1904ல் கட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பொறியியல் கட்டுமானத்தின் இன்றைய நிலை!

Subscribe to Boldsky

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் என்றாலே சுற்றிலும் பசுமை நிறைந்த காட்சிகளைத் தான் நிறையக் காண்பிப்பார்கள். எவ்வளவு குளுமையான இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல்... என்று மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம்.

அப்படிக் காட்டப்படும் இடங்களில் டீத் தோட்டமும் ஒன்று. மலை முகடுகளில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் டீ செடிகளால் மலைக்கே ஏதோ பச்சைப் போர்வை போர்த்தியது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் நாம் தான் அதனை ரசித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அங்கிருக்கும் மக்கள் குறிப்பாக டீ தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள் தெரியுமா?

Historic Events in December 15

Image Courtesy

டயர்டாக இருக்கிறதென்றும்... தலைவலிக்கிறது என்றும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஆனால் டீயை விளைவித்து அதனை மக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்திடும் தொழிலாளர்கள் பலர் இன்றளவும் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேயிலை நாள் :

தேயிலை நாள் :

இன்றைக்கு பன்னாட்டு தேயிலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களை விட இந்த தொழிலாளர்களின் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

இவர்களது பிரச்சனையை வெளிப்படுத்த தனியான ஒரு நாள் வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்ட போது, அசாம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த சீன ஒப்பந்த தொழிலாளர்கள் 1838 ஆம் ஆண்டு திசம்பர் பதினைந்தாம் நாள் முதலாவது சம்பளப் போராட்டத்தினை மேற்கொண்டார்கள்.

அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் பதினைந்தாம் நாள் சர்வதேச தேயிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக அதிசயம் :

உலக அதிசயம் :

உலகமே போற்றக்கூடிய அலக்ஸாண்டர் கஸ்டவ் ஈஃபல் இன்றைய தினம் 1832 ஆம் ஆண்டு பிறந்தார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் திட்டுமிட்டு உருவாக்கியது தான் ஈஃபல் கோபுரம் மற்றும் பனாமா கால்வாய். இவை இரண்டுமே உலகப்புகழ்ப்பெறதாக விளங்குகிறது.

Image Courtesy

ஈஃபல் கோபுரம் :

ஈஃபல் கோபுரம் :

இவரது படைப்பு தன் நாட்டின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. 18 ஆயிரம் இரும்புத் துண்டுகள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கோபுரம் இராண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது.

நாம் இன்று பார்கக்க்கூடிய கோபுரத்தை நிறுத்துவதற்கு முன்னதாக ஏராளமான முன் தயாரிப்புகள் இருந்தன. இதனை வடிவமைக்கவென்றே தனியாக வரைபட அலுவலகம் துவங்கப்பட்டிருந்தது.

Image Courtesy

தயாரிப்பு வேலைகள் :

தயாரிப்பு வேலைகள் :

அங்கு கோபுரங்கள் உருவாக்கவென்று மிகவும் துல்லியமான அங்குலம் அங்குலமாக ஓவியம் வரையப்பட்டது. அதோடு இதன் தயாரிப்புகளுக்கு பயன்படும் பொருட்களின் விரிவான படங்களும் பல்வேறு கோணங்களில் வரையப்பட்டன.

இதற்கான பொருட்களை தயாரிப்பது, துளையிடுவது, வடிவை மாற்றியமைப்பது போன்ற எந்த ஒரு வேலையும் கட்டுமானத்தளத்தில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இதற்கென்ற தொழிற்சாலையில் உருவாக்கப்படு குதிரை வண்டியில் கொண்டுவரப்பட்டன.

Image Courtesy

நான்கு கால்கள் :

நான்கு கால்கள் :

ஈஃபல் கோபுரத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராக இருக்கும். இவை ஒவ்வொன்றும் ஆறு அடி ஆறு அங்குலம் கொண்ட ஓர் பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரண்டு கால்களுக்கும் அருகில் நதி இருந்ததால் சற்று ஆழமாக அடித்தளம் தோண்டப்பட்டு நிறுத்தப்பட்டது.

Image Courtesy

பிரெஞ்சுப் புரட்சி :

பிரெஞ்சுப் புரட்சி :

பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கான நுழைவு வாயிலாகவே இது அமைக்கப்பட்டது.

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே மிகவும் துல்லியமாக திட்டமிட்டு கட்டப்பட்ட இதன் கட்டுமானத்தின் போது ஒரேயொரு தொழிலாளி மட்டும் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் 20 ஆண்டுகள் வரை இந்த கோபுரத்தை அங்கே நிறுத்தி வைக்க அனுமதி பெறப்பட்டிருந்தது ஆனால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அப்படியே விட்டுவைக்க இன்று ஓர் வரலாற்றுச் சின்னமாக மாறிவிட்டது.

Image Courtesy

பனாமா கால்வாய் :

பனாமா கால்வாய் :

பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் இணைக்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாய் தான் இந்த பனாமா கால்வாய்.

சர்வதேச கடல் வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக இது இருக்கிறது. இக்கால்வாயில் கப்பல்கள் செல்லும் போது, நீர்மட்டத்தை கூட்ட குறைக்க வழி செய்யபட்டிருக்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய அதே சமயம் மிகக் கடுமையான பொறியியல் திட்டமென்றால் இந்த பனாமா கால்வாய் திட்டத்தை குறிப்பிடலாம்.

நவீன் உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

Image Courtesy

முதல் வெற்றி :

முதல் வெற்றி :

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் ஆங்கிலேய ஆட்சியின் போது, இந்தியாவே பெரும் பஞ்சத்தால் தத்தளித்தது. இந்த பஞ்சத்திலும் ஆங்கிலேயர்கள் வரி வசூலித்தனர். வரி விலக்கு கேட்டு மக்கள் போராட்ட ஆங்கில அரசு பணியவில்லை.

சில தினங்களில் காந்தி மற்றும் படேல் தலைமையில் போராட்டம் பெரிதாக வெடிக்கவே வரி ரத்து செய்யப்பட்டது.

விவசாயிகளின் ஆன்மா, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப்பிரதமராகவும் பதவியேற்று நவீன இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுதினம் இன்று.

கனவும் நனவும் :

கனவும் நனவும் :

அந்தச் சிறுவனுக்கு ஆரம்பத்திலிருந்தே ஓவியங்களின் மீது அலாதி ப்ரியம் இருந்தது, ஆனாலி இந்த சிறுவன் வரைந்த வித்யாசமான ஓவியங்கள் யாரையும் கவரவில்லை என்பதால் உனக்கு சரியாக படம் வரையவே தெரியவில்லை என்று பலரும் அவனை ஓரம் கட்டினார்கள்.

'இனி நான் வரையப்போகும் கார்ட்டூன் கதாபாத்திரம், உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்' என மனதில் சபதம் கொண்டான்.ஒரு நாள் தன் அறையில் அங்கும் இங்குமாக தாவித் திரியும் எலி, அவரது கவனத்துக்கு வந்தது. அதையே கார்ட்டூனாக வரைந்தார்.

கீழே வீழ்த்தும் தோல்வி :

கீழே வீழ்த்தும் தோல்வி :

தனது நண்பர், ஐவர்க்ஸுடன் சேர்ந்து 'மிக்கி மவுஸ்' கேரக்டரை உருவாக்கினார். அதற்குள் மனிதர்களின் குணங்களைப் புகுத்தினார். 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கார்டூன் கேரக்டர் இன்றைய குழந்தை வரை கவர்ந்திருக்கிறது.

உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.உங்களால் ஒன்றை கனவு காண முடியுமென்றால் அதை உங்களால் செய்யவும் முடியும் என்று சொல்லி தோல்வியிலிருந்து நம்பிக்கை பாடத்தை விதைத்த ரசனைக்காரன் வால்ட் டிஸ்னியின் நினைவு நாள் இன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse this day that year
    English summary

    This Day That Year December 15

    Historic Events in December 15
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more