For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலியை இ-பேயில் விற்க முயன்ற காதலன், விளையாட்டு வினையானதால் விபரீதம்!

By John
|

ஒரு காதலன் தன் காதலி யை இ-பே ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்க விளையாட்டாக முயற்சி செய்தார். மேலும், அதில் பொருள் குறித்த டிஸ்க்ரிப்ஷனில், அவர் பயன்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். விளையாட்டாக காதலர் மேற்கொண்ட முயற்சி அவரையே திருப்பி அடித்தது.

A man who put his girlfriend on eBay and the plan backfired him

இவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் பலரும் அவருக்கான விலையை பிட் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் டேல் லீக்ஸ் காதலி விற்பனை பதிவு பிட்டிங் 70 ஆயிரம் யூரோக்களை எட்டியது. இதன் இந்திய மதிப்பு ஏறத்தாழ 60 இலட்சம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைமீறி சென்றது!

கைமீறி சென்றது!

டேல் லீக்ஸ் (34), தன் ஓராண்டு கால துணையான கெல்லி கிரேவ்ஸ்'ஐ (37) கேலி செய்ய வேண்டி ஆன்லைனில் அவரை விற்பதாக ஒரு பதிவிட்டார். மேலும், அந்த பதிவில் பிராடக்ட் டிஸ்க்ரிப்ஷன்ல். 'fairly tidy but close up shows signs of wear', 'the rear ends leaks a bit but nothing that can't be plugged'. என்றும் கொஞ்சம் ஏடாகூடமாக எழுதி விற்பனை பதிவை துவக்கி வைத்தார்.

சின்ன காமெடியாக முடியும் என்று நினைத்து டேல் துவக்கி வைத்த இந்த பதிவு, ஒருக்கட்டத்தில் அவரது கைமீறி செல்ல ஆரம்பித்தது. உலகின் பல இடங்களில் இருந்து கெல்லியை வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்து டேல்க்கு மெசேஜ் செய்ய துவங்கினார்கள்.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

பிட்டிங்!

பிட்டிங்!

டேல் பதிவிட்டு 24 மணி நேரத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கேர்ள் ஃபிரெண்ட் விற்பனை பதிவனை கண்டிருந்தனர். மேலும், நூறு யூரோவில் துவங்கிய பிட்டிங் மளமளவென்று எகிறி ஒரு கட்டத்தில் 70,000 யூரோவை எட்டியது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 60 இலட்சம் ஆகும்.

டேல் கோல்செஸ்டர், எசெக்ஸ் எனும் பகுதியில் வசித்து வருகிறார். இதில் சிலர் டேலை சோதிக்கும் வகையில் டெஸ்ட் டிரைவ் கிடைக்குமா என்றும், இதற்கு முன் எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு நாராசமாக நச்சரிக்க துவங்கினார்கள்.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

ஆரம்பத்தில்

ஆரம்பத்தில்

லேண்ட்ஸ்கேப் கார்டனிங் கம்பெனி உரிமையாளரான டேல், "நான் இ-பேவில் கேர்ள் ஃபிரெண்ட் விற்பனை குறித்து பதிவிட்டதில் இருந்து தொடர்ந்து அந்த பதிவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். கெல்லி, அப்போது என்னிடம் வந்து எதை பார்த்து இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாய்? என்று வினவினார்.

அப்போது தான் நான் செய்த மொத்த காரியமும் கெல்லிக்கு அறிய வந்தது. ஆனால், கெல்லி இந்த பதிவை எல்லாம் யார் காண போகிறார்கள் என்று நினைத்தார். இதனால் எதுவும் நடக்காது என்று கருதினார். சிறிது நேரம் கழித்து நானும் கெல்லியும் டின்னருக்கு வெளியே கிளம்பிவிட்டோம்.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

டின்னர்!

டின்னர்!

டின்னருக்கு வெளியே சென்ற பிறகு தான் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல நாடுகளில் இருந்து கெல்லியை வாங்க பலரும் முன்வந்து மெசேஜ் அனுப்ப துவங்கினார்கள். அதை நான் கெல்லிக்கு தெரியாமல் டேபிளுக்கு கீழே மொபைலை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். கெல்லியின் மதிப்பு இ-பேயில் எகிறிக் கொண்டிருந்ததை நான் அவரிடம் கூறவில்லை.

ஆரம்பத்தில் என் நண்பர்கள் சிலரே கேலியாக பிட் செய்தனர். ஆனால், ஒருக்கட்டத்தில் யார், எவர் என்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து பிட்டிங்கை எகிற செய்தனர். அப்போது தான், நாம என்ன பண்ணிட்டோம்னு இங்க இவங்க இப்படி பிட் பண்ணிட்டு இருக்காங்க., என தோன்றியது.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

நல்லவேளை!

நல்லவேளை!

நல்லவேளையாக கெல்லி இதை எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக தான் எடுத்துக் கொண்டார். ஒருவேளை இதை சீரியஸாக அவர் எடுத்திக் கொண்டிருந்தால் என்ன ஆவது. பிட்டிங் எகிற, எகிற கெல்லி ஆர்வமாக அதை கண்டுக் கொண்டிருந்தார். சிலர் நாராசமாகவும் கமெண்ட் செய்ய துவங்கினார்கள்.

எப்படியோ, இந்த பதிவை கண்ட இ-பே நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த பதிவை எப்போது நீக்கினார்கள் என்று தெரியாவில்லை. எப்படியும் இலட்சக்கணக்கானவர்கள் இந்த பதிவை கண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன் என டேல் கூறி இருந்தார்.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

கெல்லி, கேலி!

கெல்லி, கேலி!

இந்த விளையாட்டு வினையாகி முடிந்த பிறகு, கெல்லி, "என்னை எத்தனை பணத்திற்கு விற்றாய், ஒருவேளை யாராவது என்னை வாங்கி இருந்தால், நீ என்னை மிஸ் செய்திருப்பாயா?" என்றெல்லாம் கேலியாக டேலிடம்வினவி இருக்கிறார்.

அதற்கு டேல்," கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறேன். ஒருவேளை உன்னை விற்றிருந்தால் லம்போர்கினி அல்லது ஃபெராரி கார் வாங்கி இருப்பேன். அது இப்போது முடியாமல் போய்விட்டது என்று திருப்பி கலாய்த்திருக்கிறார்.

Image Source: dale.leeks / kelly.m.greaves / facebook

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A man who put his girlfriend on eBay and the plan backfired him

A man who put his girlfriend on eBay in a listing saying she 'you can see she's been used' admits the plan backfired when he received bids of up to £70,000.
Story first published: Thursday, October 11, 2018, 16:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more