For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

46 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த பெண்! மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

மொராக்கோவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 46 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ளார் அவருடைய 75வது வயதில் பிரசவம் நடந்துள்ளது.

|

பெண்களின் கர்ப்பகாலம் என்பது குடும்பத்தில் உள்ள எல்லாருக்குமே ஒரு எமோஷனலான தருணம் என்றே சொல்லலாம். பல எதிர்ப்பார்ப்புகளை சுமந்து நிற்கும் பெண் ஒன்பது மாதங்கள் கழித்து பிறக்கப்போகும் குழந்தைக்காகவே பல இன்னல்களையும் உடல்வலியையும் தாங்கிக் கொள்ள பழகிவிடுகிறாள்.

பொதுவாக பெண்களின் கர்பக்காலம் ஒன்பது மாதங்கள். கர்ப்ப காலத்தை தாண்டி குழந்தை வயிற்றுக்குள் இருந்தால் ஆபத்து என்று எச்சரிக்கும் வேலையில் 46 ஆண்டுகளாக குழந்தை வயிற்றுக்குள்ளேயே இருந்துள்ளது!.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
46 ஆண்டுகள் :

46 ஆண்டுகள் :

மருத்துவ ரீதியில் எப்படி இது சாத்தியமாகும் என்று பலரும் யோசிப்பது தெரிகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக சான்றுகள் இருக்கிறது. அதை விட, இதே போல சுமார் 300க்கும் மேற்ப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் இது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஜாரா அபோடாலிப் என்பவர் தான் 46 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்திருக்கிறார்.

Image Courtesy

முதல் குழந்தை :

முதல் குழந்தை :

1955 ஆம் ஆண்டு ஜாராவிற்கு 26வயது ஆனபோது முதல் குழந்தை கர்ப்பமானார். அப்போதைய நடைமுறையின் படி மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது அதற்கு உண்டாகும் சில உடல்நலப்பிரச்சனைகள், வயிற்றிலிருக்கும் குழந்தை உதைப்பது போன்ற எல்லா அறிகுறிகளும் தெரிந்திருக்கிறது.

சிசேரியன் :

சிசேரியன் :

ஆனால் பிரசவ தேதி நெருங்க நிலைமை வேறு விதமாக மாறியது. லேசாக வலி ஆரம்பித்ததும் ஊரிலிருக்கும் பிரசவம் பார்க்கும் பெண்ணை அணுகியிருக்கிறார். சுமார் 48 மணி நேரங்கள் வலியால் துடித்தபோதும் குழந்தை வெளியே வரவில்லை. குழந்தை வெளியே வரவில்லை என்றதும் என்ன செய்வது என்று தெரியாது தவித்திருக்கிறார்.

வேறு வழியின்றி ஊரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாராவிற்கு சிசேரியன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

குழந்தையை மறந்த ஜாரா :

குழந்தையை மறந்த ஜாரா :

ஏற்கனவே சிசேரியன் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி அறிந்திருந்த ஜாரா அதற்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. அதை விட உயிருடன் நம்மை அறுப்பார்கள் என்று பயந்து மருத்துவமனையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சில நாட்கள் வலி இருந்திருக்கிறது. காலப்போக்கில் வலியும் மறைந்துவிட்டது. ஆனால் குழந்தை வரவில்லை.

வலியில்லை ஆனால் குழந்தை வரவில்லை என்பது மட்டும் தான் ஜாராவிற்கு தெரிந்திருந்தது. வயிற்றில் குழந்தை இறந்துவிட்டால் ரத்தப்போக்கு ஏற்படும் என்று நம்பிய ஜாராவிற்கு ரத்தப்போக்கு ஏதும் இல்லை வலியும் இல்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டார்.

Image Courtesy

வயிற்றுக்குள் தூங்கும் குழந்தை :

வயிற்றுக்குள் தூங்கும் குழந்தை :

அந்த காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தை தூங்கும் என்ற நம்பிக்கை மொராக்கோ மக்களிடையே அதிகளவில் இருந்தது. அதனால் அதே போல தன்னுடைய குழந்தையும் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

ஆண்டுகள் உருண்டோடியது. ஆனால் ஜாராவின் வயிற்றில் இருக்கும் குழந்தை மட்டும் முழிக்கவேயில்லை. காலப்போக்கில் அதனை மறந்துவிட்ட ஜாரா, இதற்கு பிறகு மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார் ஜாரா.

வயிற்று வலி :

வயிற்று வலி :

அந்த மூன்று குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைத்து இன்று பாட்டியும் ஆகிவிட்டார். தற்போது 75 வயதாகியுள்ள ஜாராவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்ப்பட்டது.

உடனடியாக மருத்துவரை அணுகிய ஜாராவின் வயிற்றைப் பார்த்து கர்ப்பப்பையில் கட்டியிருக்கும் என்றார் மருத்துவர். இருந்து அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்து பார்தபோது சரியாக கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதன் பின்னர் ரேடியோகிராபர் ஒருவரிடம் சென்று காண்பித்தபோது அவர் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார். அதில் தான் உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

மருத்துவ அதிசயம் :

மருத்துவ அதிசயம் :

இத்தனை ஆண்டுகாலமாக ஜாராவின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை அது. சுமார் 46 ஆண்டுகளாக வயிற்றுக்குள்ளேயே இருந்திருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் போது கரு கர்ப்பப்பையை விட்டு ஃபாலோபியன் டியூபிற்குள் வந்திருக்கும். அதனை சுகப்பிரசவம் நடப்பது மிகவும் சிரமமமானது. சிசேரியன் மூலமாகத்தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும்.

இது போன்ற சம்பவங்களில் கவனமாக இல்லாவிட்டால் தாயின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ஜாரா இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருந்தது அதிசயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Image Courtesy

46 ஆண்டுகள் கழித்து பிரசவம் :

46 ஆண்டுகள் கழித்து பிரசவம் :

உள்ளேயே இறந்த அந்த குழந்தை நாளுக்கு நாள் கட்டியாக உணவாக எடுத்துக் கொள்ளும் கால்சியம் அதிகம் உறிஞ்சப்பட்டு, இறந்த அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. இப்படி மாறவில்லையெனில் ஜாராவிற்கு நோய்த்தொற்று ஏற்பட்டு மரணம் கூட நிகழ்ந்திருக்கும்.

அதீத வலியால் துடித்த ஜாராவிற்கு இறுதியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் 75 வயதை நெருங்கிவிட்டாதல் இந்த அறுவைசிகிச்சை மேற்கொண்டால் மற்ற உறுப்புகளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா என்கிற அச்சமும் எழுந்தது.

எனினும் இதனை சவாலாக ஏற்றுக் கொண்ட மருத்துவர்கள் சுமார் 4 மணி நேரம் நடைப்பெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் அந்த கல் குழந்தையை அகற்றினர்.

தற்போது ஜாரா நலமுடன் உள்ளார்!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Woman gave birth her child after 46 years

A Woman gave birth her child after 46 years
Desktop Bottom Promotion