இதுவும், இவாங்கா டிரம்ப் தானுங்கோ #FactCheck

Subscribe to Boldsky

ஒரு பிரபலத்திற்கு குழந்தையாக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பிரபலங்களின் பிள்ளைகளாக இருப்பது பெரும் பிரச்சனை. சாதாரணமாக ஒருவர் செய்யும் செயலுக்கும், இவர்கள் செய்யும் செயலுக்கும் மத்தியில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அது ஊடகத்தின் தாக்கமும், ஊராரின் கண்களும் தாக்கம்.

பொது மக்களில் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு இளைஞர் ஒருவருக்கு உதவுவது செய்திகளில் வராது. இதுவே ஒரு பிரபலத்தின் மகனாக / மகளாக இருந்து அதே உதவியை செய்தால் தேசிய அளவில் பெரும் செய்தியாகிவிடும். இது நல்ல செயல்களுக்கு. இதுவே, மது, விபத்து என எதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் அது வேற லெவலில் பூதாகரமாக வெடிக்கும்.

பிரபலங்களாக இருப்பது மட்டுமில்லை. பிரபலங்களின் குழந்தையாக இருப்பதும் பெரும் பிரச்சனை தான். இதை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரியில் தானே தோன்றி நடித்தும் இருக்கிறார் இவாங்கா டிரம்ப். இவாங்கா டிரம்பின் வாழ்க்கை இன்னும் ஒருபடி மேலே இருக்கிறது.

இவரது தந்தையான டொனால்ட் டிரம்ப் பிரபலம் மட்டுமல்ல, உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நபரும் கூட. இதில், இவர் அழகாகவும் இருக்கிறார். மாடலிங் வேறு செய்துள்ளார். டேட்டிங், காதல் என இவருக்கு பெரிய வாழ்க்கை வரலாறே இருக்கிறது. விக்கிபீடியா பக்கம், கூகிள் தேடல் என இவரை பற்றி அறிந்துக் கொள்ள பெரும் கூட்டமே இருக்கும்.

ஒரு அமெரிக்க தொழிலதிபரின் மகளாக பிறந்து, மாடலிங் துறையில் நுழைந்து, இப்போது உலகின் வல்லரசு நாட்டின் அதிபரின் மகளாக உலகில் உலா வந்துக் கொண்டிருக்கும் இவாங்கா டிரம்ப் பற்றி நாமும் நமது பங்குக்கு கொஞ்சம் தேடிய போது சிக்கிய சில உண்மை தகவல்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொகுப்பாளினி!

தொகுப்பாளினி!

தனது 15 வயதிலேயே மிஸ் டீன் யு.எஸ்.எ என்ற அழகிப் போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் இவாங்கா. அந்த நிகழ்ச்சியை தயாரித்தவர் இவரது தந்தை டொனால்ட் டிரம்ப் ஆவார்.

மாடலிங்!

மாடலிங்!

Elle மற்றும் Glamour நாளேடுகளுக்காக முதன் முறையாக மாடலிங் செய்ய துவங்கினார் இவாங்கா. தான் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து தொடர்ந்து உலகின் புகழ்பெற்ற Versace, Marc Bouwer மற்றும் Thierry Mugler ஃபேஷன் மேடைகளில் தோன்றவும் ஆரம்பித்தார் இவாங்கா. இவரது அம்மாவும் மாடலிங்கில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டைப்படங்கள்!

அட்டைப்படங்கள்!

முதல் முறையாக ஒரு இதழின் அட்டைப்படத்தில் தோன்றிய போது இவாங்காவின் வயது 17. 1997ல் இவாங்கா முதன் முறையாக அட்டைப்படத்தில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. Forbes, Golf Magazine, Avenue Magazine, Elle Mexico (அக்டோபர் 2007ல்) போன்ற மிகப்பெரிய மாத இதழ்களின் அட்டைப்படத்தில் இவாங்கா தோன்றியிருக்கிறார்.

Tommy Hilfiger மற்றும் Sassoon Jeans போன்ற உடைகளுக்கு இவாங்கா டிரம்ப் விளம்பர பிராச்சாரம் செய்துள்ளார்.

டாக்குமென்டரி!

டாக்குமென்டரி!

2003ம் ஆண்டு பார்ன் ரிச் என்ற டாக்குமென்டரியில் இவாங்கா நடித்திருந்தார். இந்த டாக்குமென்டரி, பணக்காரர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த குடும்பங்களில் குழந்தையாக பிறந்து வளரும் போது அந்த அனுபவம் எப்படியானதாக இருக்கும். என்னென ப்ளஸ், மைன்ஸ் எல்லாம் இருக்கிறது என்பது குறித்து உருவாக்கப்பட்டிருந்தது.

வேலை!

வேலை!

2005ல் இவாங்கா தனது தந்தையின் நிறுவனமான டிரம்ப் ஆர்கனைஷேஷனில் வேலை செய்ய துவங்கினார். பிறகு, 2006ல் டிரம்ப் ஆர்கனைஷேஷனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

சொந்த நிறுவனம்!

சொந்த நிறுவனம்!

2007ல் ஆன்லைன் நகை விற்பனை நிறுவனத்தை துவக்கினார் இவாங்கா. இவர் லைப்ஸ்டைல் பொருட்களான பர்ஃபியூம், காலணிகள், கைப்பை, உடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என பலவற்றை விற்பனை செய்து வந்தார்.

2009ல் தி டிரம்ப் கார்ட்: பிளேயிங் டூ வின் இன் வர்க் அன்ட் லைப் என்ற புத்தகத்தை எழுதி, தானே வெளியிட்டார்.

டேட்டிங்!

டேட்டிங்!

2006ம் ஆண்டிலேயே லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவருடன் குறுகிய கால டேட்டிங் உறவிலும், பிறகு 70s Show-ன் டாஃபர் கிரேஸ் என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார். மேலும், தி நியூயார்க் அப்சர்வர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான பிங்கோ குபெல்மன் மற்றும் ஜாரெட் குஷ்னர் எனும் இருவரையும் டேட் செய்துள்ளார் இவாங்கா டிரம்ப்.

ஹாட்டான பெண்!

ஹாட்டான பெண்!

ஹாட்டான பெண்மணி: 2007ம் ஆண்டு மேக்ஸிம் வெளியிட்ட உலகின் ஹாட் பெண்கள் 100பட்டியலில் இவாங்கா 83வது இடத்திலும். டாப் 99 பெண்கள் 2007 பட்டியலில் 99 இடத்தையும் பெற்றிருந்தார். மேலும், 2008ம் ஆண்டு ஆஸ்க்மென்.காம் வெளியிட்ட டாப் 100 பட்டியலில் 84வது இடத்தை பிடித்திருந்தார்.

திருமணம்!

திருமணம்!

20010 அக்டோபர் 25ம் நாள், இவாங்கா டிரம்ப் ஜாரெட் குஷ்னெர் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஜாரெட் குஷ்னெரின் தந்தை சார்லஸ் குஷ்னெர் தான் குஷ்னெர் பிராப்பர்டிஸ் நிறுவனத்தின் உரிமையாளர். ஜாரெட் குஷ்னெர் தி நியூயார்க் அப்சர்வர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

குழந்தை!

குழந்தை!

2011 ஜூலை மாதத்தில் இவாங்காவிற்கு முதல் மகள் பிறந்தது. அவருக்கு அரபல்லா ரோஸ் என பெயர் சூட்டினார்கள். ஏப்ரல் 2013 அன்று இவாங்கா இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் என டிரம்ப் செய்தியில் கூறியிருந்தார். அக்டோபர் 2013ல் இவாங்காவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஜோசப் ஃப்ரெட்ரிக் குஷ்னெர் என பெயர் சூட்டினர்.

தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இவாங்கா டிரம்பின் மொத்த சொத்து மதிப்பு 150 மில்லியன் டாலர்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Facts to know About Ivanka Trump, Daughter of the Most Influence Person of the World!

    Facts to know About Ivanka Trump, Daughter of the Most Influence Person of the World!
    Story first published: Thursday, November 30, 2017, 17:50 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more