ஊர் முழுக்க ஒரே பெண்ணை திருமணம் செய்து வாழும் அண்ணன், தம்பிகள்!

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதத்தில் தான் திரௌபதி அண்ணன், தம்பிகளை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம், படித்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு பகுதியில் பல கிராமங்களில் வாழும் அண்ணன் தம்பிகள், ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

இன்றளவும் இப்படி ஒரு பலதாரமணம் நடந்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. மோரேனா எனப்படும் இந்த கிராமம் மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது...

(இந்தியாவில் பலதாரமணம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கிய காரணம்!

முக்கிய காரணம்!

இந்த பகுதியில் வாழும் கிராம மக்கள், இப்படி ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லை என்பது தான்.

ஒரே வீட்டில் குவியும் மாப்பிளைகள்!

ஒரே வீட்டில் குவியும் மாப்பிளைகள்!

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால், ஒரு வீட்டில் ஒரு பெண் இருந்தால், அந்த வீட்டில் பல மாப்பிளைகள் இருப்பார்கள்.

எதுவாக இருந்தாலும், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ஆண்களை தான் திருமணம் செய்துக் கொள்கின்றனர். வெவேறு குடும்பத்து ஆண்களை திருமணம் செய்துக் கொள்வதில்லை.

சகோதர உரிமை!

சகோதர உரிமை!

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கூட்டி வந்தால். அந்த குடும்பத்தில் இருக்கும் சகோதரனுக்கு, அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் உரிமை உள்ளை.

ஆயினும் கூட சில குடும்பங்களில் ஒரு பெண், ஒரே ஆணை திருமணம் செய்துக் கொண்டவர்களும் இந்த கிராமத்தில் காணப்படுகின்றனர். அதே போல, 6-8 ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்களும் காணப்படுகின்றனர்.

பல கிராமங்கள்!

பல கிராமங்கள்!

மோரேனா எனும் இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் பல கிராமங்களில் இதே பாரம்பரிய சட்டமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தியாவின் இந்த மாடர்ன் சமூகத்திலும் கூட ஆண், பெண் எண்ணிக்கையில் பெரிய ஏற்றத்தாழ்வு காணப்படுவது தான் மிகப்பெரிய சோகம்.

துரதிர்ஷ்டம்!

துரதிர்ஷ்டம்!

ஏதோ பெண் குழந்தை பிறந்தாலே துரதிர்ஷ்டம் என்பது போன்ற பார்வை சமூகத்தில் காணப்பட்டு வருவதால் தான். இன்றளவும் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண், பெண் சதவிகிதத்தில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது.

மருமகள் தேடும் வீடுகள் கூட, தங்களுக்கு மகள் பிறக்க வேண்டும் என விரும்புவதில்லை.

மோரேனா மட்டுமல்ல...

மோரேனா மட்டுமல்ல...

மோரேனா மட்டுமல்ல, இந்தியாவில் இன்னும் பல இடங்களில் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்படுகிறது.

உத்தர்காண்ட்டில் ராஜோ வர்மா எனும் பெண் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

ஹிமாச்சல் பிரதேஷம்!

ஹிமாச்சல் பிரதேஷம்!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.

இவர்கள் மத்தியில் தொப்பி அணியும் பழக்கம் இருக்கிறது. யார் ஒருவர் அந்த பெண்ணுடன் இருக்கிறாரோ, அவர் தொப்பியை வீட்டின் வெளியே மாட்டி வைத்துவிட்டால், மற்றவர்கள் உள்ளே செல்ல மாட்டார்கள்.

தமிழகத்திலும்...

தமிழகத்திலும்...

தமிழகத்திலும் இப்படி ஒரு முறை பின்பற்றுப்பட்டு வருகிறது என உங்களுக்கு தெரியுமா? ஆம், நீலகிரியில் வாழ்ந்து வரும் ஒரு இன மக்கள் மத்தியில் இந்த வினோத வழக்கம் இருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால், இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Morena is a Place, Where Brothers Marrying Same Girl - A Bizzare Village in India!

Morena is a Place, Where Brothers Marrying Same Girl - A Bizzare Village in India!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter