தமிழ் நடிகர், நடிகைகளின் வித்தியாசமான ஹாபீஸ்!

Posted By: Staff
Subscribe to Boldsky

சினிமா எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றால் பாதி பேர் ஆம் என்பார்கள், மீதி பேர் இல்லை என்பார்கள். ஆனால், சினிமா எத்தனை பேருக்கு ஹாபி என்றால் முக்கால்வாசி பேர் கைத்தூக்குவார்கள்.

ஏனெனில், இன்றைய பெரும் பொழுதுபோக்கு சினிமா தான். அதனால் தான் அது கோடிகளில் நஷ்டம் கொடுத்தாலும், இதில் விட்டதை அடுத்த படத்தில் பிடித்துவிடலாம் என்று போட்டாப்போட்டி போட்டுக்கொண்டு இயங்கி வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு பெரும்பாலும் சினிமா படம் பார்ப்பது ஹாபியாக இருக்கிறது சரி. சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கு என்ன ஹாபியாக இருக்கும்.

சரி! வாங்க... உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் ஹாபிக்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்யா!

ஆர்யா!

நடிகர் ஆர்யாவுக்கு சைக்கிளிங் சென்றால் எவ்வளவு பிடிக்கும் என்பதை அவரை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடரும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் தெரியும்.

தான் மட்டுமின்றி தனது நண்பர்கள், உடன் பணிபுரியும் திரைத்துறை தோழர்கள், இரசிகர்கள் என அனைவரையும் சைக்ளிங் செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் தூண்டுபவர் ஆர்யா. மாடலிங் செய்து வந்த காலத்தில் இருந்தே ஆர்யாவுக்கு ஃபிட்னஸ் என்றால் மிகவும் விருப்பம்.

அடிக்கடி தனது நண்பர்களுடன் சைக்கிள் எடுத்துக் கொண்டு மாமல்லபுரம், பாண்டிச்சேரி என கிளம்பிவிடுகிறார் ஆர்யா.

ஆரி!

ஆரி!

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்களை பெற்றவர் நடிகர் ஆரி. இவர்க்கு விவசாயம் மீது ஈர்ப்பு அதிகம். தான் மட்டுமின்றி தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகிறார் ஆரி.

அடிக்கடி கிராமப் பகுதிகளுக்கு சென்று பாரம்பரிய விவசாயம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் நன்மைகள் குறித்து விவரித்து வருகிறார் ஆரி.

மேலும், பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் நடித்த கிஷோர் அவர்களும் விவசாயத்தில் நிறைய ஆர்வம் உடையவர் ஆவார்.

திவ்யதர்ஷினி!

திவ்யதர்ஷினி!

டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, வாட்ச் வாங்குவதுட் தான் ஹாபி. அதிலும் பெண்கள் மாடல் வாட்சுகளை காட்டிலும் ஆண்கள் மாடல் வாட்ச் என்றால் மிகவும் பிரியம்.

தான் எங்காவது வெளிநாடுகளுக்கு சென்றால் முதல் விஷயமாக அந்த ஊரில் இருக்கும் வாட்சுகளை வாங்குவாராம் டிடி.

ஹன்ஷிகா!

ஹன்ஷிகா!

கடந்த சில ஆண்டுகளாக கனவுக் கன்னியாக வந்துக் கொண்டிருந்த ஹன்ஷிகாவுக்கு ஒரு கனவு இருக்கிறது. அதுதான் தனது சொந்த ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும் என்பது. சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் ஹன்ஷிகாவுக்கு மிகுந்த ஆர்வமாம்.

குழந்தை நட்சத்திரமான ஹன்ஷிகா பதின் வயதுகளிலேயே முதன்மை நாயகியாக நடிக்க சினிமாவுக்குள் வந்துவிட்ட காரணத்தால் இந்த கனவு கொஞ்சம் தாமதாகிக் கொண்டே போகிறது என்று வருந்துகிறார்.

பொன்வண்ணன்!

பொன்வண்ணன்!

நடிகர் மற்றும் நடிகை சரண்யாவின் கணவருமான பொன்வண்ணன் அவர்களுக்கு பங்கு சந்தையில் ஆர்வம் அதிகமாம். எப்படி பணம் போடவேண்டும், எடுக்க வேண்டும் என்று அதன் நெளிவு, சுளிவுகள், குறித்து தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தெரிந்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

நடிகர் சங்க வேலை, ஷூட்டிங் போக வீட்டில் இருக்கும் நேரத்தில் பங்கு சந்தையில் நேரம் கழிப்பது இவருக்கு பிடித்தமான விஷயம்.

ரா. பார்த்திபன்

ரா. பார்த்திபன்

வார்த்தைகளில் விளையாடும் வித்தகன் பார்த்திபன். வார்த்தைகளில் வளர்த்து எடுத்து பேசுவதில் வல்லவராக இருக்கும் பார்த்திபனுக்கு தென்னை வளர்ப்பதில் ஆர்வம் அதிகமாம்.

பாண்டேச்சேரி மரக்காணத்தில் ஒரு தென்னை பண்ணை வைத்திருக்கிறார் பார்த்திபன். அங்கே சென்றால் தங்குவதற்கு என குடிசையும், பண்ணை மற்றும் ஊர் சுற்றி மாட்டு வண்டியும் வைத்திருக்கிறார்.

இசைப்புயல்!

இசைப்புயல்!

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கீ-போர்டுகளில் விளையாடுவதை போலவே வீடியோ கேம்ஸ் விளையாடவும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.

வீட்டில் இருக்கும் கேம்ஸ் என்றால், இசை நாயகனுக்கு நீண்ட நேரம் பயணிக்கும் போது யூடியூப் சென்று தமிழ் காமெடி வீடியோக்களை காண்பது என்றால் கொள்ளை பிரியமாம்.

பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ் ராஜ்!

நடிகர் ஆரி போலவே செல்லம் பிரகாஷ் ராஜ் அவர்களும் ஈ.சி.ஆர் அருகே ஒரு ஃபார்ம் ஹவுஸ் வைத்து விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்துடன் அதே பகுதியில் சிறிய அளவில் ஒரு குளம் வெட்டி, அதில் தனக்கு பிடித்தமான வாத்துகளை ஆசை, ஆசையாக வளர்த்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

ரம்யா!

ரம்யா!

வி.ஜே.ரம்யாவுக்கு நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதுடன் வெயிட்லிப்டிங் செய்வது, பரத நாட்டியம் ஆடுவதும் மிகவும் பிடிக்கும். இது போக ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் காட்டும் இவர், யூடியூப்பில் ஒரு சேனல் துவக்கி அதில் தனது வீடியோ பதிவுகள் மூலமாக ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்ம் கூறு வருகிறார். மேடம்க்கு ஹேண்ட்பேக் வாங்குவதும் மிகவும் பிடித்தமான ஹாபி ஆகும்.

வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு!

படத்தின் பெயர்களில் இருந்து டைட்டில் கார்டு வரை அனைத்திலும் புதுமை புகுத்தியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது படம் பிரியாணி சிலருக்கு பிடித்தது, சிலருக்கு பிடிக்காமலும் போனது. ஆனால், இவருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும்.

படமாக மட்டுமல்ல, உணவாகவும். மயிலாப்பூரில் இருக்கும் ஒரு ரோட்டு கடையில் இரவு நேரங்களில் தோழமைகளுடன் பிரியாணி சாப்பிடக் கிளம்பி விடுவாராம்.

சமந்தா!

சமந்தா!

இது பலருக்கும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கலாம். தமிழர் கலாச்சார விளையாட்டான சிலம்பம் ஆடுவதில் பலே கில்லாடி சமந்தா. ஷூட்டிங் வேலைகள் போக தனியாக வீட்டில் இருக்கும் போது சிலம்பம் எடுத்து சுற்ற ஆரம்பித்துவிடுவாராம்.

இதுமட்டுமின்றி உடற்ப்பயிர்ச்சி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். சிறு வயதில் இவர் கராத்தேவும் கற்றுக் கொண்டிருப்பார் போல, அப்படியான படங்கள் சிலவனவும் முன்பு வெளியாகி வைரலாகின. அதிலும் கூட கையில் சிலம்பம் வைத்திருப்பார் சமந்தா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Hobbies of Kollywood Celebrities!

Different Hobbies of Kollywood Celebrities!
Story first published: Monday, March 5, 2018, 16:46 [IST]