For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜயராஜ் நாயுடு (எ) இந்தியாவின் சிறந்த குடிமகன் விஜயகாந்த்தின் உண்மை முகம்!

எந்தவொரு பின்புலமும் இன்றி சினிமாவில் அறிமுகமாகி, நல்ல நடிகன் என்பதையும் கடந்து, நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டிய விஜயகாந்தின் உண்மை முகம் இது.

|

இன்றைய இளம் பதின் வயதினருக்கு விஜயகாந்த் ஒரு மீம்ஸ் டெம்பிளேட். ஆனால், 80,90,2000-களில் வளர்ந்தவர்களுகு மட்டுமே தெரியும், ரஜினி, கமலுடன் ஈடுகொடுத்து திரைத்துறையில் தனக்கான தனி பாதை அமைத்து தனி ஆளாக தன்னை வெற்றி நாயகனாக நிலைநிறுத்திக் கொண்ட மாபெரும் நடிகன் விஜயகாந்த் என்று.

இன்று, கேலி கிண்டல்களின் மறு உருவமாக பார்க்கப்படும் விஜயகாந்த்-ன் உண்மை முகம் வேறு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அ. விஜயராஜ் நாயுடு, இது தான் கேப்டன் விஜயகாந்தின் இயற்பெயர். இது விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை அருகில் இருக்கும் ராமானுஜம் புறம் எனும் சிறிய ஊரில் பிறந்தவர்.

MOST READ: தொப்பையை சட்டென குறைக்க நெய்யை சாப்பிட்டாலே போதும்...! மேலும் பல நன்மைகள் உள்ளே...

#2

#2

இவரது சிறு வயது காலத்திலேயே குடும்பத்துடன் மதுரைக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இவர் வளர்ந்தது எல்லாம் மதுரையில் தான்.

#3

#3

சிறு வயது முதலே இவர் சினிமாவில் அதிக மோகம் கொண்டதால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தனது தந்தையின் மேற்பார்வையில் இயங்கி வந்த அரிசி மில்லில் வேலை செய்து வந்தார் விஜயகாந்த்.

#4

#4

ரஜினி, கமல், கார்த்தி போன்ற அன்றைய முன்னணி நடிகர்களுக்கு கூட அமையாது நூறாவது படம் வெற்றி படமாக மட்டுமின்றி வெள்ளி விழா படமாகவும் விஜயகாந்துக்கு மட்டுமே அமைந்தது.

#5

#5

விஜயகாந்த மற்றும் நளினி நடித்த அன்னை பூமி என்ற படம் தான் தமிழ் திரையுலகின் முதல் முப்பரிமான (3டி) படம்.

MOST READ: விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...

#6

#6

நடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பொது மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகள், ஏழை மாணவர்கள் படிப்புச் செலவு உன்று பல வழிகளில் பெரும் பொருள் உதவி செய்தவர் விஜயகாந்த்.

#7

#7

தமிழ்நாடு, தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் குஜராத் பூகம்பம், ஒரிஸ்ஸா புயல் என்று தேசிய அளவிலும் அவர் செய்துவரும் உதவிகள் ஏராளம். இதை பாராட்டி இந்திய அரசு சிறந்த இந்திய குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது. நடிகர்களில் இந்த விருதை வாங்கியே ஒரே தமிழர் விஜயகாந்த் தான்.

#8

#8

பாக்கியராஜ் நீண்ட நாள் கழித்து இயக்க - சொக்கத்தங்கம் மூலமும், சுந்தராஜன்-க்கு என் ஆசை மச்சான், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கிய முதல் படம் ஆனஸ்ட் ராஜ், விஜய், சூர்யா என இன்றைய முன்னணி நடிகர்களின் வெற்றி பயணம் துவங்க என பலருக்கும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவியவர் விஜயகாந்த்.

#9

#9

ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்நேரமும், யார் வந்தாலும், ஏற்றத்தாழ்வு இன்றி சமப்பந்தியில் உணவு வழங்கும் முறையை ஆரம்பித்து வைத்ததும் நம்ம கேப்டன் விஜயகாந்த்.

MOST READ: தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

#10

#10

தென்னிந்தியா நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இருந்தபோது, முதல் முறையாக வெளிநாட்டுக்கு நடிகர், நடிகர்களை அழைத்து சென்று நட்சத்திர கலைவிழா நடத்தி கடனை கட்டியது மட்டுமின்றி, சேமிப்பில் பணம் மிச்சமும் வைத்து சென்றார்.

உள்ளே ஒன்று வைத்து, வெளியே ஒன்று பேச தெரியாத அரசியல் வாதி. இவரது ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் குடிப்பழக்கம் இவரை ஒரு கேலி சித்திரமாக்கிவிட்டது. மீண்டும் இவர் மீண்டு வந்தால் நிச்சயம் நல்ல நிலையை அடைவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Real Face of Actor and Politician Vijaykanth!

The Real Face of Actor and Politician Vijaykanth!
Desktop Bottom Promotion