சகுனி தன் வாழ்வில் கண்ட பெரும் சோகம்... அதன் விளைவே குருஷேத்திர போர்!

By Staff
Subscribe to Boldsky

சகுனி...! இன்றும் தந்திரமாக... மறைந்திருந்து கோழை போல தாக்கும் நபர்களை, உடன் இருந்து துரோகம் செய்வோரை சகுனி என்று கூறும் வழக்கம் நம் மத்தியில் இருக்கிறது. சகுனி மகாபாரதத்தின் முக்கியமான கதாப்பாத்திரம்.

ஒருவேளை சகுனி இல்லாமல் இருந்திருந்தால் குருஷேத்திர போரே மூண்டிருக்காது. ஏன் பாண்டவர்கள் சூது விளையாடி இருக்க மாட்டார்கள். அவர்களே ஆட்சி செய்து வந்திருக்கலாம். துரியோதனன் மனதில் வேறு யாரும் அவ்வளவு வஞ்சனை எண்ணத்தை விதைத்திருக்க மாட்டார்கள்.

சகுனி ஒரு மாஸ்டர்மைண்ட் ஆப் மகாபாரதம் என்று தான் கூற வேண்டும். பீஷ்மர் செய்த ஒரு தவறு, அவரையே அநீதி பக்கம் நிறுத்தி நீதிக்கு எதிராக போரிட வைத்தது. இவை அனைத்துக்கும் ஒருவகையில் சகுனி தான் காரணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகன்கள்!

மகன்கள்!

சகுனிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் பெயர் உளுக்கா, மற்றொருவர் பெயர் விருக்சூரா. இவரது மகன்கள் பலமுறை ஹஸ்தினாபுரத்தில் இருந்து வெளியேறி தங்களுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ அழைப்பு விடுத்த போதும். பீஷ்மர் மீது இருந்த கடுங்கோபம் மற்றும் தீராத பகை காரணமாக மகன்களின் அழைப்பை தவிர்த்து வந்தார் சகுனி.

Image Source: commons.wikimedia

நூறு!

நூறு!

சகுனிக்கு நூறு மைத்துனர்கள் (கௌரவர்கள்) என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், சகுனிக்கு நூறு உடன் பிறந்தவர்களும் இருந்தனர். 99 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உட்பட சகுனியுடன் பிறந்தவர்கள் நூறு பேர். அனைவருக்கும் இளையவர் சகுனி. அதே போல அனைவரை விடவும் மிகவும் புத்தி கூர்மை கொண்டிருந்தவரும் சகுனி தான்.

பீஷ்மர் மீது பகை!

பீஷ்மர் மீது பகை!

சகுனிக்கு பாண்டவர்கள் மீது பெரிதாக எந்த பகையும் இல்லை. மாறாக மீஷ்மர் மீது தான் பெரும் பகை கொண்டிருந்தார். தனது ஒரே சகோதரியை கண் பார்வை இல்லாத ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி, தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன் கண் முன் பட்டினியில் சாக காரணாமாக இருந்த பீஷ்மர் மீது பெரும் பகை, விரோத குணம் கொண்டிருந்தார் சகுனி. அதனாலயே அவரது குலத்தை அழிக்க வேண்டும் என்றும் கருதினாராம் சகுனி.

Image Source: hinduworld

மாயாவி!

மாயாவி!

மாய பிம்பங்கள் உண்டாக்குவதில் சகுனி வல்லவர் என்றும் கூறப்படுகிறது. பகடை விளையாடுவதில் சகுனி ஒரு கைத்தேர்ந்த வல்லவர். மகாபாரதத்தில் சகுனி விளையாடிய தாயம் பெரும் திருப்பத்தை உண்டாக்கியது. யுதிஷ்டிரர் போட்டியில் சூது விளையாட்டில் தோல்வி அடைய சகுனியின் மாய தந்திரங்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

Image Source: awaaznation

எலும்புகளால்

எலும்புகளால்

சகுனி விளையாட பயன்படுத்தும் பகடை அவரது தந்தையின் எலும்பு கூட்டில் இருந்து உருவாக்கியது. இதனால் சகுனி அந்த பகடையை உருட்டும் போதெல்லாம்... அவருக்கு வேண்டிய எண்கள் விழும் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

தான் சாகும் தருவாயில் சகுனிக்கு தாயம் மீதிருந்த விருப்பம் அறிந்து, தனது எலும்புகள் மூலம் பகடை செய்துக் கொள், அதில் என் தீராத ஆத்திரம், கோபம் நிறைந்திருக்கும். நீ நினைக்கும் போது, உன் விருப்பத்திற்கு ஏற்ற எண்களே விழும் என்று கூறி இருந்தார் சகுனியின் தந்தை சுபலன்.

நொண்டி!

நொண்டி!

சுவலன் குடும்பத்தில் கடைசி பிள்ளை சகுனி. பீஷ்மர் இவரது ஒட்டுமொத்த குடும்பத்தை சிறையில் அடைத்து ஒரு நாளுக்கு ஒரு கைப்பிடி உணவு மட்டும் அளித்து வந்தார். அனைவரும் இறந்துவிட்டால் யாராலும் பீஷ்மரை பழிவாங்க முடியாது என்று எண்ணிய சுவலன். தங்களில் ஒருவனை தேர்வு செய்வது அவனுக்கு சோறுடன் பகையும் ஊட்டி பழிவாங்க தயார் செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, சகுனி தேர்வானார். அனைவரும் சகுனி கண்முன்னே மடிந்தனர். கடைசியாக சுவலன் இறக்கும் முன்னர் சகுனியின் கணுக்காலை உடைத்து நொண்டி ஆக்கினார். ஒவ்வொரு முறை நீ நொண்டி நடக்கும் போதும் கௌரவர்கள் மீதான பகை மறக்க கூடாது என்று கூறி இறந்தார் சுபலன்.

சகாதேவன்!

சகாதேவன்!

சகுனியை குருஷேத்திரம் போரின் 18 வது நாளில் சகாதேவன் கொன்றார். சூது விளையாட்டில் சொத்துகளை இழந்து கடைசியாக தங்கள் மனைவியை வைத்து விளையாடினார்கள் பாண்டவர்கள். துரௌபதியையும் சூதில் தோற்ற பாண்டவர்கள் அவமானத்திற்கு ஆளாகினார்கள். அந்த அரங்கில் வைத்தே சகுனியின் திட்டத்தால் திரௌபதி மானபங்கதிற்கு ஆளாகினாள். இதற்கு பழி தீர்க்கவே சகுனியை தன் கையால் கொள்வேன் என்று சப்தம் ஏற்று போரில் கொன்றார் சகாதேவன்.

கோயில்!

கோயில்!

ராவணனுக்கு கோவில் இருப்பது போலவே, சகுனிக்கும் கோவில் இருக்கிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் குறவர் என்ற இனத்தை சேர்ந்த மக்கள் சகுனியின் நற்குணங்களை போற்றும் வகையில் பவித்ரேஷ்வரம் என்ற கோவிலை கட்டி வழிப்பட்டு வருகிறார்கள்.

Image Source: mahabharatham.arasan

துவாபர யுகம்!

துவாபர யுகம்!

இப்போது நடந்துக் கொண்டிருப்பது கலியுகம், இதற்கு முன்னர் நடந்து முடிந்தது துவாபர யுகம். இந்த யுகமானது மக்கள் உறவுகள் சார்ந்த உணர்ச்சிகளை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களே துரோகம் விளைவிப்பது போன்றதை இது குறிக்கிறது. குருஷேத்திர போரில் கௌரவர்கள், பாண்டவர்களே அடித்துக் கொண்டனர். இந்த போருக்கு வினையாக கருதப்படுபவர் சகுனி.

சகுனியை கோழை என்று கூறுவார்கள். தனது எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றே அனைவரும் எண்ணுவார்கள். ஆனால், சகுனி தன் எதிரியாக கருதிய குலத்தை உடன் இருந்தே அழிக்க எண்ணினார்.

Image Source: commons.wikimedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    8 Lesser-Known Facts About Shakuni Mama That You Missed to Know

    Shakuni might have earned your loath for sure but, he will always be an essential part of history. After all, not everyone has the power to win kingdoms through just a mere dice game. Read on to see how much you know about him.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more