உலகின் டாப் 20 கிரேஸியான நிகழ்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகில் ஆச்சரியத்திற்கு பஞ்சமே இல்லை. அதே போல தான் வினோதமான நிகழ்வுகளுக்கும். மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் ஈகோ, வஞ்சகம், பழிக்குப்பழி போன்ற எண்ணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதற்கு ஒரு முக்கிய காரணம் நாடு, ஜாதி, மதம் போன்ற பிரிவினைகள் தான்.

இது போன்ற பிரிவினைகள் பிறக்க முக்கிய காரணம் கொரவம். நான், நான் தான் பெரியவன், என் குடும்பம், நாடு எனக்கான கெளரவம் என நாம் காண்பித்துக் கொள்ளும் இந்த திமிர் தான் நாம் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் என்பதை மறக்க செய்துள்ளது.

கௌரவம், வஞ்சனம், நாடு, அது, இது என... ஏதேதோ காரணத்தால் நடந்து சில கிரேஸியான நிகழ்வுகளின் தொகுப்பு தான் இது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஸ்!

குஸ்!

கடந்த 2006ம் ஆண்டில், விமான பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் வாயு வெளியேற்றினார். இதன் காரணமாக துர்நாற்றம் ஏற்பட, அதை தவிர்க்க, தன்னிடம் இருந்த தீப்பெட்டி எடுத்து கொளுத்த ஆரம்பித்தார். இதனால் எமர்ஜென்சி அலார்ம் ஆன் ஆனது.

விமானி உடனே தனது விமானத்தை தரை இறக்கினார். பிறகு தான் அந்த எமெர்ஜென்சி சப்தத்திற்கு அந்த பெண் பயணியின் குஸ் தான் காரணம் என அறிந்து, மீண்டும் பயணத்தை துவக்கியுள்ளார் விமானி.

அணில் கைது!

அணில் கைது!

தங்கள் நாட்டின் மீது உளவு பார்ப்பது தெரியவந்தால், உளவாளிகளை எந்தவித தயக்கமும் இன்றி கைது செய்வது வழக்கம். உளவு பார்ப்பது என்பது மிகவும் கடினமான செயல். இந்த வகையில் தங்கள் நாட்டின் மீது உளவு பார்ப்பதாக சந்தேகப்பட்டு ஈரான் கடந்த 2007ல் 14 அணில்களை கைது செய்தது.

மகளை திருமணம்...

மகளை திருமணம்...

ஈரானில் கடந்த 2013 இயற்றப்பட்ட சட்டத்தின் படி, வளர்ப்பு மகளை ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இதற்கு ஒரு நிபந்தனை இருந்தது. வளர்ப்பு மகள் 13 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும்.

கழிவறையில் உணவு!

கழிவறையில் உணவு!

சாப்பிடும் போது யாராவது கழிவறை பற்றி பேசினாலே நம்மால் சாப்பிட முடியாது. ஆனால், தைவானில் இருக்கும் ஒரு உணவகம் கழிவறை தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கே கைகழுவும் இடத்தில் இருந்து சாப்பிடும் ப்ளேட், உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள் என அனைத்தும் கழிவறை வடிவிலே தான் இருக்கின்றன.

பெரிய குடும்பம்!

பெரிய குடும்பம்!

நமது ஊர்களில் பல தலைமுறையாக வாழ்ந்து வருபவர்கள், அதிக மதிப்பு கொண்டவர்கள், செல்வம் நிறைந்தவர்களை பெரிய குடும்பம் என கூறுவோம். ஆனால், எண்ணிக்கை அளவில் பெரிய குடும்பமாக இருப்பது மட்டுமின்றி, இன்றாகவே சேர்ந்து வருகிறார்கள் இந்தியாவை சேர்ந்த இந்த பெரிய குடும்பம். இந்த குடும்ப தலைவருக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள்.

Image Courtesy

நோபல் பரிசு!

நோபல் பரிசு!

மகாத்மா காந்தி ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், ஒருமுறை கூட இவர் நோபல் பரிசு வெல்லவில்லை.

ஆசிரியை கைது!

ஆசிரியை கைது!

சுடானில் பணியாற்றி வந்த பிரிட்டிஷ் ஆசிரியை ஒருவர் விசித்திரமான காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் பாடம் எடுத்து வந்த பிரைமெரி வகுப்பில் டெட்டி பியர் பொம்மைக்கு முகமது என பெயர் சூட்ட இவர் அனுமதி வழங்கிய காரணத்திற்காக இவரை கைது செய்துள்ளனர்.

ரிவஞ்!

ரிவஞ்!

கடந்த 2003ம் ஆண்டு ஓர் ஆண், தனது எக்ஸ் மனைவி வீட்டிற்கு எதிரே ஒரு வீடு வாங்கினார். வாங்கி அதன் பால்கனி பகுதியில் நடுவிரல் காண்பிக்கும் சிலையை தனது எக்ஸ் மனைவி காணும்படி பெரிதாக வைத்தார்.

ஜமைக்கா!

ஜமைக்கா!

ஜமைக்காவில் ஆண்கள் மத்தியிலான ஓரினச்சேர்க்கைக்கு பத்து வருடம் வரை தண்டனை வழங்கப்படலாம் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்கள் மத்தியிலான ஓரினச்சேர்க்கைக்கு எந்த தண்டனையும் இல்லை.

Image Courtesy

சார்லஸ் டார்வின்!

சார்லஸ் டார்வின்!

சார்லஸ் டார்வின் எனும் விலங்குகள் அராய்ச்சியாளர், தான் புதியதாக கண்டுபிடிக்கும் விலங்குகளை, உயிரினங்களை கொன்று திண்ணும் வழக்கம் கொண்டிருந்தார்.

 அலக்சாண்டர் தி கிரேட்!

அலக்சாண்டர் தி கிரேட்!

அலக்சாண்டர் தி கிரேட், நெப்போலியன், முசோலினி மற்றும் ஹிட்லர் போன்ற பெரும் வீரர்கள் ailurophobia எனும் போபியா கொண்டிருந்தனர். இது பூனைகள் மீதான அச்சமாகும்.

மழைநீர்!

மழைநீர்!

மழை நீரை சேமிக்க வேண்டும் என இங்கே உள்ள அரசுகள் மக்களுக்கு ஆணையிடுகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தில் மழைநீரை சேமித்த நபருக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ,மழைநீரை அந்த மாகாணத்தின் சொத்தாக அவர்கள் கருதுகிறார்கள்.

தற்கொலை!

தற்கொலை!

ஓர் ஆண் தற்கொலை செய்துக் கொண்ட ஆணின் இதயத்தை உடலுறுப்பு தானம் மூலம் பெற்றார். தானம் செய்த நபரின் மனைவியை அவரே திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் ஆன மறு வருடமே, அந்த ஆண் தற்கொலை செய்துக் கொண்டது போலவே, இவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

கார்!

கார்!

பிரேசிலில் நடைப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள், காரை எடுக்க சொல்லியும் கேட்காமல் காரை அங்கேயே நிறுத்தியதன் மூலம் கோபமுற்ற பணியாளர்கள், அந்த காரை எடுக்கமுடியாதபடி, சுற்றி நடைபாதை அமைத்துவிட்டு சென்றனர்.

 கொலம்பியா!

கொலம்பியா!

கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவரை காட்டில் இருந்த குரங்குகள் தான் வளர்த்தன. காரணம், அந்த பெண்ணை சிறுவயதிலேயே ஒரு கும்பல் கடத்தி காட்டில் தவறவிட்டு சென்றுவிட்டது. பிறகு குழந்தை பருவம் முதலே அந்த பெண்ணை அந்த காட்டில் வசித்து வந்த குரங்குகள் தான் வளர்த்து வந்துள்ளன.

Image Courtesy

குரங்கு!

குரங்கு!

2011ல் இந்திய எல்லையை தாண்டிய குற்றத்திற்காக பாகிஸ்தானில் குரங்கு ஒன்று கைது செய்யப்பட்டது. என்னதான் இருந்தாலும் அந்நாட்டு ஆபீசர்களுக்கு இத்தனை கோபம் கூடாது.

கரப்பான்பூச்சி!

கரப்பான்பூச்சி!

உலகில் தோன்றிய முதல் பெரிய உயிரினமாக கருதப்படுவது டைனோசரஸ். இதன் அழிவிற்கு பிறகே பல உயிரனங்கள் மருவி வேறு உருவம் பெற்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால், டைநோச்சராஸ் தோன்றுவதற்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கரப்பான்பூச்சி நமது உலகில் தோன்றிவிட்டது.

மரண தண்டனை கைதி!

மரண தண்டனை கைதி!

ஜியார்ஜியாவை சேர்ந்த மரண தண்டனை கைதி ஒருவன், தூக்கிடும் நாளுக்கு முந்தைய இரவு சிறையைவிட்டு தப்பித்து ஓடிவிட்டான். ஆனால், அந்த நாள் இரவே நைட் பாரில் நடந்த சண்டை ஒன்றில் அடிப்பட்டு இறந்துவிட்டான்.

கிளியோபாட்ரா!

கிளியோபாட்ரா!

உலகின் பெரும் பேரழகி என பெயர் பெற்றவர் கிளியோபாட்ரா. கிளியோபாட்ரா தான் எகிப்தின் கடைசி ஆட்சியாளர் என அறியப்படுகிறார். ஆனால், உண்மையில் கிளியோபாட்ரா ஒரு எகிப்தியன் அல்ல, கிரேக்கர் ஆவார்.

ஹிட்லர்!

ஹிட்லர்!

உலகின் பெரும் சர்வதிகாரி என பெயர்பெற்றவர் ஹிட்லர். இவர் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.

பெரும் கொடுமைக்காரராக அறியப்படும் ஹிட்லருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, மது, மாது என எதற்கும் அவர் அடிமையில்லை.

தனது சிறுவயதில் ஹிட்லர் ஒரு போதகராக வேண்டும் என்று தான் விரும்பினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20 Unbelievable Facts That Made World Crazy!

Top 20 Unbelievable Facts That Made World Crazy!
Story first published: Thursday, October 19, 2017, 13:21 [IST]
Subscribe Newsletter