வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் ஆச்சரியமான நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலின் ஒருசில முக்கியப்பகுதிகளுக்கென தனித்தனியான நகைகள் உள்ளன. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளி நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் வெள்ளி நகைகள் அணிவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்ம புள்ளிகள்

வர்ம புள்ளிகள்

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

அழகு அதிகரிக்கிறது

அழகு அதிகரிக்கிறது

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மைகள் உண்டாகிறது.

கொலுசு மட்டும் ஏன் வெள்ளியில்?

கொலுசு மட்டும் ஏன் வெள்ளியில்?

அனைத்து நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், கொலுசை மட்டும் தங்கத்தில் அணிவதில்லை, அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்கத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால், அதனை காலில் அணியக்கூடாது என்பதால் தான். காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

ஆயுள் விருத்தி

ஆயுள் விருத்தி

வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொழுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of wearing silver jewellery

here are the some Benefits of wearing silver jewellery
Story first published: Saturday, September 9, 2017, 14:30 [IST]
Subscribe Newsletter