'அமைதி, அமைதி, அமைதியோ அமைதி...' ஷின்ஷான் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

"அமைதி, அமைதி.... அமைதியோ... அமைதி.... அமைதி... அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி...." ஷின்ஷானின் இந்த வசனம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மீம் கிரியேட்டர்களுக்கும் மிகவும் பிடித்தமானது. ஏறத்தாழ கடந்த ஓரிரு வாரமாக மீம்ஸ்களில் அதிகமாக டிரெண்டான டெம்ப்ளேட் இதுதான்.

ஷின்ஷான் என்றால் என்ன என்று தெரியாதவர்களையும் சென்றடைந்துள்ளது இந்த ஷின்ஷான் மீம்ஸ் டெம்ப்ளேட். அதிலும் சமந்தாவின் அழகு, அழகு... அழகோ அழகு.... அழகு... அழகு.... அழகுக்கெல்லாம் அழகு டெம்ப்ளேட் வேற லெவல் டிரெண்ட்.

சரி யாரிந்த ஷின்ஷான்? டாம் அண்ட் ஜெர்ரி, சோட்டா பீம் போல குழந்தைகளுக்கான இன்டர்நேஷனல் கார்டூன் கதாபாத்திரம் தான் இந்த ஷின்ஷான். ஏறத்தாழ உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகி வரும் கார்டூன் நாடகம் இது.

மீம்ஸ்களில் ஷின்ஷானை ரசித்தவர்களுக்கும், நான் மீசை வெச்ச குழந்தை என மார்தட்டி கொள்ளும் நபர்களுக்கும் மட்டுமே இந்த ஷின்ஷான் உண்மைகள். குழந்தைத்தனமாக தான் இருக்கும். பார்த்து பக்குவமா படிக்க பொறுமை இருந்தா... தாராளமா படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரளி!

புரளி!

ஷின்ஷான் என்பது ஒரு ஒரிஜினல் சிறுவன் என்றும். அவன் தனது தங்கையை கார் விபத்தில் இருந்து காப்பாற்ற உயிரிழந்தான் என்றும் சில தகவல்கள் சமூக தளங்களில் மிகையாக பரவி வந்தது. ஆனால், இதெல்லாம் செம்ம கப்சா, புருடா... சுத்தமான பொய்! பிக் பாஸ் ஆர்த்தி பாஷையில சொல்லணும்னா ஃபேக்கு... ஃபேக்கு... ஃபேக்கு... ஷின்ஷான் முழுக்க, முழுக்க ஒரு கற்பனை கதாப்பாத்திரம்.

சாக்கோ சிப்ஸ்!

சாக்கோ சிப்ஸ்!

ஷின்ஷான் கார்டூன் கதாபாத்திரத்திற்கு சாக்கோ சிப்ஸ் என்றால் கொள்ளை பிரியம். சாக்கோ சிப்ஸ்களை அதிகமாக விரும்பி சாப்பிடுவார். இந்த காரணத்தால் தான் ஷின் ஷானின் அம்மா, இவர் அதிகமாக சாக்கோ சிப்ஸ்களை சாப்பிடக் கூடாது என அவரது கண்ணில் படாதபடி ஒளித்து வைத்துவிடுவார்.

குடைமிளகாய்!

குடைமிளகாய்!

ஷின் ஷானுக்கு பிடிக்காத உணவு சிம்லா மிர்ச்சி (குடை மிளகாய்). எப்போதெல்லாம் ஷின் ஷான் குடைமிளகாயை காண்கிறானோ, அப்போதெல்லாம் அதை தூக்கி எறிய முயற்சி செய்து அம்மாவிடம் வசமாக மாட்டிக் கொள்வான்.

ஸ்கூல்!

ஸ்கூல்!

ஷின் ஷான் படிக்கும் பள்ளியின் பெயர் ஃபுடுபா கிண்டர்கார்டன் ஸ்கூல். அந்த பள்ளியின் அதிகமாக குறும்பு, சேட்டை, அதகளம் செய்யும் சிறுவன் ஷின் ஷான் தான். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரின்சிபாலுக்கு தொல்லை ஏற்படுத்துவதை மட்டுமே தனது அன்றாட வேலையாக கொண்டிருப்பான் ஷின் ஷான்.

பெண்கள்!

பெண்கள்!

ஷின் ஷானுக்கு தன்வயது ஒத்த பெண்களை பிடிக்காது. வல்லவன் சிம்பு போல தன்னைவிட பெரிய வயது பெண்களை தான் அதிகம் விரும்புவான் வாலுப்பயல் ஷின் ஷான். அதிகப்படியாக அவர்களுடன் நேரம் செலவழிக்க முயற்சிப்பான்.

கஸாமா!

கஸாமா!

நண்பர்களை தொல்லை செய்வதில் ஷின் ஷான் கில்லாடி. வேண்டுமென்றே அவர்களை தொல்லை செய்து வெறுப்பேற்றி குளிர் காய்வது ஷின் ஷானுக்கு பிடித்த விஷயம். அதிலும், தனது நண்பன் கஸாமாவை தொல்லை செய்வதில் ஷின் ஷானுக்கு அலாதியானது.

ஆடலும், பாடலும்!

ஆடலும், பாடலும்!

எப்போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறானோ, அப்போதெல்லாம் துள்ளிக் குதித்து ஆட்டம் போடுவான் ஷின்ஷான். கண்டபடி வெட்கமின்றி தைய்யதக்கவென குதிப்பதில் ஷின்ஷானை யாரும் அடித்துக் கொள்ள முடியாது.

அம்மாவா...

அம்மாவா...

வாலுத்தனம் மிகுந்த ஷின்ஷானுக்கு அம்மா என்றால் ரொம்பவே பயம். அதிலும், வசமாக மாட்டிக் கொண்டால், அவள் தரும் தண்டியனை தான் எண்ணி மிகவும் பயம் ஷின்ஷானுக்கு.

ஆக்ஷன் கமென்!

ஆக்ஷன் கமென்!

கார்டூன் கதாபாத்திரமான ஷின்ஷானுக்கு பிடித்த கார்டூன் கதாபாத்திரம் ஆக்ஷன் கமென். கமெனின் பெரிய ரசிகனான ஷின்ஷான் அவரது அனைத்து படங்களையும் கண்டுவிடுவான். அதிலும், கமெனின் விசித்திரமான சிரிப்புக்கு அடிமை ஷின்ஷான்.

தங்கச்சி!

தங்கச்சி!

அனைவரையும் தொல்லை செய்யும் ஷின்ஷானை தொல்லை செய்வது அவனது அனபெல்லா பேய் தங்கை ஹிம்வாரி.

மற்றவரை தொல்லை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரம் ஹிம்வாரியிடம் எப்படி தப்பிப்பது என்பது பற்றி யோசிக்கவே ஷின்ஷானுக்கு நேரம் சரியாக இருக்கும்.

யானை!

யானை!

ஷின்ஷானுக்கு விலங்குகள் போல உடை அணிந்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் பிடித்தமான செயல். அதிலும், யானை உடை அணிந்துக் கொள்ள கொள்ளை பிரியம் ஷின்ஷானுக்கு.

முதல் முறை!

முதல் முறை!

ஷின்ஷான் எனும் இந்த கார்டூன் நாடகம் இந்தியாவில் ஹங்காமா டிவியில் ஜூன் 19,2006ல் ஒளிபரப்பாக துவங்கியது. இதை இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்தனர். இவற்றில் ஷின்ஷான் அந்தந்த மொழி பாடல்களை பாடுவது போல டப் செய்திருந்தனர்.

சர்ச்சை!

சர்ச்சை!

ஷின்ஷான் கதாபாத்திரத்தின் செயல்கள், ஸ்டைல் மற்றும் குணாதிசயங்கள் தவறாக இருப்பதாகவும். இது குழந்தைகளை தவறான பாதையில் திசைத்திருப்பும் எனவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் அமைப்பு புகார் அளித்தனர்.

தடை!

தடை!

இந்த புகாரின் அடிப்படையில் இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த நாடகத்திற்கு அக்டோபர் 2008ல் ஆபாசங்களை காரணம் காட்டி தடை செய்ய உத்தரவிட்டது.

ரசிகர்கள்!

ரசிகர்கள்!

பிறகு ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி மறு பரிசீலனை செய்து பல காட்சிகளை சென்சார் செய்து மீண்டும் ஒளிபரப்ப மார்ச் 27, 2009ல் அனுமதி அளித்தது அமைச்சகம்.

மாற்றங்கள்!

மாற்றங்கள்!

அடல்ட் காமெடிகள் எல்லாம் குழந்தைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. உதாரணமாக ஆல்கஹால் என்ற வரும் வார்த்தைகள் ஜூஸ் என மாற்றப்பட்டன. அதே போல ஷின்ஷான் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் நீக்கினார்கள்.

இப்போது ஷின்ஷான் பல டிஜிட்டல் பிளாட்பார்ம்களில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crazy Shin Chan Facts!

Facts About Shin Chan That Every Crazy Fan Must Know,