For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பா.சம்பத் மணக்காவிளை (எ) பிரச்சார பீரங்கி நாஞ்சில் சம்பத் குறித்த வரலாற்று உண்மைகள்!

  By Staff
  |
  பிரச்சார பீரங்கி நாஞ்சில் சம்பத் குறித்த சில உண்மைகள்- வீடியோ

  நாயகராவிலும் குளிக்க சொன்னாலும் குளிப்போம் என கூற வேண்டிய இடத்தில், நயந்தாராவில் குளிக்க சொன்னாலும் குளிப்போம் என்று கூறியவர் தான் நாஞ்சில் சம்பத். அந்த தருணத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் நாக்கு பரதநாட்டியம் ஆடியது.

  ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் நாஞ்சில் சம்பத் இளைஞர்களுக்கு பெரிதாக பரிச்சயம் இல்லை. ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்களால் ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர் வரை அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்றடைந்தார் நாஞ்சில் சம்பத்.

  ஆகச்சிறந்த பேச்சாளர் என்ற போதிலும், ஒருசில பேட்டிகளில் தனது விவகாரமான பதில்களால் மிகவும் கேலிக்குள்ளான நபராக மாறினார். மீம்ஸ் டெம்ப்ளேட் கிங் வடிவேலுவுக்கு பிறகு இரண்டாம் இடத்தில் இருப்பவர் இவர் என்று பெருமையாக கூறுகிறார்கள் மீம்ஸ் லெஜண்டுகள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிறப்பு!

  பிறப்பு!

  திரு. பாஸ்கரன் மற்றும் திருமதி கோமதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் பா. சம்பத் மணக்காவிளை. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் படிப்பை புனித மரியா மேல்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் படித்து முடித்தார்.

  பா. சம்பத் மணக்காவிளை மற்றும் சசிகலா (நாஞ்சில் சம்பத் மனைவியின் பெயரும் சசிகலா தான்) தம்பதியினருக்கு சரத் பாஸ்கரன் என்ற மகனும், மதிவதனி என்ற மகளும் இருக்கிறார்கள்.

  நாஞ்சில் சம்பத்!

  நாஞ்சில் சம்பத்!

  பிறப்பில் பா. சம்பத் மணக்காவிளை என இயற்பெயர் கொண்டவருக்கு எப்படி நாஞ்சில் நாஞ்சில் சம்பத் என்ற பெயர் வந்தது. கன்னியாகுமரியில் இவர் பிறந்த இடமானது பண்டையக் காலத்தில் நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்டு வந்த பகுதியாகும். எனவே, பிறப்பிட பெயரே இவரது புனைப்பெயராக இணைந்துவிட்டது.

  நாஞ்சில் நாடு - சிறு வரலாறு!

  நாஞ்சில் நாடு - சிறு வரலாறு!

  கன்னியாக்குமரி மாவட்டத்தில் பழையாற்றின் கரையில் அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களை கொண்ட பகுதியை நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிறது.

  அந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக நாஞ்சில் நாடு விளங்கி வந்தது. நாஞ்சில் நாடு பகுதியில் சோழர்கள் தங்கள் படை நிலையை அமைத்து வைத்திருந்தனர் என்றும் வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது.

  இங்கே கோட்டார் சோழர்களின் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  சிறுவயதிலேயே பேச்சாளர்!

  சிறுவயதிலேயே பேச்சாளர்!

  திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறுவயதில் இருந்தே சிறந்த பேச்சாளாராக விளங்கியவர். பெரியா மற்றும் அண்ணா மீது வைத்திருந்த பற்று மற்றும் கொள்கை ரீதியிலான ஈர்ப்பினால் இவர் திமுகாவில் இணைந்தார்.

  வைகோவுடன்...

  வைகோவுடன்...

  திமுக-வின் கழக பேச்சாளர்களில் இவரும் ஒரு முக்கிய பங்குவகித்தார். ஆனால், கருணாநிதி மற்றும் வைகோ இடையே உண்டான விரிசல் காரணமாக வைகோ திமுகவில் இருந்து வெளியேற. அவருடன் சேர்ந்து நாஞ்சில் சம்பத்தும் திமுகவில் இருந்து வெளியேறினார்.

  இரண்டாம் கட்ட தலைவர்!

  இரண்டாம் கட்ட தலைவர்!

  கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முதலாம் கட்ட தலைவர்களுக்கு பிறகு... இரண்டாம் கட்ட தலைவர்களில் பெரும் புகழும், மக்களிடையே பெயரும் பெற்றிருந்த பேச்சாளாராக விளங்கினார் நாஞ்சில் சம்பத். இவரது எதுகை மோனை பேச்சு, எழுச்சிமிக்க பேச்சாற்றல் போன்றவை பலதரப்பட்ட மக்களை ஈர்த்தது.

  சிறை!

  சிறை!

  2009ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் அனைத்து மாணவர் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கெடுத்து கொண்ட நாதியற்றவனா தமிழன் என்ற தலைப்புள் நாஞ்சில் சம்பத் பேசினார்.

  அந்த பெரும் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் பேச்சு இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், எதிராகவும் இருந்தது என்று குற்றம் சாட்டி, இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  வைகோ வாதாடினார்!

  வைகோ வாதாடினார்!

  இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான வைகோ வாதாடினார்.

  இது மட்டுமின்றி திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி செய்து வந்த போது, பலமுறை நாஞ்சில் சம்பத் சிறை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இலக்கிய பங்கு!

  இலக்கிய பங்கு!

  சிறந்த பேச்சாளாரான நாஞ்சில் சம்பத் எழுத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பல இலக்கிய அரங்குகளில் நிறைய பேசியுள்ளார்.

  நாஞ்சில் சம்பத் இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

  இலக்கியப் பூங்கா

  பதிலுக்குப் பதில்

  பேசப் பெரிதும் இனியவன்

  என்னைத் தொட்ட என்.எஸ்.கே.

  நான் பேச நினைத்ததெல்லாம்...

  விரிசல்!

  விரிசல்!

  புத்தமத பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக சாஞ்சிக்கு வருகை தந்திருந்தார். அப்போது ராஜபக்சேவை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

  இந்த நிகழ்வுக்கு நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்து வேறு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்என்றும் கூறப்படுகிறது. இதனால் வைகோ - நாஞ்சில் சம்பத் இடையே கருத்து வேறுபாடு உண்டானது.

  அதிமுக தாவல்...

  அதிமுக தாவல்...

  அப்போது பல அரசியல் விமர்சகர்கள் நாஞ்சில் சம்பத்தை வைகோ கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவார் என்று கூறிவந்தனர். ஆனால், நாஞ்சில் சம்பத், கட்சியாக நீக்காத வரை தான் மதிமுக-வை விட்டு விலகமாட்டேன் என்று கூறிவந்தார்.

  ஆனால், கட்சிக்குள் நாஞ்சில் சம்பத்தை நீக்குவதாக பேச்சுக்கள் அடிப்பட்ட போது, அவர் மதிமுகவில் இருந்து பிரிந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

  பிரபலமான பஞ்ச் வசனங்கள்...

  பிரபலமான பஞ்ச் வசனங்கள்...

  நாஞ்சில் சம்பத் எதுகை மோனையாக பேசி தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்குள் ஒரு வைகைப்புயல் வடிவேலு இருப்பது தந்தி டிவி நிகழ்ச்சியில் தான் முதன்முறையில் வெளிப்பட்டது. ரங்கராஜ் பாண்டே உடனான ஒரு செய்தி நிகழ்ச்சியில்... அரசு ஏன் மந்தமாக இருக்கிறது.. மக்களுக்கான பாலத்தை கட்டி முடித்தும் ஏன் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய போது... அம்மா வரட்டும் என்று காத்திருக்கிறோம்... என்று கூறினார். இது ஆரம்பத்தில் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால், மீம் டெம்பிளேட்டாக மாறிய பிறகு காமெடி பேசாக மாறிப் போனது.

  சில பஞ்ச் வசனங்கள்...

  சில பஞ்ச் வசனங்கள்...

  அம்மா வரட்டும்ன்னு காத்திருக்கோம்.

  காறித்துப்புனா தொடச்சுக்குவேன்..

  நயன் தாராவில் குளிக்கச் சொன்னாலும் குளிப்போம்...

  யாரை பற்றி குறிப்பிட்டு பேசினாலும், அதில் தனக்கே உரித்தான முறையில் இலக்கிய உதாரணங்கள், சான்றோர்கள் கூறிய வாக்கினை எடுத்துக்காட்டி பாராட்டுவதும், பேரிடியாக போட்டுத்தாக்கி பேசுவதும் நாஞ்சில் சம்பத்தின் இயல்பு.

  இவர் இன்று அரசியலில் இனிமேல் முழுநேரம் இயங்க மாட்டேன் என்று அறிவித்திருப்பது பல மீம் கிரியேட்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facts and Biography About Tamil Nadu Politician Nanjil Sambath!

  Facts and Biography About Tamil Nadu Politician Nanjil Sambath!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more