கடலில் மாயமான ஆஸ்திரேலிய பிரதமர்! அரை நூற்றாண்டு கடந்தும் உடல் கண்டுபிடிக்கப்படாத சோகம்....

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாளுமே பல்வேறு சுவாரஸ்யங்களை தன்னுள்ளே வைத்துக் கொண்டு தான் விடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த சுவாரஸ்யங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதம் தான்.

அந்த வகையில் இதே நாளில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹரல்ட் ஹோல்ட் :

ஹரல்ட் ஹோல்ட் :

இவரைப் பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிய வாய்பில்லை. ஆஸ்திரேலியாவின் பதினேழாவ்து பிதமராக 1966-67 வரை இருந்தார். இவர் ஆட்சியில் இருந்ததை விட இவர் மரணத்திற்கு பிறகு தான் அதிகமாக மக்களால் பேசப்பட்டார்.

Image Courtesy

மரணம் :

மரணம் :

விக்டோரியா மாநிலத்தில் இருக்கிற செவியட் என்ற கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைப்பெற்று வந்த நேரத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

Image Courtesy

வதந்தி :

வதந்தி :

ஹோல்ட் குறித்த பல்வேறு வதந்திகள் அவரது மறைவிற்கு பின்னர் பரவின. அவர் தற்கொலை செய்து கொண்டார், சீன நீர் மூழ்கி கப்பலினால் கடத்தப்பட்டார் என்றெல்லாம் பேசப்பட்டன.

அவர் ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவர் ஹோல்ட் கடைசிக்காலங்களில் மன நோய் கொண்டவராக காணப்பட்டார் என்றெல்லாம் கிளப்பினார்கள்.அவரது உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹோல்ட் கடலில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

Image Courtesy

அப்பல்லோ:

அப்பல்லோ:

அமெரிக்காவில் நடந்த ஒரு தொடர் விண்வெளிப் பயணத்திட்டம். இதன் முக்கிய நோக்கம். ஒரு மனிதனை சந்திரனில் இறக்கிவிட்டு பின்னர் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது. 1961ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத்திட்டம் 1971 வரை நீட்டிக்கப்பட்டது.

Image Courtesy

அப்பல்லோ பயணம் :

அப்பல்லோ பயணம் :

அப்பல்லோ 1 சோதனையின் போது தீப்பிடித்தது. இதில் பயணித்த மூன்று வீரர்களும் மரணமடைந்தனர். பூமிச் சுற்றுப்பாதை பயணம், நிலவின் சுற்றுப்பாதை , நிலவில் தரையிறக்குவது என வரிசையாக அப்பல்லோ பயணப்பட்டது. இவற்றில் ஒன்று தோல்வியடையவும் செய்தது.

Image Courtesy

அப்பல்லோ 17 :

அப்பல்லோ 17 :

இந்நிலையில் அறிவியலாலரும்,நிலவில் இறங்கி நீண்ட நேரம் ஆய்வினை மேற்கொண்டவருமான எயூஜின் கெர்னான் என்பவரை சுமந்து சென்றது இந்த விண்கலன் தான்.

அதோடு இது இத்திட்டத்தின் கடைசி விண்கலனாகவும் அமைந்துவிட்டது. எயூஜினின் நிலவில் இறக்கிவிட்டு.வெற்றி கரமாக பூமிக்கு வந்தடைந்த நாள் இன்று.

Image Courtesy

கால்பந்தாட்டம் :

கால்பந்தாட்டம் :

உலக கோப்பை கால் பந்தாட்டத்தில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு தங்க கோப்பை வழங்கப்படும்.

1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை என்றே வழங்கப்பட்டது.

Image Courtesy

பிரேசில் அணி :

பிரேசில் அணி :

1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

Image Courtesy

தங்கக் கிண்ணம் :

தங்கக் கிண்ணம் :

ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர்.

Image Courtesy

வடிவமைப்பு :

வடிவமைப்பு :

36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது.

இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.

Image Courtesy

கோப்பை வழங்கும் முறை :

கோப்பை வழங்கும் முறை :

இந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கோப்பைப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.

Image Courtesy

திருட்டு ! :

திருட்டு ! :

1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது

ஆனால் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியில்

பிரேசிலில் இருந்த கால்பந்தாட்ட தலைமையகத்தில் இருந்து திருடப்பட்டது. அந்தக் கோப்பை இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Image Courtesy

பேராசிரியர் அன்பழகன்! :

பேராசிரியர் அன்பழகன்! :

தமிழகத்தில் பேராசிரியர் என்று யார் யாரையோ குறிப்பிட்டாலும், பொதுவாக அந்த சொல் நினைவுக்கு கொண்டு வருவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க. அன்பழகனைத்தான்.

தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களாக இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி, பொதுவுடமைக் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோருக்கும் மூத்தவராக, நெடிய அரசியல் வரலாற்றை உடையவராகத் திகழ்பவர் பேராசிரியர் க. அன்பழகன்.அவருடைய பிறந்த தினம் இன்று.

பிரதீபா பாட்டீல் :

பிரதீபா பாட்டீல் :

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் பிறந்த தினம் இன்று.மகாராஷ்டிராவிலுள்ள ஜல்கோன் மாவட்டத்தில் இருக்கும் போட்வத் தாலுகாவிலுள்ள நத்கோன் என்ற கிராமத்தில் டிசம்பர் 19, 1934 ஆம் ஆண்டில் பிறந்தார்.

கல்லூரி ராணி :

கல்லூரி ராணி :

முதன்மைக் கல்வியை, ஜல்கோனிலிருக்கும் ஆர்.ஆர். வித்யாலயாவில் பெற்றார். பின்னர், மும்பையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் வென்றார். அவர் ஜல்கோனிலிருக்கும் மூல்ஜி ஜேதா கல்லூரியில், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார்.

தனது கல்லூரி நாட்களில், விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்திய அவர், டேபிள் டென்னிஸில் சிறந்து விளங்கினார். 1962ல், எம்.ஜே. கல்லூரியின் ‘கல்லூரி ராணி' என்று பெயரிடப்பட்டு, அப்பட்டத்தையும் வென்றார்.

 அரசியல் வாழ்க்கை :

அரசியல் வாழ்க்கை :

ஜல்கோன் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பயிற்சி வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது 27வது வயதில், அவர் ஜல்கோன் சட்டமன்ற தொகுதியிலிருந்து, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக, அவர் எட்லாபாத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வகித்த பதவிகள் :

வகித்த பதவிகள் :

அவர், அரசின் பல்வேறு பதவிகளிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் வெவ்வேறு பதவிகள் வகித்து வந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை, கல்வித் துணை அமைச்சராகப் பணியாற்றிய அவர், பொது சுகாதாரத்துறை இலாக்காவிலிருந்து சுற்றுலாத்துறை, பாராளுமன்ற விவகாரத் துறை போன்ற பல அமைச்சர் பதவிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

இந்தியாவின் ஜனாதிபதி :

இந்தியாவின் ஜனாதிபதி :

நவம்பர் 8, 2004 அன்று ராஜஸ்தான் கவர்னராகப் பொறுப்பேற்று, ஜூன் 2007 வரை அப்பதவியில் இருந்தார். ஜூலை 25, 2007 ஆம் ஆண்டு, அவர் இந்தியாவின் 12 வது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பைரோன் சிங் ஷெகாவத்தை 300,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

விசுவநாதம் :

விசுவநாதம் :

கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை திருச்சியைச் சேர்ந்த தமிழிறிஞர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக இருந்த இவர் பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

Image Courtesy

பள்ளிக்குச் செல்லாமலே :

பள்ளிக்குச் செல்லாமலே :

தமிழ் இலக்கணக் கடல் என்று அறியப்பட்ட இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார்.

நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு. வி. க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்

இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதே நாள் 1994 ஆம் ஆண்டு இம்மண்ணை விட்டுப் பிரிந்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse this day that year
English summary

This day That Year December 19

This day That Year December 19
Story first published: Tuesday, December 19, 2017, 10:15 [IST]