Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பார்த்தாலே வாயை பிளக்க வைக்கும் 435 கிலோவில் அசுர வளர்ச்சியில் ஒரு மல்யுத்த வீரர்!!
பாகிஸ்தானைச் சேர்ந்த கான் பாபா என்பவர் தன்னுடைய அதீத உடல் எடையினால் உலகப் பிரபலம் ஆகிவிட்டார்.
மல்யுத்தப் போட்டி, எடை தூக்கும் போட்டிகள் என்றால் சிலருக்கு மிகவும் பிடிக்கும். இப்படி இதில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இருபத்தி ஐந்து வயதான அர்பப் கிஹர் ஹயத் என்பவர் உலகிலேயே அதிக எடை கொண்ட மல்யுத்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
1960 களில் மார்வெல் என்பவர் பிரம்மாண்ட மனிதனான ஹல்க்கை அனிமேஷன் மூலமாக அறிமுகப்படுத்தினார். கட்டுமஸ்தான உடல், கம்பீர நடை உடல் முழுவதும் பச்சை நிறம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்வளவு வருடங்கள் கழித்து ஹல்க் உயிருடன் வருவார் என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

குறையை நிறையாக மாற்றலாம் :
பாகிஸ்தானின் மார்தானைச் சேர்ந்த ஹயத்துக்கு 18 வயதான போது உடல் எடையில் மாற்றம் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து உடல் எடை கூடிக் கொண்டேயிருக்க, அதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறார்.

உடல் எடை :
தற்போது 435.5 கிலோ எடையில் இருக்கிறார். ஒரு நாளைக்கு பத்தாயிரம் கலோரி உணவுகளை எடுத்துக் கொள்கிறார். காலையில் 36 முட்டை 5 லிட்டர் பால் குடிக்கிறார், மதியத்திற்கு 3 கிலோ மட்டனெடுத்துக் கொள்கிறார்.

இணையப் பிரபலம் :
கையால் ட்ராக்ட்ரை இழுப்பது, காரை இழுப்பது போன்ற வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டார். அது இணையத்தில் பயங்கர வைரலாய் பரவியது. அதை விட 2012 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைப்பெற்ற பளு தூக்கும் போட்டியில் 5000 கிலோ எடையை தூக்கி அசத்தியுள்ளார்.
இன்று வரை இவரது இந்த சாதனையை யாருமே முறியடிக்கவில்லை.

எந்த கஷ்டமும் இல்லை :
இப்படி அதிக எடையுடன் இருப்பதால் தனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்கிறார் ஹயத். உடலும் ஆரோக்கியத்துடன் இருப்பதால் எடை அதிகரித்தாலும் கவலையில்லை .
இப்போது சந்திக்கும் ஒரே பிரச்சனை காரின் உள்ளே உட்காருவதும் வெளியே வருவது தானாம். பளு தூக்குதலில் உலக சாம்பியன் ஆகவேண்டும் என்பதே இவரது கனவாக இருக்கிறது.

கவலை :
தன்னிடமுள்ள குறையை தன் பலமாக மாற்ற நினைத்தவருக்கு சவாலான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானில் பளு தூக்கும் போட்டி இல்லை என்பது தான். அதனால் புதிது புதிதாக பல்வேறு ஸ்ட்ண்ட்களை முயற்சித்துக் கொண்டிருக்கிறார் ஹயத்.

பிரபலம் :
மார்டானில் மிகவும் பிரபலமாகிவிட்டார் ஹயத். தினமும் இவரது வீடு தேடி வந்து செல்ஃபி எடுத்துச் செல்கிறார்களாம். இங்கிருக்கும் மக்களின் அன்பும் ஆதரவும் எனக்கு நிறையவே கிடைக்கிறது. அதற்காக இங்கேயே நின்றுவிடமாட்டேன் உலகளவில் நான் பிரபலமாகவேண்டும் அதுவே என் லட்சியம் என்கிறார் ஹயத்.

உடை :
ஹயத் எப்போதும் டார்க் நிறத்தில் மிகப்பெரிய ப்ளைன் உடையையே தேர்வு செய்கிறார். உடையோடு மார்பு பகுதியில் நீளமான பெட்ஷீட்டை போர்த்திக் கொள்வதை தன்னுடைய ஸ்டைலாக பின்பற்றுகிறார். இது இருக்கும் எடையை விட இன்னும் பிரம்மாண்டமாய் காட்டுகிறதாம்.



Click it and Unblock the Notifications
