For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பிரபல நடிகை போல முகம் பெற விரும்பி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அகோரமான இளம்பெண்!

  |
  Meet The Girl Who Tried To Look like Angelina Julie and Now Looks Like Zombie!

  பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வது இப்போது மேற்கத்திய நாடுகளில் பொதுமக்களிடமும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது . இதில், பார்பி டால் போல ஆகவேண்டும் என பலர் தங்கள் முகத்தை மட்டுமின்றி உடல்ந அமைப்பையும் மாற்றியுள்ளனர். சிலர் தங்கள் விலா எலும்புகளை நீக்கியும் அபாயகரமான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

  சில வாரங்களுக்கு முன்னர் நமது போல்ட்ஸ்கை தமிழில் கூட, பிரபலங்கள் போல முக தோற்றம் உருவாக்கிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கண்ட ரசிகர்கள் பற்றிய ஒரு கட்டுரை கண்டோம். இதில், லேட்டஸ்ட் அப்டேட்டாக இணைந்துள்ளவர் சஹார் தாபர் (Sahar Tabar) எனும் இளம்பெண்.

  இவருக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல முகத் தோற்றம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், அதன் விளைவாக அவர் பெற்றுள்ளது ஏஞ்சலினா ஜூலியின் முகத் தோற்றம் அல்ல. பார்க்க மிகவும் அகோரமான மாற்றம் கொண்டிருக்கிறார். பலரும் சமூக தளங்களில் இவரை ஜோம்பி என கூறிவருகிறார்கள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஜோம்பி!

  ஜோம்பி!

  விளையாட்டுகோம் கேலிக்கோ இப்படி சஹார் தாபரை இன்ஸ்டாகிராம் வாசிகள் கேலி செய்கிறார்களா? என அவரது இன்ஸ்டா முகவரிக்குள் சென்று பார்த்தால் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. காணும் அனைத்துப் படங்களிலும் அவர் ஜோம்பி போல தான் இருக்கிறார். இது அவர் செய்துக் கொண்டிருக்கும் மேக்கப்போ, போட்டோஷாப் ஃபில்ட்டர்களோ இல்லை. முற்றிலும் ஜோம்பி போல மாறியிருக்கும் அவரது தற்போதைய நிஜமான முகத்தின் தோற்றமே இப்படி தான் இருக்கிறது.

  என்னென்ன செய்திருக்கிறார்?

  என்னென்ன செய்திருக்கிறார்?

  சஹார் தாபர் ஏஞ்சலினா ஜூலி போன்ற முக தோற்றம் ஏற்படுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையில் நாற்பது கிலோ வரை குறைத்துள்ளார். மேலும், தனது முகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துள்ளார். இது அனைத்தும், அவர் ஏஞ்சலினா ஜூலி மீது கொண்ட ஈர்ப்பினாலான ஒற்றை காரணத்தால் மட்டுமே. ஆனால், சஹார் தாபருக்கு இது பயனளித்துள்ளதா என்று கேள்வி எழுப்பினால். இல்லை என்பதே நிதர்சனமான பதில்.

  இதற்கு ஒரு முடிவு இல்லையா?

  இதற்கு ஒரு முடிவு இல்லையா?

  சஹார் தாபர் இந்த ஐம்பது பிளாஸ்டிக் சர்ஜரிக்களுடன் நிறுத்திக் கொள்வார் என எதிர்பார்த்தால்... அங்கே தான் இவர் வைத்திருக்கிறார் ஒரு ட்விஸ்ட். தனக்கு திருப்தி அளிக்கும் வரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டே தான் இருப்பேன் என்கிறார். அதற்காக என்னவேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அதிர்ச்சியளிக்கும் வகையில் பதில் கூறுகிறார் சஹார் தாபர்.

  இன்டர்நெட்!

  இன்டர்நெட்!

  இப்படி பைத்தியக்காரத்தனமாக ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார். இவரை யார் ஏறெடுத்துப் பார்பார்கள் என யாரும் கருத வேண்டாம். இவரை 4.8 இலட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். சுமாராக தான் பதிவிடும் படங்களுக்கு நாற்பது, அம்பதாயிரம் ஹார்ட்டுகளையும், இரண்டு, மூன்றாயிரம் கமெண்ட்டுகளும் அள்ளுகிறார் சஹார் தாபர். இது போக இவர் பதிவிடும் வீடியோ பதிவுகள் அனைத்தும் மில்லியன் வியூஸ் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே, இவரை அறுபதாயிரம் பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அலங்காரம்!

  அலங்காரம்!

  சிலர் சஹார் தாபர் பிராஸ்தடிக் மேக்கப் மூலம் இப்படி ஒரு முகத்தைக் கொண்டிருக்கிறார் என்றும். இது வெறும் அலங்காரம் என்றும் கருதுகிறார்கள். ஆனால், சஹார் தாபர் எனும் இந்த 19 வயது இளம்பெண் உண்மையாகவே இந்த தோற்றத்திற்கு மாரியிருக்கிரார்க். இதுப் போன்ற செயலில் ஈடுபட்ட பலரும் சில வருடங்களிலேயே பல பக்கவிளைவுகளை கண்டு பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  வலிமையானவள்!

  வலிமையானவள்!

  பலரும் கமெண்டுகளில் இவரது இந்த செயல் முட்டாள்தனமானது என கூறுகிறார்கள். சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தன்னை குறித்து சஹார் தாபர் என்ன கூறுகிறார் தெரியுமா? "கடவுள் என்னுடன் இருக்கிறார். நான் மிகவும் வலிமையான பெண்" என கூறி வருகிறார்.. உண்மையாகவே வலிமையான பெண் என்றால், தனது தோற்றத்திலேயே அல்லவா இருந்திருக்க வேண்டும். வேறு நடிகையின் தோற்றம் பெற விரும்புவது என்ன வகையிலான வலிமை?

  சர்வே!

  சர்வே!

  2014ல் தி கார்டியன் எனும் இணையத்தில் வெளியான சர்வே ரிசல்ட்டில், ஆண்டுக்கு 2000 இளம் வயதினர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள முற்படுகிறார்கள். இவர்களில் 40% பேர் பெண்கள். இவர்களில் 8% பேர் மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின்னாலான தங்கள் முகம் மற்றும் உடல் தோற்றத்தை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என கூறியுள்ளனர். மற்ற 92% பேர் எதற்கு இதை செய்தோம் என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்து வருகிறோம்.

  பர்பெக்ட் பாடி!

  பர்பெக்ட் பாடி!

  பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள முன்வரும் அனைவரும் வைத்திருக்கும் ஒரு காரணம் தனக்கு பர்பெக்ட் பாடி வேண்டும் என்பதே ஆகும். அதற்கு அவர்கள் நல்ல டயட்டை பின்பற்றலாம். நன்கு உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், மெல்ல, மெல்ல சோம்பேறியாக மாறி வரும் நமது சமூகம் எதையும் நோகாமல் அடையவேண்டும் என்றே விரும்புகிறது. அதன் விளைவுகளில் இன்று தான் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி மோகம்.

  ஏன்? எதனால்?

  ஏன்? எதனால்?

  மனோதத்துவ நிபுணர்கள் சிலர், சஹார் தாபரின் இந்த நிலை தன்னம்பிக்கை இல்லாததன் அறிகுறி என்கிறார்கள். உலகிலேயே பெரியளவு தன்னம்பிக்கை கொண்டவன் யார் தெரியுமா? யார் ஒருவன் தன்னை தானே அழகானவன் என கருதுகிறானோ அவன் தான்.

  ஒருவனுள் தான் சிறந்தவன், அழகானவன் என்ற நம்பிக்கை இருந்தால் தான் எந்த செயலிலும் வெற்றிக் காண முடியும். இது போன்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகமாக மேக்கப் செய்துக் கொள்வதும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.

  பாடி ஷேம்!

  பாடி ஷேம்!

  ஆங்கிலத்தில் பாடி ஷேம் என ஒரு சொல் இருக்கிறது. அதாவது, ஒருவரை, அவரது உடல்வாகினை வைத்து கேலி, கிண்டல் செய்வதை பாடி ஷேம் என்பார்கள். இதை அனைவரும் கடந்து வர வேண்டும் என சாமானிய மக்களில் இருந்து பிரபலங்கள் வரை குரல் கொடுத்து வருகிறார்கள்.

  ஃபிகர்!

  ஃபிகர்!

  நமது முன்னோர்கள் கூறியது போல தான்... "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்". அழகு என்பது முகத்தை காட்டிலும், அகத்தில் இருக்க வேண்டும். நாமாக 36-24-36 என்ற ஃபிகரை வைத்துக் கொண்டு அதுதான் அழகென நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனித இன சமூகத்தின் பெரிய பாவச்செயல் ஒரு மனிதனின் உடல்வாகினை வைத்து நகைப்பது தான். இந்த ஃபிகர் எனும் வகைக்குள் அதிகமாக சிக்கிக் கொள்பவர்கள் பெண்கள் தான்.

  மெலினா டிரம்ப்!

  மெலினா டிரம்ப்!

  சஹார் தாபரின் இந்த செய்தி வெளியாகும் சில வாரங்களுக்கு முன்னர் தான் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர் மெலினா டிரம்ப் போல உடல் தோற்றம் வேண்டும் என 9 பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தந்த நாடுகளில் மற்ற நபரை போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள தடை சட்டம் கொண்டவந்தால் மட்டுமே இந்த கிறுக்குத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

  (படம்: பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முந்தைய சஹார் தாபரின் தோற்றம்)

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Meet The Girl Who Tried To Look like Angelina Julie and Now Looks Like Zombie!

  Sahar Tabar, Recent Instagram Sensation, Who Tried To Look like Angelina Julie and Now Looks Like Zombie!
  Story first published: Friday, December 1, 2017, 12:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more