மாணவர்களின் ‘எழுச்சி’நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky

எல்லா நாடுகளும் ஒரு நேரத்தில் அடிமைகளாய் இருந்து பின்னர் அவர்களுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டு பிரிகின்றனர்.

இது எங்களுடைய நாடு யாரும் எங்களை வந்து அடிக்கியாள முடியாது என்கிற எண்ணம் அவர்கள் மனதில் எழும் போது புரட்சி வெடிக்கிறது. இந்த உலகிலேயே நாம் தான் ஆங்கில அரசின் கொத்தடிமைகளாக இருந்திருக்கிறோம் என்ற எண்ணம் உடையவரா நீங்கள் இதோ அமெரிக்கா கூட ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு கூட இதே நிலைமை தான். தங்களை அடக்கி ஆள நினைத்து பிரித்தானிய பேரரசுக்கு எதிராக அமெரிக்காவில் புரட்சி வெடித்த நாள் இன்று.

இதைத் தவிர இன்றைய நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்கா :

அமெரிக்கா :

இந்த சம்பவம் 1773 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. அமெரிக்காவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கம். அமெரிக்கர்கள் மீது பல்வேறு விதமான வரிகளை கட்ட வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியது.

அதே போல அமெரிக்கர்கள் பிரித்தானியா நாடாளுமன்றத்திலும் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

Image Courtesy

தேநீர் கொண்டாட்டம் :

தேநீர் கொண்டாட்டம் :

தொடர்ந்து அடக்குமுறைகளை சந்தித்த அமெரிக்காவினர் சிலர் இதே நாள் 1773 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேநீர் பெட்டிகளை பாஸ்டன் எனும் துறைமுகத்தில் வீசியெறிந்தனர்.

இது அமெரிக்கப்புரட்சியின் துவக்கமாக அமைந்துவிட்டது.

Image Courtesy

இந்தியா பாகிஸ்தான் :

இந்தியா பாகிஸ்தான் :

இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு முதன் முறையாக காஷ்மீருக்காக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று காஷ்மீரின் பெரும்பகுதியை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது.

1965ம் ஆண்டு காஷ்மீரை மையமாக வைத்து மற்றொரு போர் ஏற்பட்டது. இந்த போர் ராணுவ ஒப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது.

Image Courtesy

தப்புக்கணக்கு :

தப்புக்கணக்கு :

இந்தியாவின் கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும். கிழக்குப் பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி யாகியாகான் நினைத்திருந்தார்.

அது தப்புக்கணக்காகியது. கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமான தளத்தில் 20 போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது.

இந்திய விமானங்கள் குண்டு வீசி, இந்த 20 விமானங்களையும் அழித்தன. விக்ரந்த் என்ற இந்தியப் போர்க் கப்பலைத் தகர்ப்பதற்காக, கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பெயருடைய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை (2,500 டன் எடையுள்ளது) இந்திய கப்பல் படை கண்டுபிடித்து அழித்தது.

Image Courtesy

புரட்சி :

புரட்சி :

இந்த சமயத்தில் பாகிஸ்தான் சர்வாதி கார ஆட்சிக்கு எதிராக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முஜிபுர் ரகிமானின் ஆதரவாளர்கள் முக்திவாகினி என்ற படையை அமைத்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர்.

கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது.

Image Courtesy

13 நாட்களில்! :

13 நாட்களில்! :

டிசம்பர் 3, 1971 ஆம் ஆண்டு போர் நடைப்பெற்றது. இந்த போர் ஆரம்பித்த பதிமூன்று நாட்களிலேயே இந்தியாவின் படைகளை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் டிசம்பர் 16 ஆம் தேதி சரணடைந்தது.

Image Courtesy

ராஜ தந்திரம் :

ராஜ தந்திரம் :

அப்போது இந்திய ராணுவத் தலைமை தளபதியாக ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக் ஷா இருந்தார். கிழக்கு பிராந்தியத் தளபதியாக மேஜர் ஜே.எப்.ஆர். ஜேக்கப் இருந்தார்.

பிறப்பால் இவர் ஒரு இஸ்ரேலியர். தனது 19-ம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். இவர் 2-ம் உலகப் போர் மற்றும் 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் படிப்படியாக உயர்ந்து மேஜர் ஜெனரலானார்.

Image Courtesy

இஸ்ரேலிய ஆளுனர் :

இஸ்ரேலிய ஆளுனர் :

தனிநாடாக இஸ்ரேல் உருவான பின்னரும் அங்கு செல்லாமல் இந்தியாவிலேயே வாழ்ந்து மடிந்தவர்.1978-ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜேக்கப், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

Image Courtesy

போர் தந்திரங்கள் :

போர் தந்திரங்கள் :

இந்த போரில் இவர் வகுத்த போர் தந்திரங்கள்தான் இந்தியாவுக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. கிழக்கு பாகிஸ்தானின் வெளிப்புறங்களை மட்டுமே தாக்கினால் போதும் என்ற எண்ணம் மற்ற பிராந்தியத் தளபதிகளுக்கு இருந்தது.

ஆனால், அந்த ஐடியாவை புறக்கணித்து விட்டு, தனது படைகளுடன் டாக்காவை நேரடியாகத் தாக்கினார் ஜேக்கப். அப்போது டாக்காவில் 26 ஆயிரம் பாகிஸ்தான் படைவீரர்கள் பாக் ராணுவத் தளபதி நியாஜி தலைமையில் இருந்தனர். ஜேக்கப்பிடமோ வெறும் 3 ஆயிரம் படை வீரர்கள். ஆனாலும் ஜேக்கப்பிடம் டாக்கா வீழ்ந்தது.

Image Courtesy

உண்மை நிலவரம் :

உண்மை நிலவரம் :

பாக்.ராணுவம் சரணாகதி தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் இருந்தனர். இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அடியோடு அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து கொண்டார்.

Image Courtesy

சரண்டர் :

சரண்டர் :

டாக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாஜி இந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆரோரா முன்னிலையில் சரண்டர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு தனது வீரர்களை மீட்டு சென்றார்.

'டாக்காவில் பாகிஸ்தான் சரண்டர் ' என சர்வதேச மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.

Image Courtesy

சிறு பொறி! :

சிறு பொறி! :

இளைஞர் கூட்டம் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சான்றாக ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந்துவிட்டது.

இளைஞர் கூட்டத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு,ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்தது.

இன்றைக்கு நாம் சந்திக்கிற 'நீட்' பிரச்சனை போன்றே தங்களின் அடிப்படை உரிமையான கல்விக்கு எதிராக அவர்கள் சந்தித்த அடக்குமுறையே தங்கள் நாடு சுதந்திரமடைவதற்கு சிறு பொறி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஒரே முறை.... :

ஒரே முறை.... :

பாகிஸ்தானின் கிழக்குப்பகுதியில் இருந்த வங்க மக்களை மாற்றாந்தாய் மனப்பாங்க்குடனே பாகிஸ்தான் அணுகியது.

இந்த மக்கள் ஏராளமான அடக்குமுறைகளை சந்தித்தனர். பல்கலைக்கழகங்களில் படிக்கும் மக்கள் ஒரேஒரு முறை மட்டும் தேர்வு எழுத முடியும். அதில் தோற்றால் மீண்டும் தேர்வெழுத முடியாது என்ற சட்டத்தை கொண்டுவந்தது.

கல்விக்கு எதிராகவும் எங்களை அடக்கப் பார்க்கிறார்கள் என்று அங்கேயிருந்த இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டது. அந்த புரட்சியினால் தான் தங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் தாகத்தை நிறைவேறச் செய்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse, this day that year
English summary

This Day That Year December 16

This Day That Year December 16
Story first published: Saturday, December 16, 2017, 10:04 [IST]
Subscribe Newsletter