உலக ஐகானிக் படங்களுக்கு பின்னாடி மறைந்திருக்கும் இரகசியங்கள்

Posted By:
Subscribe to Boldsky

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நாக்கை வெளியே நீட்டியபடிக் கொடுத்த போஸ், மெர்லின் மன்றோவின் பறக்கும் கவுன், வேலை செய்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள் என பல புகைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

புத்தகங்கள், இன்டர்நெட், சமூக தளங்கள் என பலவற்றிலும் இவை வைரலாக பரவி பிரபலம் ஆனவை. ஆனால், இந்த படங்கள் எப்படி, எந்த சூழலில் எடுக்கப்பட்டது? இதற்கு பின்னாடி இருக்கும் கதைகள் என்னென்ன என்று தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில நொடிகளுக்கு முன்னர்...

சில நொடிகளுக்கு முன்னர்...

இந்த படம் பிரபல ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு காரில் ஏறும் போது எடுத்தப்படம். புகைப்படக் கலைஞர் ஒரு போஸ் கொடுக்க சொல்ல...

Image Credit : Albert Einstein Instagram

நாக்கை வெளியே நீட்டி...

நாக்கை வெளியே நீட்டி...

புகைப்பட கலைஞர் கேட்டதுமே சற்றும் யோசிக்காமல் ஐன்ஸ்டீன் நாக்கை வெளியே நீட்டி இப்படி ஒரு போஸ் கொடுத்தாராம்.

உண்மையான படம் பெரியது. இது கிராப் செய்யப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஐன்ஸ்டீன் அவர்களே மிகவும் விரும்பினாராம்.

Image Source

பணியாட்கள்...

பணியாட்கள்...

கட்டிட பணியாட்கள் ஒன்றாக உயரத்தில் அமர்ந்திருக்கும் படம். 11 பேர் தங்களது மதிய உணவு இடைவேளை நேரத்தில் ரிலாக்ஸாக இருந்த போது எடுத்தப்படம்.

இது நியூயார்க்கின் ராக்கிபெல்லர் செண்டர் இடத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.

Image Source

முத்தம்...

முத்தம்...

இந்த படத்தில் இருக்கும் பெண் எடித் ஷாயின்.இரண்டாம் உலகப்போர் வெற்றி பெற்ற போது டைம் ஸ்கொயர் இடத்தில் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது சப்வேயில் இருந்து ஓடிவந்த நார்சை கப்பலோட்டி ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்ட படம் தான் இது.

Image Source

ஆப்கன் பெண்!

ஆப்கன் பெண்!

1984ல் நடந்த போரின் போது ஸ்டீவ் எனும் புகைப்பட கலைஞர் நிறைய போர் சம்பவங்களை, அகதிகளை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த 12 வயது பெண்ணை படம் எடுத்தார். இவரது குடும்பத்தில் பலர் இறந்துவிட்டனர்.

2002ல் இந்த படத்தில் இருந்த பெண் கண்டறியப்பட்டார். இவர் இன்றும் ஆப்கானில் தான் வாழ்ந்து வருகிறார். இவர் பெயர் ஷர்பத் குலா. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள்.

Image Source

அழகிய லைலா...

அழகிய லைலா...

மெர்லின் மன்றோ என்றாலே அனைவருக்கும் இந்த படம் தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு பிரபலமான படம் இது. ஃபிளைங் டிரஸ் என்ற பெயரில் இப்படம் புகழ்பெற்றது.

இது ஒரு காட்சிக்காக நடித்த போது எடுக்கப்பட்டது. அந்த காட்சி கணவன், மனைவிக்கு இடையே நடக்கும்படியாக படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Image Source

கவர் போட்டோ!

கவர் போட்டோ!

The Beatles' Abbey Road என்ற ஆல்பத்தின் கவர் போட்டோ. இதை எடுக்க சாலைகள் பிளாக் செய்யப்பட்டது. இந்த தருணத்தில் வலது பக்கம் கருப்பு நிற கார் அருகே ஒரு அமெரிக்கன் டூரிஸ்ட் ஒரு போலீஸிடம் பேசிக் கொண்டிருப்பதும் படத்தில் பதிவாகியிருந்தது.

சில ஆண்டுகள் கழித்து ஆல்பம் கவரில் தன்னை கண்ட போது தான் அவர், அது ஒரு போட்டோஷூட், தானும் அதில் இருக்கிறோம் என்பதை அறிந்துள்ளார்.

Image Source

தலி அடோமிகஸ்

தலி அடோமிகஸ்

இன்று இப்படி ஒரு படத்தை போட்டோஷாப் மூலமாக மிக எளிதாக அரை நாளில் செய்துவிட முடியும். ஆனால், இப்படி ஒரு படத்தை எடுக்க... நாற்காலியை ஒருவர் பிடித்துக் கொண்டிருக்கிறார், தலி குதித்துக் கொண்டிருக்கிறார், பூனைகள் தாவுகின்றன, தண்ணீர் ஊற்றப்படுகிறது... இவ்வளவு சம்பவங்களை ஒரே படத்தில் கொண்டு வர 28 முறை முயற்சி செய்துள்ளனர், கடினமாக உழைத்து. இந்த படத்தை எடுத்தவர் பிலிப்பி என்பவர்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Stories Behind Famous Pictures!

Unknown Stories Behind Famous Pictures!
Subscribe Newsletter