விமானத்தில் பறக்கும் போது முதல்12 வினாடிகள் இதச் செய்ய மறக்காதீங்க!

Subscribe to Boldsky

மனிதனால் பறக்க முடியும் என்பதை நிரூபித்த ரைட் சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் பிறந்தனர்.

ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை.

This day That Year December 17

Image Courtesy

மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது.

இங்கே இருந்து விமானப் பயணம் ஆரம்பம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளமைக்காலம் :

இளமைக்காலம் :

இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள்.

அப்பா வாங்கித் தந்த பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது.

Image Courtesy

நம்பிக்கை :

நம்பிக்கை :

அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும்.

ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

Image Courtesy

கனவு :

கனவு :

ஆனால் இருவரது கனவுமே பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. தங்களுடைய லட்சத்தியத்தை நோக்கிய பயணத்திலும் கவனம் செலுத்தினர்.

அப்போது, Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.

Image Courtesy

புத்தகங்கள் :

புத்தகங்கள் :

Octave Chanute ரைட் சகோதரர் காலத்தில் (1896-1901) பறக்கும் ஊர்திகளைப் பற்றி எழுதியும், முயன்று கொண்டும் இருந்தார். ஆக்டேவ் சனூட் எழுதிய Progress of Flying Machines நூலே ரைட் சகோதரர்களுக்கு ஆரம்ப கால உதவிப் புத்தகமாக அமைந்தது.

Image Courtesy

குரு :

குரு :

ஆட்டோ லிலியென்தால்தான் ரைட் சகோதரர்களின் முதற் குரு! அவர்களது விமான வேட்கைக்கு முக்கிய காரணமானவர்.

ஆட்டோ லிலியென்தால் எழுதிய The Problem of Flying & Practical Experiments in Soaring என்னும் நூலும், ஸாமுவெல் லாங்கிலி எழுதிய Experiments in Mechanical Flight & Aerodynamics என்னும் நூலும், அவர்கள் 200 வித இறக்கைகளைச் சோதிக்க செய்த Wind Tunnel சோதனைகளுக்கு உதவின.

Image Courtesy

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

லட்சியத்தை இனி சுலபமாக எட்டலாமென்று நினைத்திருந்த போது ஓர் அதிர்ச்சி. ஒட்டோ தான் கண்டுபிடித்த விமானத்தை சோதிக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனார்கள்.

Image Courtesy

தேடல் :

தேடல் :

ஆனால் அவர்கள் சோர்ந்து போகவில்லை தொடர்ந்து தேட ஆரம்பித்தனர். வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்ற தேடல் துவங்கியது.

இவர்களின் ஆர்வத்தைப் பார்த்து Smithsonian கழகத்தின் தலைவர் சாமுவேல் அதுவரை விமானம் தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட ஆரய்ச்சிகள், சிக்கல்கள்,முயற்சிகள்,என எல்லாவற்றையும் விளக்கினார்.

இது அவர்களுக்கு பெரும் தீனியாக அமைந்து விட்டது.

Image Courtesy

முதல் முயற்சி :

முதல் முயற்சி :

முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர்.

வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

Image Courtesy

தோல்வி :

தோல்வி :

முதல் தோல்வியை அடுத்து மனம் தளராது தொடர்ந்து விமானம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர். தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் அவர்களுக்கான முன் மாதிரி எதுவும் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டே பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.

Image Courtesy

அந்த நாள் :

அந்த நாள் :

1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர்.

அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.

Image Courtesy

முதல் வெள்ளோட்டம் :

முதல் வெள்ளோட்டம் :

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம்.

யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர்.

Image Courtesy

மீண்டும் தோல்வி :

மீண்டும் தோல்வி :

இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதும் மனம் தளராமல் அடுத்த சில நாட்களில் விமானத்தில் மாற்றங்களை செய்தனர். இரண்டாவது வெள்ளோட்டத்திற்கு நாட்களை குறித்தனர்.

Image Courtesy

டிசம்பர் 17 :

டிசம்பர் 17 :

இம்முறை ஆர்விலுக்கு வாய்ப்பு. மெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் லேசாக அதிர்ந்து.... ஆடி குலுங்கி, கனைத்து.... புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது.

அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள்.

Image Courtesy

சோதனை :

சோதனை :

வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறக்கும் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், 59 வினாடிகள் பறந்து 852 அடி தூரம் சென்றது!

Image Courtesy

விமானம் பிறந்தது :

விமானம் பிறந்தது :

வெற்றிக் களைப்பில் அப்படியே விட்டுவிடவில்லை தொடர்ந்து அதனை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். அதன் பலனாக 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகயத்தில் பறந்தனர்.

அதற்கடுத்து சில மாற்றங்களை செய்து தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றனர். ஆனால் அப்போது ஏற்பட்ட எதிர்பாராத இயந்திரக் கோளாறினால் விமானம் விழுந்து நொறுங்கியது.

பயணி உயிரிழக்க, விமானத்தை ஓட்டிய ஆர்வில் உயிர் பிழைத்தார்.

Image Courtesy

விண்வெளிப் பயணம் :

விண்வெளிப் பயணம் :

ரைட் சகோதரர்களின் இந்தப் பயணம் தான் விண்வெளிப்பயணத்திற்கும் முன்னோடி. 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதர்களின் இந்த கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அறுபத்தி ஆறு ஆண்டுகள் கடந்து 1969 இல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார்.

மூன்று காரணங்கள் :

மூன்று காரணங்கள் :

ரைட் சகோதரர்களுக்கு முன்பே பலரும் விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முயன்றாலும் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில் ரைட் சகோதரர்களுக்கு வெற்றி கிடைத்ததற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னுந்தல் ‘ [Thrust], ‘மேலெழுச்சி ' [Lift], ‘திசைதிருப்பி ' [Rudder] எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு ' நுணுக்கத்தைக் கையாண்டவர்கள், ரைட் சகோதரர்கள்.

இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு ஆயில் எஞ்சினைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர்.

மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில், வில்பர் இருவரும் Wind Tunnel ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான வாயு வளைபோக்குள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

Image Courtesy

இன்றைய விமானம் :

இன்றைய விமானம் :

1939 முதல் சுழற்தட்டு எஞ்சின்கள் நீக்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றல் மிஞ்சிய ஜெட் எஞ்சின்கள் விமானங்களைத் இழுத்துச் செல்கின்றன!

1903 இல் ரைட் சகோதரர்களின் ஊர்தி 600 பவுண்டு எடை கொண்டிருந்தது! தற்கால 747 போயிங் ஜம்போ ஜெட் விமானம் 500 நபர்களை ஏற்றிக் கொண்டு, 350 டன் எடையைத் ஏந்திக் கொண்டு, மணிக்கு 580 மைல் வேகத்தில் பறந்து செல்கிறது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse this day that year
  English summary

  This day That Year December 17

  This day That Year December 17
  Story first published: Sunday, December 17, 2017, 10:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more