For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்! அப்ப உண்மை என்ன?

காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்! அப்ப உண்மை என்ன?

By Staff
|

பரவலாக இந்த செய்தியை நாம் அனைவரும் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆம்! காமராஜர் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி. இன்று தமிழகம் கல்வி ரீதியாக இந்தியாவில் தலை தூக்கி நிற்கிறது எனில் அதற்கு முழு காரணம் காமராஜர் ஐயா தான். தமிழகத்திற்கு இவருக்கு அடுத்ததாக ஒரு தலை சிறந்த முதல்வர் கிடைக்க வில்லை என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கவலையாக இருக்கிறது.

Dams Constructed in Tamil Nadu After Kamarjar Regime!

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகளே கட்டப்படவில்லை என்ற கருத்து பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தான் உண்மை என்று நம்மில் 99% பேர் நம்பியும் வருகிறோம். இது பொய் என்றால் நிச்சயம் பெரும்பாலானோர் நம்ப மாட்டார்கள். ஆனால், இது பொய் என்பது தான் உண்மை.

காமராஜர் ஆட்சிக்கு பிறகு பெரியதாக அணை எதுவும் கட்டப்படவில்லை எனிலும், கடைசியாக 2011ம் ஆண்டு வரை அணை கட்டப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மை. ஆம், தமிழகத்தில் கடைசியாக கட்டப்பட்ட அணை மாம்பழத்துறையாறு அணை. இது 2010 -11 ஆண்டில் திறக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காமராஜர் ஆட்சியில்!

காமராஜர் ஆட்சியில்!

மேட்டூர் அணை, பாபநாச அணை போன்ற பிரிட்டிஷ் ஆட்சியின் போதே கட்டப்பட்டது. இதன் பிறகு காமராஜர் ஆட்சியின் கீழ் 1954 -63க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே, கீழ் பவானி, ஆரணியாறு, வைகை நீர் தேக்கம், அமராவதி அணை, சாத்தனூர் அணை, பரம்பி குளம், நெய்யாறு ஆரணியாறு, கிருஷ்ணகிரி, ஆழியாறு, வீடூர் அணை போன்றை கட்டப்பட்டன.

இந்த அனைத்து அணைகளையும் காமராஜர் அய்யா தனது கைகளால் திறந்து வைத்த பெருமைக்கு உரியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மாநிலத்திற்கும்...

பிற மாநிலத்திற்கும்...

தமிழகத்திற்கு என்று மட்டுமில்லாமல்... தமிழ்நாடு பிரிவதற்கு முன் கேரளாவில் மலம்புழா அணை கட்டப்பட்டது. இது பாலக்காடு மற்றும் அந்த பகுதியை சுற்றிலும் அமைந்திருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது.

காமராஜர் இறந்த பிறகும் அவரது புகழை சுமந்து நிற்கின்றன இந்த அணைகள். அணைகள் மட்டுமின்றி கல்விக்கும் நிறைய சேவை செய்திருக்கிறார் காமராஜர். இவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.

அடுத்து வந்தவர்கள்...

அடுத்து வந்தவர்கள்...

காமராஜர் ஆட்சியில் தான் பெருமளவு அணைகள் கட்டப்பட்டன. மேலும் நீர் மின் நிலையங்களும் செயற்படுத்தப்பட்டன. இதனாலேயே காமராஜர் ஆட்சிக்கு பிறகு வந்தவர்கள் தமிழகத்தில் அணைகளே கட்டவில்லை என்ற போலியான பிம்பம் உருவானது.

காமராஜரின் ஆட்சிக்கு பிறகு 1963ல் இருந்து ஏறத்தாழ அணைகள், தடுப்பு அணைகள் என 70க்கும் மேற்ப்பட்ட நீர் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் சிலவன மட்டுமே பெரியளவில் கட்டப்பட்டன. மற்றவை எல்லாம் சிறிய அளவில் தடுப்பு அணைகளாகவே அமைந்தன.

உதாரணங்கள்...

உதாரணங்கள்...

1965 - கோமுகிண்டி நீர்பாசன அணை (கள்ளக்குறிச்சி )

1967 - பெரியகுளம் மஞ்சளாறு அணை மற்றும் திருமூர்த்தி அணை (உடுமலைப்பேட்டை)

1968 - உப்பாறு (ஈரோடு)

1970 - மணிமுக்தானாதி அணை (கள்ளக்குறிச்சி)

2001 - சோத்துப்பாறை (கொடைக்கானல்)

இதன் மூலம் காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணைகள் ஏதும் கட்டப்படவில்லை என்ற கூற்று பொய் என்பது உறுதியாகிறது.

 கடைசி அணை!

கடைசி அணை!

தமிழகத்தில் கடைசியாக கட்டப்பட்ட அணை மாம்பழத்துறையாறு அணை. இது கன்னியாக்குமரி மாவட்டத்தில் விவசாய நீர் பாசனத்திற்காக கட்டப்பட்டது. அதன் பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி மற்றும் சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் வந்த போதிலும் கூட அதை சேகரிக்க தமிழக அரசு எந்த அணையும், தடுப்பு அணையும் கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாம்பழத்துறையாறு!

மாம்பழத்துறையாறு!

மாம்பழத்துறையாறு அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டிருக்கிறது. 80அடி உயரம் உள்ள இந்த மாம்பழத்துறையாறு அணையின் மூலம் 25 குளங்கள் மற்றும் 900க்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசன உதவி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணையை 2007ம் ஆண்டு ஏறத்தாழ 21 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு கட்ட துவங்கியது. இதை கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் நாள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dams Constructed in Tamil Nadu After Kamarjar Regime!

After Kamarajar Period in Tamil Nadu Nearly 70 Dams Has been Constructed!
Desktop Bottom Promotion