For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

650 கன்னி பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த பெண்

ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களும் பலகொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். . 650 இளம் பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த ஒரு அரக்க பெண்ணை பற்றித்தான்

|

உலக வரலாற்றில் கொடுங்கோலர்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் ஹிட்லர், இடியமின், முசோலினி, செங்கிஸ்க்கான் போன்ற சிலர் மட்டுமே. ஆனால் இவர்களை விடவும் அவர்களை விட அதிக கொடுமைகள் புரிந்த பல கொடுங்கோலர்களும் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதுபோன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

Elizabeth Báthory: Historys Most Prolific Female Serial Killer

ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களும் பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது இப்பொழுது மட்டுமல்ல கடந்த காலத்திலும் இருந்திருக்கிறது. 650 இளம் பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த ஒரு அரக்க பெண்ணை பற்றித்தான் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலிசபெத் பத்தோரி

எலிசபெத் பத்தோரி

16 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் ஹங்கேரியில் வாழ்ந்தவர்தான் இந்த எலிசபெத் பத்தோரி. கின்னஸ் புத்தகத்தின் படி இன்றுவரை உலகின் அதிக கொலை செய்த பெண் என்னும் பெயர் இவருக்குத்தான் உள்ளது. இவர் கிட்டத்தட்ட 650 பெண்களை கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. ட்ராகுலா என்னும் கற்பனை கதாபாத்திரத்தை போல பெண்களின் இரத்தத்தில் குளித்தால் இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கலாமென நினைத்து பெண்களை சித்திரவதை செய்து அதில் மகிழ்ச்சி அடைந்த அரக்கிதான் எலிசபெத் பத்தோரி .

குழந்தை பருவம்

குழந்தை பருவம்

குழந்தை பருவம் முதலே எலிசபெத் கொடூரமான காட்சிகளை பார்த்தபடியே வளர்ந்தார். அவரும் பல கொடூர சம்பவங்களில் ஈடுபட்டார். ஆனால் அதற்காக அவர் என்றும் தண்டிக்கப்பட்டதே இல்லை. மேலும் சிறுவயதிலேயே பல கொடுமைகளையும் அனுபவித்தார் எலிசபெத். ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அதற்குள் ஒரு குற்றவாளியை வைத்து தைத்து குதிரையும், குற்றவாளியும் இறக்கும் வரை அந்த காட்சிகளை அனைவரும் பார்ப்பார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் எலிசபெத்தின் குழந்தைப்பருவத்தில் நடந்தது.

13 வயதில் குழந்தை

13 வயதில் குழந்தை

தன் காதலன் மூலம் 13 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட எலிசபெத் 15 வயதை அடைவதற்கு முன்பே பெரேக் நடாஸ்டி என்னும் இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தன் மனைவியின் கடந்த காலத்தை அறிந்து கொண்ட பெரேக் அவரை கொடுமைப்படுத்தினார். மேலும் தன்னிடம் இருந்த கைதிகளையும் சித்திரவதை செய்தார். அவர்களின் விரல்களுக்கு இடையே காகிதத்தை வைத்து அதில் நெருப்புவைத்து அதை பார்த்து மகிழ்ச்சி அடையும் கொடூரனாக பேரெக் இருந்தான்.

கன்னி பெண்களின் இரத்தத்தில் குளியல்

கன்னி பெண்களின் இரத்தத்தில் குளியல்

கொலைகள் செய்ய ஆர்மபித்த காலத்தில் எலிசபெத் தன்னிடம் சிக்கும் பெண்களை கடித்து அவர்களின் இரத்தத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவருக்கு மிகவும் பிடித்த டிராகுலா கதாபாத்திரம்தான். கொலைகார வாழ்க்கை தொடங்கிய பின் கன்னி பெண்களை சித்திரவதை செய்து அதை கண்டு மகிழ்ச்சி அடையவும், அவர்களின் இரத்தத்தில் குளிக்கும் பழக்கத்தையும் கொண்டார் எலிசபெத். இதனால் தான் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம் என்று நம்பினார். இது உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் இன்றும் இருக்கிறது.

MOST READ: பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் எதிர்காலம் எப்படியிருக்கு

பெண்களை உறைய வைத்தல், நெருப்பு மூட்டுதல்

பெண்களை உறைய வைத்தல், நெருப்பு மூட்டுதல்

கொடூரமான ஒருவனை திருமணம் செய்துகொண்ட பின் எலிசபெத் சித்திரவதை செய்வதில் பல புதிய முறைகளை அறிந்துகொண்டார். பெண்களை கூண்டில் அடைத்து அவர்களை பனிக்கட்டியில் வீசி அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசித்தார். அதேபோல தன் பணிப்பெண்கள் கைகளில் நெருப்பு வைத்தல், அவர்களின் முகத்தில் நெருப்பு பந்தை எறிதல் போன்ற கொடூர செயல்களின் மூலம் எல்லையற்ற ஆனந்தம் அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

தேனீக்களை வைத்து சித்திரவதை

தேனீக்களை வைத்து சித்திரவதை

தன் கணவரின் அறிவுரைப்படி பெண்களின் மீது தேனை ஊற்றி அவர்களை தேனீக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை விட்டு கடிக்கவைத்தார். இரண்டு கொடூரர்களும் இணைந்து பல கொடுமைகளை செய்தனர். போர் முனையில் இருக்கும்போது கூட பேரெக் தவிர்ந்த தன் மனைவிக்கு எப்படி கொடுமை செய்வது என்று கடிதம் எழுதுவானாம் .

நரமாமிசம்

நரமாமிசம்

எலிசபெத் செய்த் கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளை முழுமையாக கூற இயலாது. ஏனெனில் அதில் அவ்வளவு கொடூரமும், வக்கிரமும் இருந்தது. அவரின் சித்தர்வதைகளில் முக்கியமான ஒன்று நரமாமிசம் தின்னும்படி கைதிகளை கொடுமை செய்தது.

கணவரின் மறைவு

கணவரின் மறைவு

தன் கணவரின் அறிவுரைகளையும் தாண்டி எலிசபெத் தானாகவே பல சித்திரவதை முறைகளை கண்டறிந்தார். அவற்றையெல்லாம் தன் பணிப்பெண்கள் மீது பரிசோதிப்பார். அவரின் பணியாட்கள் யாரும் கோட்டையிலிருந்து தம்பிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரத்தில் அவர்கள் அனைவரும் கட்டிவைக்கப்படுவார்கள். 1604 ஆம் ஆண்டு கணவரின் மரணத்திற்கு பிறகு எலிசபெத் மிகவும் மோசமாக மாறினார். பெண்களை ஊசியை வைத்து குத்துவது, அவர்களின் மார்பங்களை வெட்டுவது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட தொடங்கினார்.

MOST READ: நான் பண்ணதுக்கு பேர் கள்ளக் காதலா? அப்ப நீ பண்ணதுக்கு பேரு என்ன? - My Story #307

பிளட் கவுன்டஸ்

பிளட் கவுன்டஸ்

எலிசபெத் ' பிளட் கவுன்டஸ் ' என்ற புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்றாற்போல் எலிசபெத்திற்கு காமத்திலும் அதிக நாட்டம் இருந்தது. தன் காதலன், கணவன் மட்டுமின்றி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். படுக்கையில் ஆண்களை வெற்றிகொள்வதே பெருமை என்ற நினைப்பில் வாழ்ந்து வந்தார்.

சித்திரவதை தொடர்ச்சி

சித்திரவதை தொடர்ச்சி

தன் கணவர் இறந்த பல ஆண்டுகளுக்கு பின்னரும் எலிசபெத் தன் சித்ரவதைகளை தொடர்ந்தார். தன் அரண்மனைக்கு வேலைக்கு வரும் பெண்களை தொடர்ந்து சித்திரவதை செய்து கொன்றுகொண்டிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள் தங்கள் மகள்களை கோட்டைக்கு அனுப்புவதை நிறுத்தினர். மேலும் மக்கள் எலிசபெத்திற்கு எதிராக போராட்டம் செய்யவும் தொடங்கினர். தன்னை புகழ்ந்து பாடாத ஒரு புகழ்பெற்ற பாடகியை எலிசபெத் கோட்டைக்கு வரவைத்து கொன்றுவிட்டார். இந்த செய்து காட்டுத்தீ போல பரவியது.

மன்னருக்கு தெரிய வருதல்

மன்னருக்கு தெரிய வருதல்

மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து எலிசபெத்தின் கொலைகள் குறித்து ஹங்கேரியின் மன்னருக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவரின் பணபலத்தை நினைத்து அஞ்சிய அரசர் எலிசபெத்தை விசாரிக்க ஒருவரை அரசாங்கம் சார்பாக நியமித்தார். எலிசபெத் இப்பொழுது ஒரு விதவையாக இருப்பதால் இப்பொழுது அவருக்கு மரண தண்டனை வழங்கினால் அவரின் செல்வம் யாவும் அரசாங்கத்திற்கு வந்துவிடும், அதை வைத்து அரசாங்கத்தின் கடன்களை அடைந்துவிடலாம் என்று எண்ணினார்கள். துர்சோ பத்தோரி என்பவர் எலிசபெத்தை காப்பாற்ற எண்ணினார். அதன் விளைவாக எலிசபெத் விசாரணையிலிருந்து தப்பினார் ஆனால் அவரின் கூட்டாளிகள் மாட்டிக்கொண்டனர்.

எலிசபெத்தின் மறைவு

எலிசபெத்தின் மறைவு

1610 ல் துர்சோ எலிசபெத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். அவரின் கோட்டைக்குள் இருந்து பல அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டறியப்பட்டது. அதன்பின் விசாரணை வேகமாக தொடங்கியது. எலிசபெத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அதற்கு பதிலாக அவரின் கூட்டாளிகள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். எலிசபெத்தின் குற்றங்கள் மறுக்கப்பட்டது. இறுதியாக எலிசபெத்திற்கு மரண தண்டனை வழங்காமல் ஸ்லோவாக்கியாவில் இருந்த அவரது குடும்ப அரண்மனையில் சிறைவைக்கப்பட்டார். அதன்பின் மூன்று ஆண்டுகள் மட்டுமே எலிசபெத் உயிர்வாழ்ந்தார். 1614ல் அவர் உயிர் பிரிந்தது.

MOST READ: உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்ப இத செய்யுங்க

கோட்டை

கோட்டை

எலிசபெத் மொத்தம் எத்தனை பேரை கொன்றார் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று. அவர் வாழ்ந்த, மணம் முடித்த, மற்றும் சிறைவைக்கப்ட்டு இறந்த கோட்டை இன்றும் ஸ்லோவாக்கியாவில் இருக்கிறது. வரலாற்றின் மிகப்பெரிய தொடர் கொலைகாரியான எலிசபெத் பத்தோரியின் வாழ்க்கை அனைவரையும் மிரளவைக்கும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync history
English summary

Elizabeth Báthory: History's Most Prolific Female Serial Killer

Elizabeth Bathory is the most murderous woman in the history of the world. She tortured and killed anywhere around 650 young women for pure pleasure.
Desktop Bottom Promotion