தன் பாலினத்தை தானே தேர்ந்தெடுக்கப்போகும் உலகின் முதல் குழந்தை!!

By: Aashika Natesan
Subscribe to Boldsky

கனடாவைச் சேர்ந்த திருநங்கை தன் குழந்தைக்கு பாலினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதை குறிக்கும் விதமாக பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். அதோடு குழந்தை வளர்ந்து தான் என்ன பாலினம் என்பதை குழந்தையே தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா?

கனடாவைச் சேர்ந்த செரில் அட்லி (searyl atli) என்ற குழந்தை உலகிலேயே முதன்முறையாக பாலினமற்ற குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக காண்போம்.

World’s First Child to Have Gender Marked as ‘Unknown’

Image Source

கனடாவைச் சேர்ந்த திருநங்கை கோரி டோட்டி (kori doty)க்கு கடந்த நவம்பர் மாதம் செரில் அட்லி என்ற குழந்தை பிறந்தது. இக்குழந்தையுடய பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பாலினத்தை குறிக்காமல் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதை குறிக்கும் விதமாக undertermined or unassained என்பதை குறிக்கும் விதமாக " U " என்று குறிப்பிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பல மாத போராட்டங்களுக்குப் பிறகு அட்லியின் சான்றிதழ் அவர் விருப்படியே பாலினம் குறிக்காமல் வெளியானது . இதன்மூலம் உலகிலேய் முதன் முறையாக பாலினமற்ற குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது செரில் அட்லி.

World’s First Child to Have Gender Marked as ‘Unknown’

Image Source

இது குறித்து, கோரி டோட்டி கூறுகையில், எனது குழந்தை தான் என்ன பாலினம் என்பதை குழந்தையே தீர்மானித்துக் கொள்ளட்டும், நான் பிறந்தவுடன் என் பெற்றோர் குறிப்பிட்ட பாலினத்திற்கும் நான் தற்போது இருக்கும் பாலினமும் வேறுவேறு இப்போது வரை சான்றிதழ்களில் என் பாலினத்தை மாற்ற போராடி வருகிறேன். இப்பிரச்சனை என் குழந்தைக்கு வேண்டாம் என்றுமுடிவெடுத்ததாலேயே இம்முடிவு எடுத்துள்ளத்தாக குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்போரிடத்தில் இன்னும் தெரியாது அதை தெரிந்து கொள்ள உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று வாயடைத்துவிடுகிறார் டோட்டி.

English summary

World’s First Child to Have Gender Marked as ‘Unknown’

A transgender's Child's Gender Marked as ‘Unknown’- World's first child
Subscribe Newsletter