இந்த வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோருக்கு ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை இருப்பதில்லை. இருப்பினும் நாம் எந்த ஒரு புதிய காரியத்தை செய்யும் முன்னரும், ஜோதிடர்களை சந்தித்து, நம் ராசி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம் ராசிக்குரிய இன்றைய பலன் என்ன தான் உள்ளது என்பதைக் காண்போம்.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானது அல்லது துரதிர்ஷ்டமானது என்று ஜோதிடர்கள் கூறுவதை தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து உங்களுக்கு இந்த வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ஷ்ட ராசிகள்

அதிர்ஷ்ட ராசிகள்

ஜோதிடர்களின் கணிப்புப்படி, 2017 ஆம் ஆண்டு துலாம், கும்பம், சிம்மம், மிதுனம், தனுசு மற்றும் கன்னி போன்ற ராசிக்காரர்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும். இதுவரை இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்திருக்கலாம். ஆனால் இந்த வருடம் சந்தோஷமாக அமையும்.

ஆரோக்கியம், திருமணம், தொழில் போன்ற அனைத்துமே சிறப்பாக இருக்கும். இந்த வருடத்தில் நீங்கள் இதுவரை மேற்கொள்ள நினைக்க பயந்த விஷயங்களை, கண்ணை மூடிக் கொண்டு மேற்கொள்ளலாம்.

துரதிர்ஷ்ட ராசிகள்

துரதிர்ஷ்ட ராசிகள்

விருச்சிகம், ரிஷபம், மீனம், கடகம், மகரம் மற்றும் மேஷம் போன்ற ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சற்று மோசமாகத் தான் இருக்கும். அதற்காக நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்.

மேலும் இந்த வருடத்தில் எந்த ஒரு புதிய விஷயத்தில் ஈடுபடவும் நினைக்காதீர்கள். 2017 ஆம் ஆண்டில் வாய்ப்புக்களை இழப்பீர்கள் மற்றும் உடல்நல உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். முக்கியமாக இந்த வருடம் எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் அளவுக்கு அதிகமான கவனத்துடன் இருக்க வேண்டும்.

கீழே வேறுசில சுவாரஸ்யமான மற்றும் அனைவரது மனதிலும் இருக்கும் சில கேள்விகளுக்கான ஜோதிடர்களின் பதில்கள் இதோ!

2017 யாருக்கு லாபகரமான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது?

2017 யாருக்கு லாபகரமான ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது?

1993, 1981, 1969, 2000, 1988, 1976, 1964, 1994, 1982 மற்றும் 1970 போன்ற வருடங்களில் பிறந்தவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானது.

யாரெல்லாம் தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது தொழிலில் வெற்றியைக் காணலாம்?

யாரெல்லாம் தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது தொழிலில் வெற்றியைக் காணலாம்?

1990, 1978, 1966, 1994, 1982, 1970, 1998, 1986, 1974 மற்றும் 1962 போன்ற வருடங்களில் பிறந்தவர்கள், இவ்வருடத்தில் சொந்தமாக தொழில் ஆரம்பிக்கலாம்.

இந்த வருடத்தில் யார் திருமணத்தை முடித்தாக வேண்டும்?

இந்த வருடத்தில் யார் திருமணத்தை முடித்தாக வேண்டும்?

1988, 1976, 1990, 1978, 1996, 1984 மற்றும் 1972 போன்ற வருடங்களில் பிறந்தவர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இவர்கள் இந்த வருடத்தில் திருமணத்தை முடிப்பது மிகவும் நல்லது.

உடல் நலத்தில் யார் அதிக அக்கறை காட்ட வேண்டும்?

உடல் நலத்தில் யார் அதிக அக்கறை காட்ட வேண்டும்?

2009, 1997, 1985, 1973, 1961, 2011, 1999, 1987, 1975, 1963, 2016, 2004, 1992, 1980 மற்றும் 1968 போன்ற வருடங்களில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know if your Zodiac Sign will be Lucky or Unlucky in 2017!

Want to know if your zodiac sign will be lucky or unlucky in 2017? Read on to know more...