வெள்ளை மாளிகை பற்றி நீங்கள் அறிந்திராத திகைக்க வைக்கும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky
வெள்ளை மாளிகை பற்றி நீங்கள் அறிந்திராத திகைக்க வைக்கும் உண்மைகள்!- வீடியோ

அமெரிக்க அதிபர்கள் / ஜனாதிபதிகள் தாங்கும் இடம் வெள்ளை மளிகை. முழுக்க வெள்ளை நிறம் பூசப்பட்ட இந்த வெள்ளை மாளிகை 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ளது. இது நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும்.

1812 யுத்தத்தின் போது, 1814-ல் வெள்ளில் மாளிகையின் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்திற்கு பிறகு, வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதுமே ஓசி இல்ல!

எதுமே ஓசி இல்ல!

என்ன தான் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் கூட, அதிபரோ, அதிபரின் குடும்பத்தை சேர்ந்தவர்களோ சாப்பிடுவதில் இருந்து, துணி துவைப்பது, டூத்பேஸ்ட், கழிவறை சோப்பு என அனைத்திற்கும் காசு கொடுக்க வேண்டும். ஏன் ஒருவேளை உணவு கூட இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அவருக்கான பில் அனுப்பப்படும். அதிபரின் ஆண்டு வருமானமான நான்கு இலட்சம் டாலர்களில் இருந்து இதற்கான பணம் பிடித்துக் கொள்வார்கள்.

பேய் பயம்!

பேய் பயம்!

வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவரது ஆவி அந்த வீட்டில் உலாவுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும். இந்த பேய் வீடு பயத்திற்கு வெள்ளை மாளிகை ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆம், வின்ஸ்டன், சர்ச்சில் லின்கனின் படுக்கை அறையில் தங்க மறுப்பு தெரிவித்தார். காரணம், அந்த அறையில் பேய் இருப்பதாக அவர் கருதினார். மேலும், குளியறையில் லின்கனின் ஆவி நிர்வாணமாக குளிப்பதை கண்டதாகவும் சிலரிடம் கூறியுள்ளார்.

பிரபலம்!

பிரபலம்!

வெள்ளை மாளிகைக்கு வாரத்திற்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள். வெள்ளை மாளிகைக்கு 65 ஆயிரம் கடிதங்கள் வருகிறது. ஏறத்தாழ 3,500 கால்கள் ரிசீவ் செய்கிறார்கள். 10,000 மின்னஞ்சல்கள், 1,000 ஃபேக்ஸ் வருகின்றன. ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து அந்த கடிதங்களுக்கு உரியவர் வெளியேறிவிட்டாலும் கூட, அந்த கடிதங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம்.

கட்டமைப்பு!

கட்டமைப்பு!

வெள்ளை மாளிகை பல வெளிநாட்டு வேலையாட்களின் உதவியோடு தான் கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள், ஸ்காட்லாந்து மக்கள், ஐரிஷ் மக்கள் என பல நாடுகளை மக்கள் மட்டுமின்றி, ஆப்ரிக்கா அமெரிக்க வாழ் அடிமைகளையும் வெள்ளை மாளிகையின் கட்டமைப்பில் உள்ளடைக்கியுள்ளனர். கட்டிட வேலையில் பணிசெய்தவர்களுக்கு ஊதியம் கொடுத்த கோப்புகளை எடுத்து பார்த்த போது, இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. வெள்ளை மாளிகை ஆர்கிடெக்ட்டான ஜேம்ஸ் ஹோபன் என்பவர், தனது சொந்த மூன்று அடிமைகளையும் இந்த கட்டுமான வேலையில் பணியமர்த்தியுள்ளார்.

பெயர்!

பெயர்!

வெள்ளை மாளிகை ஆரம்பத்தில் இருந்தே வெள்ளை மாளிகை என பெயர் கொண்டிருக்கவில்லை தியோடர் ரூஸ்வெல்ட்-க்கு முன்னர் வரை வெள்ளை மாளிகையை தி எக்சிகியூட்டிவ் மேன்சன் என்றே அழைத்து வந்துள்ளனர்.

ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

வெள்ளை மாளிகையை கட்டியவர்கள் அதிபர் ஒருவேளை உடல் ஊனமுற்றவராக இருந்தால், அதற்கு ஏற்ப எப்படி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என யோசிக்கவே இல்லை. ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அதிபரான பிறகு தான் அதற்கு ஏற்ப வெள்ளை மாளிகை முழுவதும் பல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சக்கர நாற்காலி மூலமாக வெள்ளை மாளிகை முழுவதும் சுற்றி வர அனைத்து அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட்டன. மேலும், ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் தனது சிகிச்சைக்காக உள்ளமைப்பு நீச்சல் குளம் ஒன்றும் அமைத்திருந்தார்.

கிளிண்டன்!

கிளிண்டன்!

ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார். கிளிண்டன் தனது பங்கிற்கு ஏழு பேர் அமரும் படியான ஹாட்-டப் ஒன்றும் அமைத்திருந்தாராம். முக்கியமாக, தன்னுடன் அருகே இருவர் அமர்ந்திருக்க வசதியாக அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

வெஸ்ட் விங்!

வெஸ்ட் விங்!

நாம் முன்னே கூறியது போல, வெள்ளை மாளிகையை எக்சிகியூட்டிவ் மேன்சனாக தான் கொண்டிருந்தனர். அப்போது டெட்டி ரூஸ்வெல்ட் தற்காலிகமாக வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளை தனித்தனியாக பிரித்துக் கொள்ள வெள்ளை மாளிகையுடன் வெஸ்ட் விங் என ஒரு கட்டிடம் கட்டினார். ஆரம்பக் காலத்தில் அது வெள்ளை மாளிகையுடன் இணைந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. அதிபராக வில்லியம் ஹோவர்ட் டஃப்ட் பொறுப்பேற்ற பிறகு தான் இணைக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

ட்வின்!

ட்வின்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை கட்டிய ஆர்கிடெக்ட் ஜேம்ஸ் ஹோபன் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் அயர்லாந்து பார்லிமென்ட் கட்டிடம் கட்டும் போது, வெள்ளை மாளிகையின் தழுவலுடன் தான் கட்டினார். இதனால், அயர்லாந்து பார்லிமென்ட்டான லின்ஸ்டர் ஹவுஸ்-ஐ வெள்ளை மாளிகையின் ட்வின் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

வசதிகள்!

வசதிகள்!

வெள்ளை மாளிகையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. எந்த ஒரு வேலைக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது. பூக்கடையில் இருந்து கார்பென்டர் ஷாப், பல் மருத்துவ அலுவலகம் என வெள்ளை மாளிகையில் சகல வசதிகளும் இருக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts To Know About White House!

Interesting Facts To Know About White House!
Story first published: Saturday, November 25, 2017, 10:40 [IST]