கடவுளைத் தொழும் போது, தவறாமல் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கடவுளை வணங்கும் போது, மந்திரங்களைச் சொல்வது வழக்கமான ஒன்று. ஆனால் அப்படி மந்திரங்களை சொல்லும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த மந்திரத்தின் முழு பலனையும் பெற முடியும். பொதுவாக மந்திரத்தை சொல்லும் போது, நம்மைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் உற்பத்தியாகும்.

When You Pray To God, Do These 7 Things Without Fail For Experiencing Positive Results

ஆனால் நாம் மந்திரங்களைச் சொல்லி துதிக்கும் போது, ஏனோ தானோவென்று சொன்னால், மந்திரம் சொல்லி எந்த பலனுமே கிடைக்காது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, கடவுளை வணங்கி மந்திரங்களைச் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து இனிமேல் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விதிமுறை #1

விதிமுறை #1

மந்திரங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மந்திரங்களை சொல்வதற்கு சிறந்த நேரம் பகல் வேளை தான். அதிலும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4-5 அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் சொல்வது இன்னும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு இந்த நேரங்கள் ஒத்து வராவிட்டால், இரவில் படுக்கும் முன் மந்திரங்களை சொல்லி பின் உறங்கலாம்.

விதிமுறை #2

விதிமுறை #2

காலையில் மந்திரங்களைச் சொல்லும் போது கிழக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும். அதுவே இரவில் என்றால் வடக்கு திசையை நோக்கி சொல்ல வேண்டும்.

விதிமுறை #3

விதிமுறை #3

மந்திரங்களை கண்ட நிலையில் இருந்தவாறு சொல்லக்கூடாது. சரியான நிலை அல்லது ஆசன நிலையில் அமர்ந்து சொல்ல வேண்டும். அதிலும் பத்மாசன நிலையில் அமர்ந்து சொல்வது இன்னும் நல்லது.

விதிமுறை #4

விதிமுறை #4

மந்திரங்களை அமைதியான இடத்தில் அமர்ந்து சொல்ல வேண்டும். மந்திரங்களை சொல்ல ஆரம்பித்த பின், இடத்தை மாற்றக்கூடாது. ஏனெனில் மந்திரம் சொல்ல ஆரம்பித்த இடம் ஆற்றல் நிறைந்த இடமாக மாறியிருக்கும். இடத்தை மாற்றினால், மந்திரத்தின் பலனை பெற முடியாது.

விதிமுறை #5

விதிமுறை #5

தினமும் மந்திரங்களை ஒரே நேரத்தில் தான் சொல்ல வேண்டும்.

விதிமுறை #6

விதிமுறை #6

மந்திரங்களை சொல்லும் போது, துளசி, ருத்ராட்சை அல்லது சந்தன மணிகளைப் பயன்படுத்தி சொல்வது நல்லது. அதிலும் 108 முறை மந்திரம் சொல்லும் போது, இவற்றைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.

விதிமுறை #7

விதிமுறை #7

மந்திரங்களைச் சொல்ல பயன்படுத்தும் ருத்ராட்சம் போன்ற மாலைகளை, மற்றவர்கள் பார்க்கும் படி வைத்து சொல்வதைத் தவிர்த்திடுங்கள். மாறாக ஏதேனும் ஒரு பையினுள் வைத்து சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

When You Pray To God, Do These 7 Things Without Fail For Experiencing Positive Results

You have to keep certain methods and rules in mind while chanting mantras for getting full results of your prayer. Read on to know more...
Story first published: Friday, February 10, 2017, 13:40 [IST]
Subscribe Newsletter