விண்வெளியில் மாதவிடாய் வந்தால் விண்வெளி வீராங்கனைகள் என்ன செய்வாரகள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மாதவிடாய். மாதாமாதம் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று, அவர்கள் எத்தகைய சூழலில் இருந்தாலும் சரியாக மாதாமாதம் உதிரப்போக்கு வந்துவிடும்.

Do you know how female astronauts handle their menstruation

இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு உபாதைகளை சந்தித்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த சமூகம் மாதவிடாய் நேரத்தில் தீட்டு என்று சொல்லி ஒதுக்குவதும் என பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் விண்வெளிக்குச் செல்லும் பெண்கள் மாதவிடாய் வந்து விட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விண்வெளியில் மாதவிடாய் :

விண்வெளியில் மாதவிடாய் :

அமெரிக்காவைச் சேர்ந்த சாலி ரைட் என்ற அமெரிக்க பெண்மணி 1983 ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணமானார். அவருக்கு தேவையானவற்றை நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்த போது தான் விண்வெளியில் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.

அவருக்கு டேம்பூன் கொடுத்தனுப்பலாம். ஆனால் எத்தனை டேம்பூன்கள் கொடுப்பது? அவற்றை எப்படி அகற்றுவது? சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை டாம்பூன்கள் தேவைப்படும்.

Image Courtesy

வேறுபாடு :

வேறுபாடு :

பூமியில் இருப்பதற்கும் விண்வெளியில் மிதப்பதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. எலும்பு மற்றும் தசைகளின் இறுக்கத்தை குறைத்துவிடும். க்ரேவிட்டியும் இல்லாத மிதந்து கொண்டிருப்போம், எடை குறையும் என்று என்னென்னவோ செல்கிறார்கள். ஆனால் பெண்களுக்கான மாதவிடாய்?

பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது பெரிய பிரச்சனை கிடையாது. சிலர் தங்களின் தனிப்பட்ட விருப்பமாக விண்வெளியில் பீரியட்ஸ் ஆகக்கூடாது என்று விரும்புகிறார்கள்.

பயன்பாடு :

பயன்பாடு :

விண்வெளியில் மாதவிடாய் ஏற்ப்பட்ட சில சவால்களை அவர்கள் சந்திக்க நேரிடும். பயன்படுத்திய டேம்பூன் அல்லது பேட்களை முறையாக சேஃப் செய்ய வேண்டும். என்ன தான் அது கழிவுப் பொருளாக இருந்தாலும் இங்கே குப்பையில் போடுவது போல விண்வெளியில் போட முடியதல்லவா!

அதே போல தண்ணீர் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.

மாத்திரை :

மாத்திரை :

விண்வெளிக்குச் செல்லும் பெண் தனக்கு மாதவிடாய் வரக்கூடாது என்று நினைத்தால் தற்போது நடைமுறையில் இருப்பது மாத்திரை உட்கொள்வது. மாதவிடாய் நிறுத்துவதற்கு பூமியில் ஈஸ்ட்ரோஜென் மாத்திரை கொடுக்கப்படுகிறது.

இதனை வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கின் படி மூன்று வாரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நான்காவது வாரத்தில் உங்களுக்கு மாதவிடாய் வராது.

இதனை கணக்கில் கொண்டு பீரியட்ஸ் வருகின்ற தேதியறிந்து அவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாத்திரை சாப்பிடத்துவங்க வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு :

நீண்ட நாட்களுக்கு :

ஒரு மாதம் என்றால் சரி, இதே ஒரு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகள் விண்வெளியில் இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டால் என்ன செய்வார்கள்? கிட்டத்தட்ட 1100 மாத்திரைகள் தேவைப்படும். அவை வைப்பதற்கு அதன் எடை கணக்கிட வேண்டும்,

அதே போல மாத்திரை கவரினை என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். கடுகளவில் இருக்கும் மாத்திரைக்கே இந்த அக்கப்போர் என்றால் சானிட்டரி நாப்கின்களுக்கு சொல்லவே வேண்டாம்.

தீர்வு :

தீர்வு :

இதற்கு தீர்வு காணும் விதத்தில் லாங் ஆக்டிங் ரிவர்சிபிள் காண்ட்ரசெப்டிவ் (long-acting reversible contraceptive) என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது 99 சதவீதம் பலனளிக்க கூடியது என்று சொல்லப்படுகிறது.

மெல்லிய ப்ளாஸ்டிக் மற்றும் காப்பரினால் செய்யப்பட்ட கருவி ஒன்றை கர்பப்பையில் வைக்கிறார்கள். இதனால் கருமுட்டை உடைவது தவிர்க்கப்படுமாம். இதனால் மாதவிடாய் ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. இதனை மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை வைத்திருக்கலாம் என்கிறார்கள்.'

இக்கருவியை கர்பப்பையிலிருந்து நீக்கிவிட்டால் வழக்கமாக மாதவிடாய் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do you know how female astronauts handle their menstruation

Do you know how do female astronauts handle their menstruation in space