கைது செய்து சிறையில் அடைக்கும் முன் எடுக்கப்பட்ட உலக பிரபலங்களின் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் நாட்டில் குடி போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி போலீஸில் சிக்கிய பிரபலங்கள். பிறகு டிமிக்கு கொடுத்து தப்ப்பித்த பிரபலங்கள் என பலரை நாம் பார்த்திருப்போம்.

இந்த வகையில் பாப், இசை, நடிப்பு, மாடலிங் என பலதுறை சேர்ந்த உலகளாவிய பிரபலங்கள் இப்படிப்பட்ட தவறுகளில் பிடிப்பட்டு சிறையில் அடைக்கும் முன் எடுக்கப்பட்ட Mugshot எனும் படங்களின் தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைகர் உட்ஸ்!

டைகர் உட்ஸ்!

இவர் டி.யு.ஐ (driving under the influence) குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது டைகர் தான் போதையில் இல்லை என அடம்பிடித்தார்.

ஆனால், இவர் மருந்துகளுடன் கலக்கப்பட்ட போதை உட்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ப்ளோரிடா போலீஸார் இவரது படத்தை வெளியிட்டனர்.

Image Courtesy :PALM BEACH COUNTY SHERIFF

ஜஸ்டின் பைபர்!

ஜஸ்டின் பைபர்!

2014ல் ஜனவரி 23 அன்று கைது செய்யப்பட்டார் ஜஸ்டின் பைவர். குடித்து விட்டு மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

மியாமி கடற்கரையில் ப்ளோரிடா போலீஸ் இவரது கைது செய்தனர். அப்போது இவருக்கு வயது வெறும் 19 தான்.

Image Courtesy:REUTERS

பில் காஸ்பி!

பில் காஸ்பி!

நடிகர் மற்றும் காமெடியன் ஆன பில் காஸ்பி 2004ல் கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மான்ட்கமரி மாவட்ட போலீஸ் இவரது படத்தை வெளியிட்டது.

Image Courtesy:MONTGOMERY COUNTY DISTRICT ATTORNEY

லிண்ட்சே லோகன்!

லிண்ட்சே லோகன்!

லிண்ட்சே லோகன் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 2007 - 2013வரை குடி, போதை, மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு என பலமுறை இவர் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy:REUTERS

ஹக் கிரான்ட்!

ஹக் கிரான்ட்!

இவர் 1995ல் கைது செய்யப்பட்டார். ஹாலிவுட் போலீஸ் இவரை பிடித்தது. லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் இவரது படத்தை வெளியிட்டனர்.

Image Courtesy:LOS ANGELES POLICE DEPARTMENT

ஜூனியர் ராபர்ட் டவுனி!

ஜூனியர் ராபர்ட் டவுனி!

2000த்தில் கல்வர் நகர போலீஸ் இவரை கைது செய்தனர். இவர் அப்போது கட்டுக்கடங்காத போதை நிலையில் இருந்ததாக கூறப்பட்டது.

Image Courtesy:LIAISON

மைக்கல் ஜாக்சன்!

மைக்கல் ஜாக்சன்!

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் 2003ல் இவர் கைது செய்யப்பட்டார். இவர் மூன்று மில்லியன் டாலர்கள் கொடுத்து பெயில் பெற்றார்.

Image Courtesy:SANTA BARBARA COUNTY SHERIFF

பாரிஸ் ஹில்டன்!

பாரிஸ் ஹில்டன்!

கொகைன் பயன்படுத்திய விவகாரத்தில் பாரிஸ் ஹில்டன் 2010ல் கைதானார். இவர் இதற்கு முன்னர் 2007ல் விதிமீறி வாகனம் ஓட்டியதற்காக வாகனம் ஓட்டும் உரிமை இரத்து செய்யப்பட்டது.

Image Courtesy:LAS VEGAS METROPOLITAN POLICE DEPARTMENT

மைக்கேல் ரோட்ரிக்ஸ்!

மைக்கேல் ரோட்ரிக்ஸ்!

இந்த நடிகையை 180 நாட்கள் சிறையில் அடைத்தனர். இவர் வாகனம் ஒட்டி ஒரு நபரை அடித்து தூக்கி தப்பித்து சென்றார். கலிபோர்னியா போலீஸ் இவரது படத்தை வெளியிட்டது.

Image Courtesy:LA COUNTY SHERIFF DEPARTMENT

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here are Nine Celebrity Mugshots that Caught our Attention and Some of them were in the News only Recently!

Here are Nine Celebrity Mugshots that Caught our Attention and Some of them were in the News only Recently!
Subscribe Newsletter