையை மண்ணுக்குள் புதைப்பது இல்லை. அவை உணவு உண்ணும் போது தனது கழுத்தை மிகவும் கீழே குனித்துக் கொள்வதால், அவை தங்கள் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக் கொள்வது போன்ற பிம்பம் ஏற்படுகிறது.

Image Source: pixel2013/pixabay

எகிப்துல பிரமிடு அவ்வளவு இல்லையா?

எகிப்துல பிரமிடு அவ்வளவு இல்லையா?

பிரமிடு என்றாலே அனைவரும் மனதிலும் எகிப்து தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், உலகில் அதிகமான பிரமிடுகள் இருக்கும் இடம் எகிப்து கிடையாது. ஆம்! எகிப்தை காட்டிலும் அதிகமான பிரமிடுகள் சூடானில் தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட இந்த பகுதியில் 255 பிரமிடுகள் இருக்கின்றன. இது எகிப்துடன் ஒப்பிடும் போது இரட்டிப்பு மடங்கு அதிகம் ஆகும்.

தலையில விழுகல...

தலையில விழுகல...

நியூட்டன் என்றாலே அவரது மூன்றாம் விதி தான் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மிகவும் பரிச்சயம். சமீபத்தில் கூட எச்.ராஜா நியூட்டனின் மூன்றாம் விதியை தவறாக கூறி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் டெம்பிளேட் ஆனது வேறு கதை.

இப்போது நம்ம கதைக்கு வருவோம்... நியூட்டன் அசந்து ஒரு ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அந்த கணநொடியில் தான் நியூட்டன் புவியீர்ப்பு குறித்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், லண்டனின் ராயல் சமூகம் இதை முற்றிலும் மறுத்துள்ளது. நியூட்டன் தலையில் அப்படி எந்தவொரு ஆப்பிளும் விழவில்லை. அவர் மரத்தில் இருந்து ஆப்பிள் பூமியில் விழுவதை கண்டு தான் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்று ராயல் சமூகம் கூறியுள்ளது.

Image Source: depositphotos

ஒலிம்பிக் பதக்கம்!

ஒலிம்பிக் பதக்கம்!

ஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஒரு நாடு அதிக தங்க பதக்கம் வாங்குகிறதோ, அவர்களே முதல் இடம் பெறுவார்கள். ஒருவேளை ஓரிரு நாடுகள் ஒரே அளவில் தங்க பதக்கம் வாங்கியிருந்தால் அதற்கு அடுத்ததாக வெள்ளி பதக்கம் அதிகமாக யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் பதக்க பட்டியலில் முதல் இடம் பிடிப்பார்கள்.

ஆனால், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஒலிம்பிக் போட்டிகளில் தரப்படும் தங்க பதக்கத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வெள்ளி தான் இருக்கும். மேல் பூசு மட்டுமே தங்கமாக இருக்கும். அதாவது அந்த பதக்கத்தின் எடையில் ஒரு சதவிதம் மட்டுமே தங்கத்தின் கலப்பு இருக்கும். மற்றபடி வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கம் இரண்டும் ஒன்று தான்.

பதக்கம் வெள்ளியாக இருந்தாலும், முதல் இடம் பிடித்து வெற்றிப் பெறுவது தானே முக்கியம்!

சீஸ் உவாக்....

சீஸ் உவாக்....

ஜெர்ரி எப்போதும் சீஸ் திருடி தின்று டாமிடம் மாட்டிக் கொள்ளும். ஜெர்ரியை பிடிக்க வேண்டும் என்றால் டாம் சீஸை ஜெர்ரி இருக்கும் இடத்தில் வைத்து தான் பிடிக்க முயற்சிக்கும்.

மக்களும், கார்டூனில் இருந்து நிஜ வாழ்க்கை வரை எலிகளுக்கு சீஸ் பிடிக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா?

எலிகளுக்கு இனிப்பு அதிகமாக இருக்கும் பண்டங்கள் மற்றும் பழங்கள், தானியங்கள் தான் அதிகம் பிடித்த உணவு. பொதுவாகவே

Image Source: eastnews

படத்துல காமிச்சது எல்லாம் பொய்யா?

படத்துல காமிச்சது எல்லாம் பொய்யா?

சிவாஜி படத்தில் ரஜினி இறந்தவுடன், ரகுவரன் ஒரு மெஷினை கொண்டு வந்து, அதில் ஜெல் தடவி, அவரது இதயத்தில் தேய்த்து உயிர் மீள செய்வார். இந்த காட்சியை நீங்கள் பல படங்களில் கண்டிருப்பீர்கள். இந்த கருவியின் பெயர் 'Defibrillator'.

இதேனும் கோளாறு காரணமாக இதயத்துடிப்பு சீரற்று போகும் நிலையில், இதயத்துடிப்பை சீராக்க மட்டுமே இந்த கருவி உதவுமாம். மற்றபடி இதயத்துடிப்பு நின்றுவிட்டால், மீண்டும் இதயத்தை இயங்கவைக்க இந்த கருவி உதவாதாம். இது போன்ற நிலையில் சி.ஆர்.பி எனப்படும் நெஞ்சை பிடித்து அழுத்தும் முறையை தான் கையாள வேண்டும் எனப்படுகிறது.

"அப்ப, இத்தன நாளா நாம படத்துல பார்த்தது எல்லாம் பொய்யா கோபால்...."

Image Source: NBC

பென்குயின்!

பென்குயின்!

பென்குயின்களுக்கு கால்கள் மிகவும் குட்டி, அவைகளுக்கு மூட்டு கிடையாது, அதனால் தான் இவற்றின் நடை கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்றும் நாம் கருதுகிறோம்.

ஆனால், பென்குயின்களுக்கு மூட்டு இருக்கிறது. ஆனால், இவற்றின் உடல் வடிவம் காரணமாக மூட்டு வெளிப்படையாக தெரிவதில்லை.

Image Source: depositphotos

வெந்நெகிழி!

வெந்நெகிழி!

வெந்நெகிழி என்றால் பலருக்கும் புரியாது... அதாவது தெர்மோ பிளாஸ்டிக் டேப். டபிள் சைடு டேப் என்றால் இன்னும் நன்றாகவே புரியும்.

ஆம்! மஞ்சள் கலர் ஸ்டிக்கருடன் இருப்பக்கமும் ஒட்ட உதவும் அந்த டேப் நீங்கள் நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இதை நாம் பெரும்பாலும் சுவற்றில் அலங்கார பொருட்கள் ஒட்டுவதற்கும், அலுவலக மேஜைகளில் ஏதேனும் முக்கியமான பேப்பர்களை ஒட்டுவைப்பதற்கும் பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால், உண்மையில் இது எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்த டபிள் சைடு டேப்பானது, சாலை போடும் போறது அளப்பதற்கு உதவியாக இருக்க பய்னபடுத்தப்பட்டதாம்.

Image Source: flickr

குட்டி பூனை!

குட்டி பூனை!

உலகில் வாழும் மிக குட்டியான பூனை என்ற பெயரில் இணையதளங்களை உலா வரும் புகைப்படம் இது. இதை ஒரு டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் உருவாக்கினார். உண்மையில் உலகின் குட்டியான பூனை என்ற கின்னஸ் சாதனை செய்த பூனையும் இருக்கிறது. அதன் உயரம் 5.25 அங்குலம். அதாவது தளத்தில் இருந்து இதன் தோள் வரையிலான உயரம் ஐந்து அங்குலம் தான்.

இதை லில்லிப்புட் பூனை என்றும் அழைக்கிறார்கள்.

Image Source: TBA/worth1000

கொசுறு!

கொசுறு!

உங்கள் பக்கத்துவீட்டு காரரின் கார்டனில் மட்டும் புற்கள் பச்சை நிறத்தில் இருகிறதா? இதோ, அதற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம்... (இது சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன்)

இதுப்போக.. நீங்க பார்க்குற பல ரியாலிட்டி நிகழ்சிகள்... முக்கியமாக WWE முதல் மேன் vs வைல்டு பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சி வரை பலவன சகல வசதிகளும் ஸ்கிர்ப்ட் எழுதி காட்சிப்படுத்தப்படுபவையே ஆகும்.

எனவே, போலியை கண்டு ஏமாறாதீர்கள்!

Image Source: Z953VAN/twitter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Facts That Prove Your Life Is a Lie

    Facts That Prove Your Life Is a Lie
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more