100 ஆண்டு மிகப் பழமையான கேக் ஒன்று அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!

Posted By:
Subscribe to Boldsky

எந்த பொருளுக்கும் முடிவு காலம் என்று ஒன்று உண்டு. அதற்கு பிறகு அதனை நாம் பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திடும். மற்ற பொருட்களுக்கே அப்படியென்றால் உணவுப் பொருட்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

பாக்கெட்டில் நிரப்பப்பட்டு வரும் உணவுகளை அவற்றின் எக்ஸ்பியரி தேதியை கடந்து பயன்படுத்துவது மிகவும் தவறானது. ஆனால் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இங்கே 100 ஆண்டுகளுக்கு முந்தைய உணவுப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
107 ஆண்டுகள்! :

107 ஆண்டுகள்! :

அண்டார்டிகாவில் உள்ள கேப் அடர் பகுதியில் நியூஸிலாந்தை சேர்ந்த அறக்கட்டளை ஒன்றின் சார்பாக கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ராபர்ட் ஃபால்கான் என்பவரது வீட்டில் ஆய்வு நடைப்பெற்றது. அங்கே தான் காகிதத்தில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு கேக் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 107 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட அந்த கேக் இப்போதும் சாப்பிடக்கூடிய நிலையில் இருந்தது தான் அதிசயம்!

Image Courtesy

பயணத்திற்கு ஸ்நாக்ஸ் :

பயணத்திற்கு ஸ்நாக்ஸ் :

ராபர்ட் 1910 ஆம் ஆண்டு டெர்ரா நோவா என்ற ஊருக்கு பயணம் சென்றுள்ளார். அந்த பயணத்தின் போது தான் இந்த கேக்கை வாங்கியிருக்கிறார். இந்த கேக் பிரிட்டிஷ் நாட்டின் ஹண்ட்லீ & பால்மர்ஸ் என்ற நிறுவனத்தினால் தயாரித்துள்ளது.

Image Courtesy

பாதுகாத்த தகரப் பெட்டி :

பாதுகாத்த தகரப் பெட்டி :

கடந்த 100 ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த அந்த வீட்டிற்குள் பல பொருட்கள் அழியும் நிலையில் இருந்துள்ளது, அதில் இருந்த ஒரு தகர பெட்டியினுள் இந்த கேக் காகிதத்தில் சுற்றிவைக்கப்பட்டு இருந்துள்ளது.

Image Courtesy

உண்ணும் நிலையில் :

உண்ணும் நிலையில் :

அது பார்ப்பதற்கு நேற்று தயாரித்த கேக் போன்று இருப்பதாய் கண்டு ஆச்சிரியப்பட்டோம். மேலும் அது உண்ணும் நிலையில் இருந்தது. அதில் இருந்து லேசாக கெட்டுப்போன வெண்ணெயை ஒத்த வாசனையும் வந்திருக்கிறது.

பல ஆண்டுகளாக அங்கு நிலவும் உறைநிலையும் அந்த தகர பேட்டியும் தான் அந்த கேக்கை காப்பாற்றியுள்ளது என்றே சொல்லலாம்.

அந்த கேக் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்திருக்கிறது.

Image Courtesy

கேக் என்ன சுவை?:

கேக் என்ன சுவை?:

107 ஆண்டுகள் பழமையான கேக் என்ன சுவையில் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த ஆய்வில் ஈடுப்பட்டவர்கள் ஆய்வின் போது கிடைக்கும் பொருட்களை சுவைக்ககூடாது என்பது ஒரு விதியாம்!!!!!

தற்போது அந்த வீடு சுற்றுலாதளமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே வைக்கப்பட்டிருக்கும் அந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்த கேக்கை பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Archaeologist found 100 years cake!

Archaeologist found 100 years cake!
Subscribe Newsletter