நெட்டில் லீக்கான மோனாலிசா ஓவியத்தின் நிர்வாண படம்!

Posted By:
Subscribe to Boldsky

உலக புகழ்பெற்ற ஓவியர்களில் முதன்மை வகிப்பவர் லியனார்டோ டாவின்சி. இவரது மோனாலிசா ஓவியம் இன்றளவும் உலகின் சிறந்த படைப்பாக கருதப்பட்டு வருகிறது.

மோனாலிசா ஓவியத்தில் பல மர்மங்கள், இரகசியங்கள் புதைந்திருக்கிறது என சிலர் கூறினும். அதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, மோனாலிசா ஓவியத்தில் புருவங்கள் இல்லாதது.

மேலும், அவளது மெல்லிய புன்னகை மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறதா? சோகத்தை வெளிப்படுத்துகிறதா? என்பதும் ஒரு விவாத பொருளாகவே இருக்கிறது.

தற்போது இந்த புகழ்பெற்ற மோனாலிசாவின் நிர்வாண ஓவியம் வெளியாகி வைரலாகி வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாண படம்!

நிர்வாண படம்!

சமீபத்தில் மோனாலிசாவின் நிர்வாண ஓவியம் என ஒரு படம் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. இதை பல நிபுணர்கள் லியனார்டோ டாவின்சி தான் வரைந்திருப்பார் என்றும், இது மோனாலிசாவின் நிர்வாண வெர்ஷன் ஓவியம் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.

Image Credit:musee conde

அறிகுறிகள்!

அறிகுறிகள்!

இந்த நிர்வாண ஓவியம் கரி கொண்டு வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மோனாலிசாவின் உடல் அமைப்பும், இந்த நிர்வாண ஓவியத்தில் தோற்றமளிக்கும் பெண்ணின் உடல் அமைப்பும் ஒன்று போல இருப்பதே, இது மோனாலிசாவின் நிர்வாண வெர்ஷன் ஓவியம் என சந்தேகிக்க பெரிய காரணமாக இருக்கிறது.

Image Credit:Leonardo da Vinci

உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகள்!

மோனாலிசாவின் ஓவியத்திலும், தற்போது வெளியாகியுள்ள இந்த நிர்வாண ஓவியத்திலும் இருக்கும் பெண்களின் கைகள், மார்பு, உடல் அமைப்பு போன்றவை ஒரே மாதிரி இருப்பதால், இது மோனாலிசாவின் நிர்வாண பிரதியாக இருக்கக் கூடும். எனவே, இதை டாவின்சி வரைந்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

லோவ்ரீ அருங்காட்சியகம்!

லோவ்ரீ அருங்காட்சியகம்!

லோவ்ரீ அருங்காட்சியக ஆய்வாளர்கள் இந்த ஓவியத்தின் ஒரு பகுதியை டாவின்சி வரைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என கருதுவதாக கூறியுள்ளனர். ஆனால், இந்த ஓவியத்தின் தீற்றல்கள் வலது கை பழக்கம் இருக்கும் நபர் வரைந்தது போல இருக்கிறது. ஆனால், டாவின்சி இடது கை பழக்கம் கொண்டவர்.

ஆய்வுகள்!

ஆய்வுகள்!

இந்த படத்தை வைத்து இனிவரும் காலங்களில் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. உலகின் தலைசிறந்த பல ஓவியர்கள் மற்றும் ஆய்வாளர்கள், மோனாலிசாவின் நிர்வாண ஓவியம் என கருதப்பட்டு இந்த படத்தை ஆய்வு செய்ய காத்திருக்கிறார்கள்.

ஆய்வுகளின் முடிவில் தான் இது மோனாலிசாவின் நிர்வாண வெர்ஷன் ஓவியமா? டாவின்சி தான் வரைந்தாரா? என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World Famous Painting Monalisa's Nude Version Leaked On Internet!

World Famous Painting Monalisa's Nude Version Leaked On Internet!