பணமும் அதிகாரமுமிருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? இதப்பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

நம்மை ஒடுக்க நினைக்கும் போதெல்லாம் அடக்க முடியாத பேரெழுச்சியாக வருவது தான் மக்களின் ஒரே குணம். இங்கல்ல உலகம் முழுவதும் இப்படியான சூழல் தான் நிழவுகிறது.

அரசாங்கம்... அரசாங்கத்தை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. பணமிருப்பவர்கள், அதிகாரமிருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களே கொஞ்சம் இவர்கள் செய்ததைப் பாருங்கள்.

பொதுவாக ஒன்றின் மேல் நமக்கு அன்பு இருக்கிறது, அதுவும் எனக்கானது என்று நீங்கள் நினைத்த ஒரு பொருள் என்றால் எச்சூழ்நிலை வந்தாலும் அதனை விட்டுத்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். நம்முடைய உறுதியெல்லாம் கொஞ்சம் அசைந்தாலும் இவர்களுடைய மன உறுதி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

மற்றவர்கள் அரசாங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து வழிவிட்டாலும் விடாமல் நின்ற சில தைரியசாலிகளின் சாட்சியை நிற்கும் சில சாட்சிகளின் தொகுப்பைத் தான் இப்போது நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

2009 ஆம் ஆண்டு ‘அப்' என்ற ஆங்கில அனிமேஷன் படம் வெளியாகி ஏகப்பிரபலமடைந்தது. 3டியில் வெளியான அந்தப் படம் குழந்தைகளின் ஆல் டைம் ஃபேவரைட் என்றே சொல்லலாம்.

இந்தக் கதை உண்மையிலேயே நடந்த சம்பவம். எடிச் மேசிஃபீல்ட் என்ற பெண்மணி வசித்த வீட்டினை சில பெருநிறுவனத்தினர் விலைக்கு கேட்டனர். இங்கே மிகப்பெரிய மல்டிகாம்லெக்ஸ் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். உங்கள் இடத்தை எங்களிடம் விற்று விட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

எடித் மறுத்து விட்டார், ஒரு மில்லியன் டாலர் வழங்குகிறோம் என்று சொல்லியும் எடித் வீடு விற்பதை ஏற்கவில்லை. இன்றைக்கும் மிகப்பெரிய மல்டி காம்லெக்ஸுக்கு நடுவில் மிகச்சிறிய எடித்தின் வீடு நின்று கொண்டிருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு எடித் தன்னுடைய 86 வது வயதில் காலமானார். தன்னுடைய கடைசி ஆசையாக சொன்னது. இந்த வீட்டை யாருக்கும் விற்று விடாதே என்பது தான்.

Image Courtesy

 #2

#2

பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பண முதலைகள் தங்களிடம் உள்ள பணத்தைக் காட்டி எதை வேண்டுமானாலும் விலை பேசிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மேரி குக்.

தன்னுடைய குடும்பத்தினர் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய மூன்று மாடி கட்டிடத்தை பெரிதாக நேசித்தார். காலப்போக்கி அந்த இடத்தையே சுற்றி வளைத்து வாங்கிய பெரு நிறுவனங்கள் மேரியின் வீட்டை அடையவும் பலவாறாக முயற்சித்தது ஆனால் எதுவும் ஈடேறவில்லை. இதோ இன்றைக்கு இரண்டு புத்தகங்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டிருக்கும் புளுவைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது மேரியின் வீடு!

Image Courtesy

#3

#3

இவர் அமெரிக்க அதிபருக்கு தண்ணி காட்டியவர்! நீ அதிபராக இருந்தாலும் பராவாயில்லை என்று அதிகாரத்திற்கு அடிபணியாத பெண்மணியின் வீட்டினை முதலில் பாப் குக்கியோன் என்கிற சூதாட்ட கிளப் விலைக்கு கேட்டது. மறுத்து விட்டார்.

அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வணிக வளாகம் கட்டுவதற்காக கேட்டனர் முடியவே முடியாது என்று விட்டார் தைரியசாலியான வெரா கோக்கிங்.

Image Courtesy

#4

#4

சீன அரசாங்கம் நெடுஞ்சாலை அமைப்பதற்காக சில பகுதியை ஆக்கிரமதித்தது. இதில் ஒரேயொரு வீட்டினர் மட்டும் தன் வீட்டை விட்டுக் கொடுக்க மறுக்க நெடுஞ்சாலையின் நடுவில் ஒரு வீடு தனித்து நிற்க சுற்றிலும் தார் ரோடுகள் பளபளக்கிறது.

இன்றைக்கு அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்றாலும்! அந்த வீட்டு ஓனரின் உறுதியை பறைசாற்றும் விதமாக நின்று கொண்டிருந்த வீடு சமீபத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது .

Image Courtesy

 #5

#5

குகான்சூ என்ற இடத்தில் சூற்றுப் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அரசங்கம் விலைபேசியது எல்லாரும் ஒப்புக் கொள்ள ஒரேயொரு அப்பார்ட்மெண்ட் மட்டும் மசியவில்லை.

இதோ அப்பாட்மெண்ட்டைச் சுற்றி பின்னப்பட்ட வளையம் போன்று சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#6

#6

பிரான்ஸ் நாட்டின் ரவுபெய்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் சலா அவுட்ஜெயினி இவருடைய வீட்டை விற்க மறுத்துவிட்டார். அப்பகுதியில் அவருடைய வீட்டைத் தவிர மற்ற எல்லா இடங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோதும் கூட மனிதர் அசாரமல் தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.

விலை பேசிய நிறுவனத்தில் தான் சலா சுமார் 45 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்திருக்கிறார் என்பது தான் இதில் ஹைலைட்!

Image Courtesy

#7

#7

ஆடம்பர வில்லா கட்டுவதற்காக பெரு நிறுவனம் ஒன்று ஒரு சுற்றுவட்டாரத்தையே வளைத்துப் போட இவர் மட்டும் உறுதியாக இருந்திருக்கிறார். சுற்றிலும் மாட மாளிகைகள் புல் தரை என்று அமர்கலப்படுத்த நடுவில் இவர் வீடு மட்டும் தனித்து நிற்கிறது.

இங்கே தனியாக நிற்கும் இந்த வீட்டின் மீதே தான் எல்லாருடைய பார்வையும்.

Image Courtesy

#8

#8

ஏழை விவசாயி தானே இவனால் என்ன செய்து விட முடியும் என்று தப்புகணக்கு போட்டவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறது இந்த விவசாயக் குடும்பம்.

நகரை மேம்படுத்துவதற்காக இந்த விவசாயக்குடும்பம் வாழ்ந்த வீட்டினையும் நிலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வளைத்துப் போட்டது அரசாங்கம். அக்கம் பக்கத்தில் வசித்த நூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் இடத்தை காலி செய்ய இந்த விவாசயக்குடும்பம் மட்டும் நகரவேயில்லை.

இப்பகுதியில் மூன்று தேசிய நெடுஞ்சாலை ஒன்றினைகிறது.

Image Courtesy

#9

#9

அப்பகுதியில் வசித்து வந்த 241 பேரும் வீட்டை விற்று விட்டு வெளியேற தனியொருத்தியாக வு பிங் என்ற பெண்மணி வீட்டை விட்டு வெளியேறாமல் போராடினார்.

சுமார் மூன்று வருடத்திற்கு பிறகு வேறு வழியின்றி வெளியேறினார்.

Image Courtesy

#10

#10

தனியார் டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஒன்று தன் கடையை விஸ்தரிப்பு செய்ய அப்பகுதியில் இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றாக வாங்க ஒரு வீட்டினர் மட்டும் இதற்கு உடன்படவில்லை.

நீண்ட கட்டிடத்தின் நடுவில் பிளந்து கொண்டு நிற்பது போல ஒரு வீடு மட்டும் தனித்து நிற்கிறது.

Image Courtesy

#11

#11

சின்ன சலூன் கடை தானே என்று நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் செய்த மாயம் இது. தன் கடையைச் சுற்றி பெரிய அப்பார்ட்மெண்ட் கட்ட தன் கடையை விற்கவில்லை ஒரு மாடி அளவுள்ள இவருடைய சலூன் கடையைச் சுற்றி மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#12

#12

சீனாவின் குன்மிங் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எல்லாரும் வெளியேறிய பிறகு ஒரேயொரு குடும்பத்தினர் மட்டும் வெளியேற வில்லை இறுதியாக அந்த வீட்டைச் சுற்றி சாக்கடை நீர் செல்லும் பாதை உடைத்து விடப்பட்டது.

வீட்டைச் சுற்றி சாக்கடை நீர் தேங்கி விட வேறு வழியின்று அவ்வீட்டினர் வெளியேறினர்.

Image Courtesy

#13

#13

ஷாங்காய் என்ற பகுதியில் இருக்கும் கவுங்ஃபுலி இடத்தில் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்காக பூர்வகுடிகளிடமிருந்து வீடு விலை பேசப்பட்டது. டவு வைரன் என்பவர் மட்டும் தன் வீட்டை விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. இன்றைக்கு அவர் வீட்டைச் சுற்றிலும் வானுயர கட்டிடங்கள் வளர்ந்து விட்டன.

Image Courtesy

#14

#14

ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திற்கு அருகில் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தை விற்க மறுத்து விட்டனர். அங்கே ஒரு பகுதி ரன் வே மட்டும் தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறை விமானம் பறந்து செல்லும் போதும் தரையிறங்குகிற போதும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல அதிருமாம்.

Image Courtesy

#15

#15

900 வருடங்கள் பழமையான தன்னுடைய கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியுடன் இருந்தவர்களை கலைக்க, அப்பகுதியில் ஆறு திசை மாறி விடப்பட்டது. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் வேறு வழியின்றி அவர்கள் வெளியேறினார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking story about stubborn house owners

Shocking story about stubborn house owners
Story first published: Monday, November 20, 2017, 17:51 [IST]