குளோபல் வார்மிங் கொடுக்கும், கடைசி வார்னிங் - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

குளோபல் வார்மிங்கி! சில நாட்களுக்கு முன்னர் கூட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குளோபல் வார்மிங் காரணமாக உலகின் பல்வேறு முக்கிய நகரங்கள் அழிவை சந்திக்கும் என கூறியிருந்தனர். அதில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் கொல்கட்டா போன்றவையும் அடங்கியுள்ளன.

இதுமட்டுமல்ல, உலகின் முக்கிய நகரங்களாக கருதப்படும், நியூயார்க், இஸ்தான்புல், சிட்னி, லண்டன் போன்ற பல நகரங்களும் இந்த குளோபல் வார்மிங் காரணத்தால் அழிவை சந்திக்கவுள்ளன.

இதற்காக எந்தெந்த நாடு, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன, அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களை எங்கே மாற்றி குடியமர்த்துவார்கள், அந்த பகுதிகளின் மூல தொழில் மற்றும் அதன் மூலம் ஈட்டும் வர்த்தக ரீத்யான பொருளாதாரத்தை எப்படி ஈடு செய்வார்கள் என்பதெல்லாம் பெரும் கேள்விக் குறியாக இருந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிரினம்!

உயிரினம்!

குளோபல் வார்மிங் காரணமாக ஆறில் ஒரு உயிரனம் மற்றும் தாவரங்கள் அழிவை சந்திக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள். கனெக்டிகட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆய்வின் ஆசிரியர் நம்மிடம் ஒரே சாயிஸ் தான் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் நாம் தஞ்சம் அடைய வேண்டும் என., கூறி எச்சரிக்கை செய்திருந்தார்.

வெப்பம்!

வெப்பம்!

கடந்த ஆகஸ்ட் 2014 தான் கடந்த 130 வருடங்களில் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமிகுந்த மாதமாக பதிவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகளவில் அந்த மாதத்தில் 0.70 டிகிரி வெப்பம் அதிகரித்திருந்தது என்ற தகவலையும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அப்பவே சொன்னவர்

அப்பவே சொன்னவர்

புதைபடிவ எரிபொருள் பயன்பாடு எதிர்காலத்தில் குளோபல் வார்மிங்கை உருவாக்கும். இது உலகின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர் ஸ்வாண்டே அர்ஹெனியஸ் 1896லேயே கூறியிருந்தார்.

அமெரிக்கர்கள்

அமெரிக்கர்கள்

நூற்றில் 37% அமெரிக்கர்கள் குளோபல் வார்மிங் என்பது கட்டுக்கதை என நம்பி வருகிறார்கள். அவர்கள் இப்படி எதுவும் நடக்காது. இதன் காரணத்தால் உலகிற்கு எந்த அழிவும் ஏற்படாது என கருதுகிறார்கள். மேலும், 64% அமெரிக்கர்கள் குளோபல் வார்மிங் தங்கள் வாழ்வை பெரிதும் பாதித்துவிடாது என நம்புகிறார்கள்.

கடல்மட்டம்

கடல்மட்டம்

1870ல் இருந்து கணக்கெடுத்து பார்த்ததில் கடலின் ஒட்டுமொத்த பரப்பளவில் 8 அங்குலம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் குளோபல் வார்மிங். உலகின் தென், வட துருவம் மற்றும் பனிப்பாறைகள், கிரீன்லாந்து போன்ற இடங்களில் இருக்கும் கிளேசியர்கள் அதிகளவில் உருகி வருவதே காரணியாக இருக்கிறது.

இதில், கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், அதவாது 1901 - 2010-க்கிடையான ஆண்டுகளில் மட்டுமே 7.4 அங்குலம் கடல் நீர்மட்டம் குளோபல் வார்மிங் காரணமாக அதிகரித்துள்ளது.

CO2

CO2

இன்று , தொழிற்சாலை, வாகனம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றால் காற்றில் கலக்கும் CO2வின் அளவு கடந்த 8 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் நமது வளிமண்டலம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

2100ல்

2100ல்

இப்படியே குளோபல் வார்மிங்கி தொடர்ந்து வந்தால் 2100ல் மின்னல்களின் தாக்குதல்கள் மற்றும் வெப்பம் ஐம்பது சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.

தொழிற்சாலை புரட்சியின் காரணமாக மட்டுமே, உலகின் 1.5 பாரன்ஹீட் முதல் 0.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இது குளோபல் வார்மிங் அதிகரிக்க ஓர் முக்கிய காரணியாக இருந்துள்ளது.

மார்ஸ்'ல்

மார்ஸ்'ல்

மார்ஸ்'ல் மனிதர்களை குடியேற்ற, அவர்கள் பூமியில் உள்ளது போன்ற உணர்விலேயே அங்கேயும் இருக்க, குளோபல் வார்மிங்கை அங்கே அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன தீவு

காணாமல் போன தீவு

2010ல் கொல்கட்டாவில் இருக்கும் ஜடவ்பூர்பல்கலைகழகம் வெளியிட்ட கடலாய்வு அறிக்கையில், குளோபல் வார்மிங் காரணமாக இந்தியா - வங்காள தேசத்திற்கு நடுவே இருந்த சிறிய தீவு முற்றிலுமாக மூழ்கிவிட்டது என தெரிவித்திருந்தனர். மேலும், இதே நிலை தொடரும் பட்சத்தில் 3.3 அடி வரை கடல்மட்டம் உயரலாம் என்றும். இப்படி உயர்ந்தால் 17% வங்காள தேசம் கடலில் மூழ்கிவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இரண்டு டிகிரி

இரண்டு டிகிரி

இன்னும் இரண்டு டிகிரி உலக வெப்பம் அதிகரித்தால் செண்டரல் பசிபிக் கடலில் இருக்கும் மார்ஷல் தீவுகள் முற்றிலும் அழிந்துவிடும் என கூறப்படுகிறது. இது ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் நடுவே அமைந்திருகிறது. இங்கே பல எரிமலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குளுமை

குளுமை

முந்தைய நூற்றாண்டுகளில் இருந்த குளிமையுடன் ஒப்பிட்டு பார்கையில், கடந்த 30 வருடங்களாக உலகின் பல இடங்களில் குளுமை குறைந்துள்ளது. இது வருடத்தின் அனைத்து மாதங்களுடனும் ஒப்பிட்டு பார்த்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்வே

நார்வே

எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டாலும், குளோபல் வார்மிங் அதிகரித்தாலும், மிக குறைந்த அளவில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நார்வே தான். குளோபல் வார்மிங் அதிகரித்தாலும், நார்வே கிளைமேட்டில் பெரியளவில் மாற்றம் ஏற்படாது என கூறப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

இன்று மனிதர்களுக்கு அதிகளவில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது இந்த குளோபல் வார்மிங் தான். நாம் அதிகம் வெளியிடும் வாகன புகை, தொழிற்சாலை புகை போன்றவை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், குளோபல் வார்மிங் காரணமாக சரும புற்றுநோய் அபாயமும் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

அண்டார்டிகா

அண்டார்டிகா

இன்னும் பலர் ஓசோன் லேயரில் விழுந்திருக்கும் ஓட்டையின் அளவு பற்றி பெரிதாக அறிந்திருப்பது இல்லை. பொதுவாக ஏதோ ஓட்டை என்று மட்டுமே கருதுகிறார்கள். குளோபல் வார்மிங் காரணமாக அண்டார்டிகா பகுதியின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் ஓசோன் லேயர் ஓட்டையானது, ஐரோப்பிய கண்டதை விட இருமடங்கு பெரியதாம்.

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

தொழிற்சாலை பெருமளவில் இருக்கும் வளர்ந்த, வளரும் நாடுகளின் தலைவர்களில், டொனால்ட் டிரம்ப் ஒருவர் மட்டும் தான், குளோபல் வார்மிங் மனிதர்களால் ஏற்பட்டதில்லை என கூறும் ஒரே தலைவர். இவர் மட்டுமே மனிதர்களுக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Global Warming Facts, Click Here to Read!

Global Warming Facts
Story first published: Saturday, November 18, 2017, 16:10 [IST]