இந்தியாவில் நடந்த சில சர்ச்சைக்குரிய போராட்டங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்தியாவில் மட்டுமே போலி சாமியார்கள் கற்பழித்தாலும், கொள்ளையடித்த அரசியல்வாதிகள் சிறை சென்றாலும், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் m அரணம் அல்லது கொலை செய்யப்பட்டாலும் கூட போராட்டங்கள் நடத்தப்படும். மற்றப்படி மக்கள் நலனுக்காகவோ, விவசாயம் அழிந்து வருவதோ ஒட்டியோ ஒரு போராட்டமும் நடக்காது.

அம்மா சிறை சென்றதில் இருந்து சில திரஈப்படங்கள் வெளியாவதற்கு, திருட்டு தனமாக பாடல் வெளியானதற்கு என வீண் போராட்டங்கள் பல நம் தேசத்தில் நடந்துள்ளது. அப்படியான வீண் காரணங்களுக்காக வெடித்த சர்ச்சை போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் என்று கூறி பிரியாணி உண்ட போராட்டம் வரை ஒரு சிறிய கண்ணோட்டம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மா ஜெயில்

அம்மா ஜெயில்

கடந்த 2011-16 ஆண்டுக்குட்பட்ட அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பு செய்தி வெளியான அடுத்த நிமிடமே தமிழகம் கலவர பூமியாக மாறியது.

வீண் போராட்டம்

வீண் போராட்டம்

அப்போது, அதிமுகவினர் ஏதோ தியாக செம்மல் விடுதலை போராட்ட தியாகி சிறை சென்றது போல கருது தமிழகம் எங்கிலும் பல இடங்களில் கத்தி, கூச்சலிட்டு, கதறி அழுது கடை அடைப்பு நடத்த கூறி ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சைக்கும், எதிர் கட்சியினர் கண்டனங்களுக்கும் ஆளானது.

லீக்

லீக்

சிம்பு அனிருத் காம்போவில் என்ன ****க்கு லவ் பண்றோம் என்ற பாடல் திருட்டுத் தனமாக இணையத்தில் லீக் ஆனது. சிம்பு எப்போதும சர்ச்சை அரசன் என்பதாலும், ஏற்கனவே எவண்டி உன்ன பெத்தான் பாடல் மூலமாக தமிழக மாதர் சங்கங்கள் இவர் மீது கடுப்பில் இருந்ததாலும். இவர் வெளியிடாத, முழுமை பெறாத நிலையில் இருந்த பாடலின் திருட்டு வெர்ஷனை எதிர்த்து தமிழகம் எங்கிலும் பல இடங்களில் இவருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவில் மாதர் சங்கங்கள் பலவன போர்கொடி தூக்கின.

இன்ப சுற்றுலா?

இன்ப சுற்றுலா?

ஆனால், இந்த சங்கங்கள் கற்பழிப்பு சம்பவங்களின் போதோ, சுவாதி கொலை வழக்கின் போதோ எங்கே இன்ப சுற்றுலா என்றனர் என்பது தமிழகத்தில் யாருக்கும் தெரியாத பெரிய புதிர். பிறகு பல வழக்குகள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து நீதிமன்ற படியேறி சிம்பு ஒருவழியாக இயல்பு நிலைக்கு திரும்பினார்.

உண்ண விரதம்

உண்ண விரதம்

இந்தியாவிலேயே, இந்த வேர்ல்டுலேயே உண்ணாவிரதத்திற்கு உணவு இடைவேளை அளித்த ஒரே அமைப்பு / கழகத்தினர் அதிமுகவினர் தான். சமீபத்தில் காவிரி நீர் வாரியம் அமைக்கக் கோரி இவர்கள் தமிழகம் எங்கிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் நடந்த போராட்டத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இடைவேளை?!

இடைவேளை?!

பல இடங்களில் உணவு இடைவேளை மற்றும் மாலை நொறுக்குதீனி இடைவேளைகள் எடுத்துக் கொண்ட சாவகாசமாக உண்ட மயக்கத்துடன்உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் இவர்கள் தான்.

இந்த வேதனைக்குரிய சாதனையை உலகில் எந்த பகுதியிலும் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்று மனசாட்சி உள்ளவர்களால் நம்பப்படுகிறது.

கௌரவம்

கௌரவம்

ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பத்மாவத் திரைப்படத்தில் தங்கள் இனத்தைப் பற்றி தவறாக திரித்துக் கூறப்பட்டிருக்கிறது என திரைப்பட ஷூட்டிங்கின் போதிருந்தே இவர்கள் போராட்டம் செய்து வந்தனர். இதனால் தயாரிப்பு நிலையின் போது பெருத்த பொருட்சேதம் மற்றும் பண இழப்பு ஏற்பட்டது. படத்தை ஒருவழியாக தயாரித்து பிரமோத் செய்து திரைக்கு கொண்டு வரலாம் என்றால், சென்சார் கிடைக்க விடாமல் பல போராட்டங்கள் செய்தனர். இதனால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிக் கொண்டே போனது.

ஐநூறு கோடி வசூல்!

ஐநூறு கோடி வசூல்!

கடைசியாக சில ஊடக சேனல் மற்றும் அமைப்பினருக்கு படத்தை ஒளிப்பரப்பி சான்றிதழ் பெற்றனர். ஆனால், இவர்கள் கலவரம் செய்து போராட்டம் நடத்திய அளவிற்கு படத்தில் எப்படி எந்த குறையும் இல்லை, ராஜ்புத் வம்சத்தை பற்றி தவறாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. படமும் ஐநூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாகிவிட்டது.

டைம் டூ லீட்

டைம் டூ லீட்

விஜய் தனது வாழ்நாளில் மற க்க முடியாத படம் தலைவா. அது இந்த படத்தின் கதாபாத்திரம் அல்லது, கதைக்காக அல்ல. அந்த படத்தின் ஸ்லோகன் டைம் டூ லீட் என்ற ஒற்றை வரியால். அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக அரசு இதற்கு இலைமறைகாயாக எதிர்ப்பு கொண்டிருந்தது என்று தகவல்கள் கூறப்பட்டன.

எஸ்கேப்!

எஸ்கேப்!

திடீரென முளைத்த ஒரு புரட்சி அமைப்பு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், படத்தின் தலைப்பில் இருந்து டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்ட பிறகு திரைப்படம் வெளியாக சுமாரான படமாக அமைந்தது.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

சமீபத்திய சர்ச்சைக்குரிய போராட்டம் என்றால் அது இதுதான். தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த ஸ்ரீ ரெட்டி எனும் நடிகை கடந்த சில வாரங்களாக தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்களை பெயரை, முகத்திரையை கூடிய விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால், இவருக்கு திடீரென நிறைய ஃபாலோவர்ஸ்களும் கூடினார்கள்.

நீக்கம்!

நீக்கம்!

இப்படியாக ஃபேஸ்புக்கில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ ரெட்டி திடீரென ஒருசில நாட்களுக்கு முன்னர் அரைநிர்வாணமாக சாலையில் தனது ஆடைகளை கழற்றி போராட்டத்தில் குதித்தார். இது ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆனது. இதன் பிறகு, தெலுங்கு சினிமா நடிகர் அமைப்பு இவரை அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கியதோடு, இனிமேல் இவருடன் யாரும் நடிக்கவும் மாட்டோம் என்றும் கூறினர்.

பிரியாணி அண்டா திருட்டு

பிரியாணி அண்டா திருட்டு

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் 2016 செப்டம்பர் 22ம் தேதி கோவையில் இந்து முன்னணி, RSS அமைப்புகள் ஒன்று கூடி கோவையில் பெரும் கலவர போராட்டம் நடத்தினார்கள். இதில் செல்போன் கடைகளை உடைத்து செல் போன்களை திருடி சென்றனர். கார், பேருந்தும் ஆட்டோ போன்ற வாகனங்களை அடித்து உடைத்து பொது சொத்து சேதம் உண்டாக்கினார்கள்.

அஜ்மீர் பிரியாணி கடை!

அஜ்மீர் பிரியாணி கடை!

இவற்றுக்கு எல்லாம் மேலாக மாட்டு இறைச்சி உண்ண மாட்டோம் என்று எதிர்ப்பு குரல் கொடுத்த வந்த இவர்களால், அஜ்மீர் பாய் பிரியாணி கடையில் இருந்து பிரியாணி அண்டா திருடி எடுத்து செல்லப்பட்டது.

அந்த கடையில் இருந்து பீப் பிரியாணியுடன் அண்டாவை களவாடி சென்றனர் என அன்றில் இருந்து இன்று வரை மீம் டெம்ப்ளேட்கள் படு வைரலாக பகிரப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: india இந்தியா
English summary

Controversial Protest in India!

Here is a list of controversial protests that held on India