ஏப்ரல் -17 ஆம் தேதி வரை சுக்ரன் பின்னடைவதால் 12 ராசிக்கு என்ன நடக்கும் என பார்க்கலாமா?

Written By:
Subscribe to Boldsky

யாருக்கு திடீரென பேர் புகழ்பதவி வந்தாலும் அவனுக்கு சுக்ரன் உச்சத்தில் இருக்கிறான் என்று கூறுவோம். ரோமன் நாட்டில் வீனஸ் தெய்வம் காதல் மற்றும் அழகுக்கான பெண் தெய்வம் என்று வழிபடுவார்கள்.

Venus in Retrograde till 15th April 2017 - how it will affect your zodiac sign!

நம் நாட்டில் அதனை சுக்ரன் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒருவருடைய கலை, இலக்கியம், போன்றவற்றில் சுக்ரனின் ஆதிக்கத்தால் வெற்றி பெற முடியும் என ஜோதிடம் கூறுகின்றது.

தொழில், கலை, கல்வி, அரசியல் போன்ற துறைகளில் ஜொலிக்க சுக்ரனின் ஆதிக்கமே காரணம் என்றாலும் இந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் -17 ஆம் தேதி வரை , நவகிரகத்தில் சுக்ர தசை பின்னடைதால் ஒவ்வொரு ராசிக்கும் தங்களது உறவு மற்றும் காதல் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் உண்டாகிறது என அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

வருடத்தின் முற்பகுதியில் உங்கள் பழைய உறவுகளை புதுப்பிக்க நேரிடும். ஜூன் முதல் டிசம்பர் வரை நீங்கள் குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையும் தொடங்குவீர்கள். இந்த காலக்கட்டத்தில் எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும்.

ரிஷபம் :

ரிஷபம் :

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவு உண்டாகலாம். ஆனால் உங்களின் பொறுமை மற்றும் அணுகுமுறையின் காரணமாக தக்க வைத்துக் கொள்ளலாம். ஆகவே எதையும் நிதானமாக அணுக பழகுங்கள்.

 மிதுனம் :

மிதுனம் :

துணையை எப்படி அனுசரித்துப் போவது என உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கல் துணையின் குணங்களை தீர்மானிப்பதில் கவனம் தேவை. தவறான விமர்சனத்தை துணை முன்வைக்காதீர்கள். பிரிவிற்கு வழிவகுத்துடும்.

கடகம் :

கடகம் :

உங்களுடைய உணர்வுகளுக்கு சோதனை தரும் வகையில் ஜூன், ஜூலையில் நிகழும். அதனால் துணையுடன் அதிக நேரம் செலவழிக்க முயலுங்கள்.

இதனால் அவர் உங்களை புரிந்து கொள்ள உதவும். வேறொரு உறவினால் நீங்கள் வ்சப்பட நேரிடலாம். ஆகவே கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.

சிம்மம் :

சிம்மம் :

இந்த வருடத்தில் மிகவும் அட்ஜஸ்ட் செய்யும் வகையில்தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள்.லா வகையிலும் உங்களுக்கு சாதகாம அமையும். நீங்கள் விரும்பு வகையில் உங்களுக்கு வாய்ப்புகள் வரும்போது அவசரப்பட்டு உடனடியாக முடிவை எடுக்காதீர்கள். ஆராய்ந்து எடுப்பது அவசியம்.

கன்னி :

கன்னி :

உங்களின் பழைய நண்பர்கள், காதல் புதுப்பிக்க நேரிடலாம். அதே சமயம் புது உறவுகளும் உண்டாக்கும். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவழிப்பீர்கள். ஜூன் பிறகு உங்கள் காதல் வாழ்க்கை இனிக்கும்.

துலாம் :

துலாம் :

உங்கள் நெருங்கிய உறவு ஒன்று பிரிய நேரிடலாம். ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் காதலியோடு அல்லது காதலனோடு கருத்துவேறுபாடு உண்டாகும்.இதுவே உங்கள் பிரிவிற்கு காரணமாக அமையலாம். அதனால் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் :

விருச்சிகம் :

மார்ச் ஏப்ரலில் கடவுள் நம்பிக்கை உண்டாகும் வருடத்தின் மத்திய காலத்தில் உங்கள் துணையுடன் மோதல் உண்டாகலாம். ஆகவே உங்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து போகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தனுசு :

தனுசு :

உங்களுக்கு சுக்ர திசை பின்னடவால் பலக் குழப்பங்கள் உண்டாகலாம். தேவையில்லாத சச்சரவுகள் வரலாம். ஆனால் வருட இறுதில் நல்ல நிகழ்வுகள் உண்டாகும். மனதிற்கு இனிமையானவை நடக்கும்.

மகரம் :

மகரம் :

இந்த வருடம் உங்களுக்கு அருமையாக இருக்கும். நல்ல விஷயங்களையே பார்ப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையுடனும் இருக்கும்படி நடக்கும். நீங்கள் செய்யும் காரியங்கல் வெற்றி பெறும்.

கும்பம் :

கும்பம் :

உங்கள் துணையுடன் இனிதான் வாழ்க்கை நடத்த சரியான தருணம். ஏனென்றால் இந்த வருடத்தில் ஒருவரையொருவர் அனுசரித்து செல்லும்படி வாய்ப்புகள் அமையும். ஒற்றுமையும் கூதுகலமும் காணப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மீனம் :

மீனம் :

இந்த வருடத்தில் சுமூகமாக உங்கள் துணையுடன் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். நீங்கள் செய்யும் காரியங்கள் எதிர்மறையாகவே போய் முடியலாம்.

ஆகவே பேசும்போதோ அல்லது ஓர் காரியத்தை உங்கள் துணைக்கு செய்யும்போதோ , அவர்களின் விருப்பபடி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Venus in Retrograde till 15th April 2017 - how it will affect your zodiac sign!

Venus in Retrograde till 15th April 2017 - how it will affect your zodiac sign!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter