Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
எமனின் உயிரைப் பறித்து, மீண்டும் உயிர் கொடுத்த சிவபெருமான்!
இங்கு எமனை வென்று, 'என்றும் 16' என்னும் வரத்தைப் பெற்ற புகழ் பெற்ற மார்கண்டேயரின் வரலாறு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புராணங்களின் படி, எல்லா சமயங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த முனிவராக இருப்பவர் தான் மார்கண்டேயர். இவர் தீவிர சிவ பக்தரான மிருகண்டுவின் மகனாவார். இவர் தன்னைப் பிடிக்க வந்த எமனை வென்று, சிவனிடமிருந்து ஓர் அற்புத வரத்தைப் பெற்றவர்.

இந்த மார்கண்டேயரின் வரலாறு மிகவும் பிரபலமானது. உங்களுக்கு மார்கண்டேயரின் கதை தெரியாதென்றால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிருகண்டு முனிவர்
மிருகண்டு முனிவருக்கு குழந்தைகளே இல்லை. இவர் தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தை வரம் வேண்டி, சிவனை நோக்கி தவம் புரிந்தனர். மிருகண்டு மற்றும் அவரின் மனைவி செய்த தவத்தால் மனம் குளிர்ந்த சிவன், அவர்கள் முன்பு தோன்றினார்.

எந்த மாதிரி குழந்தை வேண்டும்?
மிருகண்டுவின் முன் தோன்றிய சிவன், அவர்களிடம் உங்களுக்கு 100 வயது வரை வாழும் முட்டாள் குழந்தை வேண்டுமா அல்லது 16 வயது வரை வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டுமா என்று கேட்டார். அந்த தம்பதியினர் 16 வயது வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டும் என்று வேண்டினர். சிவனும் அதற்கு அருள் புரிந்தார்.

மார்கண்டேயர்
அப்படி மிருகண்டு முனிவர் தவமிருந்து பெற்ற குழந்தை தான் மார்கண்டேயர். இந்த மார்கண்டேயரை மிருகண்டு முனிவர் தன்னைப் போலவே தீவிர சிவ பக்தராக வளர்த்தார். தந்தையின் ஆலோசனையின் படி திருகடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தினமும் கங்கை நீரைக் கொண்டு வழிபட்டு வந்தார்.

எமனின் வருகை
ஒருநாள் எமதர்ம ராஜா 16 வயதை எட்டிய மார்கண்டேயரை அழைத்துச் செல்ல பூலோகம் வந்தார். அதைக் கண்ட மார்கண்டேயர் எமனைக் கண்டு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை கட்டி அணைத்து தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தனது பாதுகாப்பில் உள்ள மார்கண்டேயனைத் தொடாதே என்று எமனை எச்சரித்தார்.

சிவனின் கோபம்
இருப்பினும் எமன் சற்று கேட்காமல், தன் கையில் உள்ள பாசக் கயிற்றை மார்கண்டேயன் மீது வீசினார். அப்படி வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனுடன் லிங்கத்துடனும் சேர்த்து விழ, உடனே சிவபெருமான் கோபம் கொண்டு தன் இடது காலால் எமனை உதைத்து, தனது இடது காலுக்கு கீழ் படுக்க வைத்து, எமனை செயலற்று போக செய்தார்.
சிவனின் கோபம் தணியும் வரை, பூமியில் எந்த உயிரும் இறக்காமல் இருந்தது. பின் பூமி எப்போதும் போன்று செயல்பட வேண்டும் என்று சிவன் கூறி, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், எமனுக்கு உயிர் கொடுத்தார்.

மார்கண்டேயன் பெற்ற வரம்
பின்பு மார்கண்டேயனுக்கு 'என்றும் 16' என்னும் வரத்தை சிவன் வழங்கினார். இதனால் 16 வயதில் இறப்பை சந்திக்கவிருந்த மார்கண்டேயர், வாழ்நாள் முழுவதும் 16 வயதுடனேயே இருந்தார் என்று வரலாறு கூறுகிறது.



Click it and Unblock the Notifications
