ரஜினியை பிச்சைகாரன் என எண்ணி பிச்சையிட்ட இளம் பெண் - சுவாரஸ்யமான நிகழ்வு!

Posted By:
Subscribe to Boldsky

ரஜினி, இந்தியாவின் பபெரிய சூப்பர்ஸ்டார் நடிகர். தான் யார், தனக்கு என்னென்ன தீயப் பழக்கங்கள் இருந்தன, எப்படி அவற்றில் இருந்து வெளியே வந்தேன் என வெளிப்படையாக பாராட்டும் மனிதர்.

சினிமா துறை என்று மட்டுமில்லாமல், பலதரப்பட்ட மனிதர்களால் எளிமையானவர் என புகழ்ந்து கூறப்படும் நபரான ரஜினியின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயல்பு!

இயல்பு!

கேமராவை விட்டு நகர்ந்து விட்டால், ரஜினிகாந்த் என்றுமே ஒரு எளிமையானவர் தான். நடுத்தர வாழ்க்கையில் வாழும் ஒரு நபர் எப்படி உடை உடுத்துவாரோ, பார்க்க எப்படி இருப்பாரோ அப்படி தான் ரஜினியும் இருப்பார்.

கோயில்!

கோயில்!

ரஜினி ஒருமுறை வெளி மாநிலத்தில் கோயிலுக்கு சென்ற போது, அவர் இதே போல மிகவும் எளிமையாக தென்பட்டுள்ளார். அவரை கோயில் வெளியே கண்ட ஒரு பெண் ரஜினியை பிச்சைக் காரன் என எண்ணியுள்ளார்.

பிச்சை!

பிச்சை!

உடனே, தன்னிடம் இருந்த பணத்தை ரஜினிக்கு பிச்சையாக கொடுத்துள்ளார். ரஜினியும் ஒன்றும் கூறாமல் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டாராம்.

கார் அருகே...

கார் அருகே...

கோயிலை வளாகத்தை விட்டு வெளியேறிய ரஜினி, அவரது காரில் ஏற முற்படும் போது.. மீண்டும் அதே பெண் ரஜினியை கண்டு, தனது தவறை உணர்ந்து ஓடிப்போய் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கடவுளின் பாடம்.

கடவுளின் பாடம்.

அதற்கு ரஜினி, இது ஒரு கடவுளின் பாடம். கடவுள் எப்போதுமே எனக்கு என்னுடைய நிலையை குறித்து பாடம் கற்பித்துக் கொண்டே இருப்பார். அப்படி தான் இதுவும். நான் இப்படி தான்... நான் பெரிய சூப்பர்ஸ்டார் எல்லாம் கிடையாது என கூறிவிட்டு நகர்ந்தாராம்.

எளிமை!

எளிமை!

பணம், புகழ் நம்மை சூழ்ந்துவிட்டால் தலை, கால் புரியாமல் ஆடுவார்கள். நான் தான் இந்த உலகத்திலேயே உயர்ந்தவன் என்ற எண்ணம் இயல்பாகவே அனைவருக்கும் வரும்.

ஏன் ரஜினிக்கே திரைக்கு வந்த புதிதில் இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால், மிக வேகமாக தன்னை எளிமைப்படுத்தி கொண்டது தான் ரஜினியின் சிறப்பு.

பாடல்!

பாடல்!

ரஜினியின் முத்து படத்தில் ஒரு பாடல் வரும், "கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன். கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அது தான் உனக்கு எஜமானன்.." இது வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு செல்லும் போது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

பணம் என்ற ஒற்றை போதைக்கு அடிமை ஆகிவிட்டால், உலகில் இருக்கும் எல்லா தீய போதைகளும் நம்மை சுற்றிக் கொள்ளும்.

வாழ்க்கை பாடம்.

வாழ்க்கை பாடம்.

இந்த நிகழ்வு ஒவ்வொருவரும் தனது வாழ்வில் எளிமை கடைப்பிடிக்கவும் மற்றும் எத்தனை உயரம் சென்றாலும் தலைகனம் கொள்ளாமல் வாழ அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடமாகவும் அமைந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Once Superstar Rajnikanth Was Mistaken for a Beggar!

Once Superstar Rajnikanth Was Mistaken for a Beggar!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter